அறிமுகம் – முற்றொருமைகள் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - இயற்கணிதம் | 7th Maths : Term 3 Unit 3 : Algebra

   Posted On :  09.07.2022 12:48 am

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்

இயற்கணிதம்

கற்றல் நோக்கங்கள் • வடிவக் கணித நிரூபண முறையில், * (x + a )(x +b) = x 2 + x(a + b) +ab * (a + b)2 =a2 + 2ab +b2 * (a − b)2 = a2 − 2ab +b2 மற்றும் * (a + b)(a −b) = a 2 −b2 . ஆகிய முற்றொருமைகளைத் தருவித்தல் • அந்த முற்றொருமைகளைப் பயன்படுத்திக் கணக்குகளைத் தீர்க்கும் முறையை அறிதல்.• காரணிப்படுத்தக் கூடிய இயற்கணிதக் கோவைகளை இனங்காணுதல். • ஒரு மாறியுடன் கூடிய அசமன்பாடுகளை எண்கோட்டில் குறித்தல்.

அலகு 3

இயற்கணிதம்



கற்றல் நோக்கங்கள்

வடிவக் கணித நிரூபண முறையில்

 * (x + a )(x +b) = x 2 + x(a + b) +ab

 * (a + b)2 =a2 + 2ab +b2

 * (a − b)2 = a2 − 2ab +b2 மற்றும் 

 * (a + b)(a −b) = a 2 −b2 . ஆகிய முற்றொருமைகளைத் தருவித்தல் 

அந்த முற்றொருமைகளைப் பயன்படுத்திக் கணக்குகளைத் தீர்க்கும் முறையை அறிதல்.

காரணிப்படுத்தக் கூடிய இயற்கணிதக் கோவைகளை இனங்காணுதல்

ஒரு மாறியுடன் கூடிய அசமன்பாடுகளை எண்கோட்டில் குறித்தல்.


அறிமுகம்முற்றொருமைகள்

அடுக்குக் குறியீடுகளைப் பயன்படுத்தி, இயற்கணிதக் கோவைகளை உருவாக்குவது குறித்து, நாம் ஏற்கனவே கற்றறிந்தோம். எடுத்துக்காட்டாக, x2+3x+2 என்னும் இயற்கணிதக் கோவையின் மாறி x. இக்கோவையை, x2 + 3x = -2 எனுமாறு சமன்பாடாக மாற்றி எழுதுவோம்.

x இன் எண் மதிப்பைப் பிரதியிடுவதன் மூலம் இச்சமன்பாடுகளைச் சரிபார்க்கலாம்

x=-2 எனில், இடதுபக்கம் (L.H.S)  = x2 + 3x = (-2)2 + 3(-2)

= 4-6

= -2 = வலதுபக்கம் (R.H.S) 

ஆதலால், x =-2 எனும்போது இச்சமன்பாடு உண்மையாகும்

x = -1 எனில், இடதுபக்கம்  = x2 + 3x = (-1)2 + 3(-1)

= 1-3

= -2 = வலதுபக்கம்

ஆதலால், x = -1 எனும்போது இச்சமன்பாடு உண்மையாகும்

ஆனால் x =1 எனில், இடதுபக்கம் = x2 + 3x = (1)2 + 3(1)

= 1+3\= 4 ≠ வலதுபக்கம் 

ஆதலால், x = 1 எனும்போது இச்சமன்பாடு உண்மையல்ல. மேலும், x2 + 3x = -2 என்பது x இன் மதிப்புகள் -1 மற்றும் -2 ஆக இருக்கும்போது மட்டுமே உண்மையாகும். இவற்றிலிருந்து மாறியின் எல்லா மதிப்புகளுக்கும் இச்சமன்பாடு பொருந்தாது என அறிகின்றோம்.

இப்போது, (a+b)2 = a2 + 2ab + b2 என்னும் இயற்கணிதச் சமன்பாட்டைக் கருதுக. கொடுக்கப்பட்ட மாறிகள் a மற்றும் b இன் மதிப்புகளுக்கு இவைகளின் மதிப்புகளைக் காண்போம்.

a = 3 மற்றும் b = 5 எனும்போது

இடதுபக்கம் = (a+b)2 = (3+5)2 = 82 = 8 × 8= 64 

வலதுபக்கம் = a2 + 2ab + b2 = 32 + (2×3×5) + 52 = 9+30+25= 64 

எனவே, a= 3 மற்றும் b = 5 எனில், வலதுபுறம் = இடதுபுறம் 

இதேபோல், a = 4 மற்றும் b = 7 எனில்

இடதுபக்கம் = (a+b)2 = (4+7)2 = 112 =121 

வலதுபக்கம் = a2 + 2ab + b2 = 42 +2×4×7+72 =16+56+49 = 121 

இப்போது, a = 4 மற்றும் b =7 எனில், இடதுபுறம் = வலதுபுறம்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து, a, b ஆகிய மாறிகளுக்கு எந்த மதிப்பைப் பிரதியிட்டாலும், இடதுபக்கமும் (L.H.S) வலதுபக்கமும் (R.H.S) ஒரே மதிப்பைப் பெறுவதை அறிகின்றோம். மாறியின் எந்த மதிப்புக்கும், சமநிலை மாறாத இத்தகைய சமன்பாடுகளை முற்றொருமை என்கிறோம். எனவே, (a+b)2= a2+2ab+b2 என்னும் சமன்பாடு ஒரு முற்றொருமை என அறிய முடிகிறது.

பொதுவாக, மாறியின் எல்லா மதிப்புகளுக்கும் பொருந்தக்கூடிய இயற்கணிதச் சமன்பாடுகள், முற்றொருமை எனப்படும். சில அடிப்படை இயற்கணித முற்றொருமைகளை அதன் வடிவக் கணித நிரூபணத்துடன் காண்போம்.


எங்கும் கணிதம் - அன்றாட வாழ்வில் அசமன்பாடுகள்




Tags : Introduction to Identities | Term 3 Chapter 3 | 7th Maths அறிமுகம் – முற்றொருமைகள் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 3 : Algebra : Algebra Introduction to Identities | Term 3 Chapter 3 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம் : இயற்கணிதம் - அறிமுகம் – முற்றொருமைகள் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : இயற்கணிதம்