Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | அப்சிசிக் அமிலம் (Abscisic Acid - ABA) (இறுக்கநிலைத் தாவர ஹார்மோன்) (Stress Phytohormone) - தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள்

கண்டுபிடிப்பு, காணப்படும் இடங்கள், தாவரங்களில் இடப்பெயர்வு - அப்சிசிக் அமிலம் (Abscisic Acid - ABA) (இறுக்கநிலைத் தாவர ஹார்மோன்) (Stress Phytohormone) - தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள் | 11th Botany : Chapter 15 : Plant Growth and Development

   Posted On :  06.07.2022 01:01 pm

11 வது தாவரவியல் : அலகு 15 : தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்

அப்சிசிக் அமிலம் (Abscisic Acid - ABA) (இறுக்கநிலைத் தாவர ஹார்மோன்) (Stress Phytohormone) - தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள்

1963-ம் ஆண்டு அடிகாட் மற்றும் குழுவினர்கள் இளம் பருத்தி காய்களிலிருந்து முதன் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட ஹார்மோன்களுக்கு அப்சிசிக் அமிலம் II எனப் பெயரிட்டனர்.

அப்சிசிக் அமிலம் (Abscisic Acid - ABA) (இறுக்கநிலைத் தாவர ஹார்மோன்) (Stress Phytohormone)


1. கண்டுபிடிப்பு

1963-ம் ஆண்டு அடிகாட் மற்றும் குழுவினர்கள் இளம் பருத்தி காய்களிலிருந்து முதன் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட ஹார்மோன்களுக்கு அப்சிசிக் அமிலம் II எனப் பெயரிட்டனர். 1963-64-ல் உறக்கத்தை தூண்டும் பொருட்கள் பீட்டுலா எனும் இலையிலிருந்து ஈகிள்ஸ் மற்றும் வாரிங் என்பவர்களால் பிரித்தெடுக்கப்பட்டு டார்மின் என அழைக்கப்பட்டது. 1965-ல் கார்ன்ஸ்போர்த் மற்றும் குழுவினரால் டார்மின் மற்றும் அப்சிசின் II ஆகிய இரண்டும் ஒத்த அமைப்புடைய சேர்மம் என தெரிய வந்தது. இந்தச் சேர்மமே தற்பொழுது அப்சிசிக் அமிலம் என அழைக்கப்படுகிறது.

2. காணப்படும் இடங்கள்

பசுங்கணிகங்கள் கொண்ட அனைத்து தாவர செல்களிலும் அதிக அளவு இந்த ஹார்மோன் காணப்படுகிறது.

3. முன்னோடிப் பொருள்

மெவலோனிக் அமிலம் அல்லது சாந்தோஃபில் வழிப்பாதை மூலம் இந்த ஹார்மோன்கள் உற்பத்தியாகிறது. உயர் தாவரங்களில் டெர்பினாய்டு உற்பத்தி வழிப்பாதை மூலம் ABA உற்பத்தி நிகழ்கிறது

4. தாவரங்களில் இடப்பெயர்வு

சைலம், ஃபுளோயம் ஆகிய இரண்டின் வழியாகவும் அப்சிசிக் அமிலம் கடத்தப்படுகிறது. இது தண்டியிலிருந்து வேர்த் தொகுப்பை நோக்கி அதிக அளவில் ஃபுளோயம் திசு வழியாகவும், வேரிலிருந்து தண்டை நோக்கி குறைந்த அளவில் சைலத்தின் வழியாகவும் இடம்பெயர்கிறது.

5. வேதி அமைப்பு

கரோட்டினாய்டு மூலக்கூறு அமைப்பை உடைய வேதிச் சேர்மம் ஆகும்.

6. உயிர் ஆய்ந்தறிதல் (நெல் முளைக்குருத்து உறை (Rice Coleoptile)) நெல்லில் முளைக்குருத்து உறை நீட்சியடைதலை IAA வை தடை செய்வதால் கண்டறியப்பட்டுள்ளது.

7. வாழ்வியல் விளைவுகள்

• இலைத்துளைகள் மூடுவதின் மூலம் இது நீராவி போக்கின் அளவை குறைக்கிறது.

 ABA என்பது வீரியமிக்க வளர்ச்சி அடக்கி ஆகும். ஓட்ஸ் தாவர முளைக்குருத்து உறையின் நீட்சியடைதலை 50% ஆக குறைக்கிறது.

 மொட்டு மற்றும் விதை உறக்கத்தை தூண்டுகிறது

• இலைகள், மலர்கள், கனிகள் ஆகியவற்றில் உதிர்தல் அடுக்கு உருவாக்கி உதிர்தலை தூண்டுகிறது.

 நீர் இறுக்கம் மற்றும் வளர்ச்சி காலங்களில் ABA தாவரங்களில் விறைப்பழுத்தத்தை குறைத்து இலைத்துளையை மூடச்செய்கிறது.

 கன்னாபிஸ் சட்டைவாவின் பெண் தாவரத்தில் ஆண் மலர்களை தோற்றுவிக்கிறது.

 உருளைக்கிழங்கு போன்ற சேமிப்பு உறுப்புகளில் முளைத்தலைத் தூண்டுகிறது.

 

 இக்காலத்தில் தண்டுத்தொகுப்பு வளர்ச்சியைக் குறைத்து வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. இப்பண்புகள் தாவரத்திற்கு பெரிதும் உதவுகிறது. எனவே ABA ஒரு சிறந்த இறுக்கநிலைத் தாவர ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.


Tags : Discovery, Occurrence, Transport, Physiological Effects, Agricultural role கண்டுபிடிப்பு, காணப்படும் இடங்கள், தாவரங்களில் இடப்பெயர்வு.
11th Botany : Chapter 15 : Plant Growth and Development : Abscisic Acid (ABA) (Stress Phyto Hormone) - Natural Plant Growth Regulators (PGRs) Discovery, Occurrence, Transport, Physiological Effects, Agricultural role in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 15 : தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் : அப்சிசிக் அமிலம் (Abscisic Acid - ABA) (இறுக்கநிலைத் தாவர ஹார்மோன்) (Stress Phytohormone) - தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள் - கண்டுபிடிப்பு, காணப்படும் இடங்கள், தாவரங்களில் இடப்பெயர்வு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 15 : தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்