Home | 2 ஆம் வகுப்பு | 2வது கணிதம் | 99 வரை உள்ள எண்களை மறுகுழுவாக்கம் செய்து கூட்டல்

எண்கள் | பருவம்-2 அலகு 2 | 2வது கணக்கு - 99 வரை உள்ள எண்களை மறுகுழுவாக்கம் செய்து கூட்டல் | 2nd Maths : Term 2 Unit 2 : Numbers

   Posted On :  03.05.2022 12:13 am

2வது கணக்கு : பருவம்-2 அலகு 2 : எண்கள்

99 வரை உள்ள எண்களை மறுகுழுவாக்கம் செய்து கூட்டல்

பின்வரும் ஈரிலக்க எண்களைக் கூட்டி அவற்றின் கூடுதலை ஆணி மணிச்சட்டத்தில் சரிபார்க்க.

99 வரை உள்ள எண்களை மறுகுழுவாக்கம் செய்து கூட்டல்

 

நினைவு கூர்தல்

பின்வரும் ஈரிலக்க எண்களைக் கூட்டி அவற்றின் கூடுதலை ஆணி மணிச்சட்டத்தில் சரிபார்க்க.


i) 33 + 41 = 74

ii) 52 + 27 = 79

iii) 63 + 24 = 87

iv) 44 + 33 = 77

v) 35 + 23 = 58

vi) 32 + 27 = 59

 

பயணம் செய்வோம்

ஊதுஎடு மற்றும் கூட்டுக

அகரன்குறளினிஏழிசை மற்றும் அகிலன் ஆகியோர் ஊதுஎடு மற்றும் கூட்டுகஎன்ற விளையாட்டைப் புளியங்கொட்டைகளைக் கொண்டு 2 குழுக்களாக விளையாடினர்.

ஒவ்வொருவரும் மூன்று வாய்ப்புகள் விளையாடினர். அவர்கள் குவியலிலிருந்து ஊதி பிரித்தெடுத்து புளியங்கொட்டைகளைச் சேகரித்தனர். அவ்வாறு சேகரிக்கும் பொழுது அவர் வேறு புளியங்கொட்டையைத் தொட்டுவிட்டால் வாய்ப்பு அடுத்தவருக்கு வழங்கப்படும். ஒவ்வொரு வாய்ப்பின் இறுதியிலும் அவர்கள் புளியங்கொட்டைகளை எண்ணினர்.


அவர்கள் எடுத்த புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


குழுவினர் எடுத்த மொத்தப் புளியங்கொட்டைகளின் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றி பெற்ற குழுவினை முடிவு செய்தனர்.

 

கற்றல்

மணிகளைக் கொண்டு கூடுதலைக் காண்க.

முதல் வாய்ப்பில் குழு அ எடுத்த மொத்தக் கொட்டைகளின் எண்ணிக்கை யாது?

குழு அ -வில் அகரன் மற்றும் குறளினி என இருவர் உள்ளனர். அட்டவணையிலிருந்து வாய்ப்பு 1 ஐப் பார்க்கும்போது அவர்கள் சேகரித்த புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை 15 மற்றும் 9 ஆகும். எனவே, 15 + 9 இன் கூடுதலை முதலில் மணிகளைக் கொண்டும் பின்பு கூடுதல் முறைமையைக் கொண்டும் காண்போம்.

கீழே காண்பிக்கப்பட்டதுபோல் 15 புளியங்கொட்டைகளையும், 9 புளியங்கொட்டைகளையும் எடுத்துக் கொள்ளவும்.




புளியங்கொட்டைகளை ஒன்றுகளாகவும், பத்துகளாகவும் பிரிக்கவும். 15 புளியங்கொட்டைகளை 1 பத்தாகவும், 5 ஒன்றுகளாகவும் பிரிக்கவும். 9 புளியங்கொட்டைகளை 9 ஒன்றுகளாகவும் கொள்ளவும்.

படி 1: ஒன்றுகளைக் கூட்டுக.

ஒன்றுகளைக் கூட்டினால் 14 ஒன்றுகள் கிடைக்கும்.



படி 2 : ஒன்றுகளைப் பத்துகளாக்குதல்

ஒன்றுகளைப் பத்துகளாக்கினால் பத்து + 4 ஒன்றுகள் கிடைக்கும். எனவே 4 ஐ ஒன்றுகளுக்கு நேராக எழுதி 1 பபிதா ஐப்பத்துகள் இடத்தில் சேர்க்கவும்.



படி 3 : பத்துகளைக் கூட்டவும்.



குழு – அ வாய்ப்பு 1-இல் சேகரித்த மொத்தப் புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை 24.

 

கற்றல்

ஆணி மணிச் சட்டத்தைக் கொண்டு கூடுதல் காண்க.

முதல் வாய்ப்பில் குழு '' எடுத்த மொத்தக் கொட்டைகளின் எண்ணிக்கை யாது? குழு ஆ-வில் ஏழிசை மற்றும் அகிலன் என இருவர் உள்ளனர். முதல் வாய்ப்பில் அவர்கள் முறையே 14 மற்றும் 16 புளியங்கொட்டைகள் சேகரித்தனர். ஆணி மணிச் சட்டத்தைக் கொண்டு 14 + 16 ஐ கூட்டலாம். பின்பு கூடுதல் முறையைப் பயன்படுத்தலாம். முதலில் ஆணி மணிச் சட்டத்தில் 14 மணிகளைப் போடுவோம். அதனுடன் 16 மணிகளைச் சேர்ப்போம்.



படி 1: ஒன்றுகளைக் கூட்டுக.

ஒன்றுகளைக் கூட்டினால் 10 ஒன்றுகள் கிடைக்கிறது.



படி 2 : ஒன்றுகளைப் பத்துகளாக்குதல்

ஒன்றுகளைச் சேர்த்தால் 1 பத்து கிடைக்கிறதுஎனவே ஒன்றுகளுக்கு நேராக 0 வையும் பத்துகளின் மேலாக 1 பத்தையும் சேர்க்க.



படி 3:  பத்துகளைக் கூட்டுக.



மொத்தமாகச் சேர்த்தால் குழு ஆ முதல் வாய்ப்பில் 30 புளியங்கொட்டைகள் சேகரித்துள்ளனர்.

 

பயிற்சி

i) வாய்ப்பு 2 இல் வெற்றி பெற்ற குழுவை கண்டறிக.



குழு அ : 33 + 37 = 70

குழு ஆ : 23 + 38 = 61

வாய்ப்பு 2 இல் வெற்றி பெற்ற குழு 

ii) வாய்ப்பு 3இல் வெற்றி பெற்ற குழுவைக் கண்டறிக.


குழு அ : 11 + 1+ 10 34

குழு ஆ : 12 + 12 + 11 35

வாய்ப்பு 3 இல் வெற்றி பெற்ற குழு 

iii) அகரன் மற்றும் அகிலன் இருவரும் தனித்தனியாகச் சேகரித்த மொத்தப் புளியங்கொட்டைகள் எத்தனை?



அகரன் : 15 + 33 + 29 = 77

அகிலன் : 16 + 38 + 37 = 91

அகரன் சேகரித்த மொத்தப் புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை 77

அகிலன் சேகரித்த மொத்தப் புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை 91

 

முயற்சி செய்க

i) ஊதுஎடு மற்றும் கூட்டு விளையாட்டின் அட்டவணையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள எண் கூற்றுக்கு ஏற்ற கேள்வியை அமைக்க.

i) 33 + 37 = 70

அகரன் 33 புளியங்கொட்டைகளைச் சேகரித்தான்.

குறளினி 37 புளியங்கொட்டைகளைச் சேகரித்தாள்.

இருவரும் சேர்ந்து சேகரித்த மொத்தப் புளியங்கொட்டைகளின் எண்ணிக்கை என்ன?

ii) 26 + 37 = 63


ஏழிசை 26 விதைகளை சேகரித்தார்.

அகிலன் 37 விதைகளை சேகரித்தார்.

இருவரும் சேகரித்த விதைகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும்.


ii) கீழே உள்ள எண்களைக் கூட்டுக.


 

மகிழ்ச்சி நேரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள விடுபட்ட கட்டங்களை நிரப்புக.


 

மனக் கணக்கு

1. ஒரு காய்கறி வனிகர் முதல் நாளில் 72 பூக்கோசுகளையும், இரண்டாம் நாளில் 18 பூக்கோசுகளையும் மூட்டை கட்டினார். எனில், இரண்டு நாள்களிலும் மொத்தம் எத்தனை பூக்கோசுகளை மூட்டை கட்டினார்?

விடை :


72 + 18 = 90 பூக்கோசுகள்

2. வயலின் ஒரு பக்கத்தில் சுஜாதா 24 மாமரங்களையும், பபிதா மற்றொரு பக்கத்தில் 36 மாமரங்களையும் எண்ணினர் எனில் மொத்தம் உள்ள மாமரங்கள் எத்தனை?

விடை :


24 + 36 = 60 மாமரங்கள்

3. ஒரு பனிக்கூழ் விற்பனையாளர் திங்கள்கிழமை 28 பனிக்கூழ்களையும் செவ்வாய்க்கிழமை 53 பனிக்கூழ்களையும் விற்றார் எனில், அவர் இரண்டு நாட்களிலும் விற்ற மொத்தப் பனிக்கூழ்களின் எண்ணிக்கை யாது?

விடை :


28 + 53 = 81 பனிக்கூழ்கள்

4. ஆசிரியர் முதல் நாளில் 12 குறிப்பேடுகளைத் திருத்துகிறார். இரண்டாம் நாளில் 18 குறிப்பேடுகளைத் திருத்துகிறார் எனில், இரண்டு நாட்களில் அவர் திருத்திய மொத்த குறிப்பேடுகள் எத்தனை?

விடை :


12 + 18 = 30 குறிப்பேடுகள்

5. பிந்துவின் தந்தை காலையில் 28 எலுமிச்சைகளையும் மாலையில் 15 எலுமிச்சைகளையும் பறித்தார் எனில், அவர் பறித்த மொத்த எலுமிச்சைகளின் எண்ணிக்கை எத்தனை?

விடை :


28 + 15 = 43 எலுமிச்சைகள்

 

நீயும் கணிதமேதை தான்

எண் புதிர்


ஒவ்வொரு நேர்க்கோட்டிலும் உள்ள 3 எண்களின் கூட்டுத்தொகை ஒன்றாக அமையுமாறு வட்டத்தில், 11, 12, 13, 14, 15, 16, 17 ஆகிய எண்களை நிரப்புங்கள்.

 

மகிழ்ச்சி நேரம்

(i) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூட்டல் கூற்றுகளின் விடுபட்ட எண்களை எழுதுக.



(ii) ராகுல்தங்கள் கடையில் வாரத்தின் முதல் மூன்று நாட்களில் நடந்த விற்பனையைக் கண்காணிப்பதற்காக விற்பனைப் பதிவேட்டைத் தன் தந்தையிடம் கொடுக்கிறார்.


மேற்கண்ட பதிவுகளைக் கொண்டு கட்டங்களில் தகவலை நிரப்பிக் குறிப்பிட்ட நாளில் புடவைகளின் விற்பனை எண்ணிக்கையைக் கண்டறிக.



விடை :

திங்கள் 15 + 10 + 20 = 45

செவ்வாய் 25 + 12 + 14 = 51

புதன் 30 + 13 + 35 = 78

 

Tags : Numbers | Term 2 Chapter 2 | 2nd Maths எண்கள் | பருவம்-2 அலகு 2 | 2வது கணக்கு.
2nd Maths : Term 2 Unit 2 : Numbers : Addition upto 99 with regrouping Numbers | Term 2 Chapter 2 | 2nd Maths in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது கணக்கு : பருவம்-2 அலகு 2 : எண்கள் : 99 வரை உள்ள எண்களை மறுகுழுவாக்கம் செய்து கூட்டல் - எண்கள் | பருவம்-2 அலகு 2 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது கணக்கு : பருவம்-2 அலகு 2 : எண்கள்