Home | 9 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century

   Posted On :  24.07.2022 06:28 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக பதிலளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.

• தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.

• அவர் ஒருவர் மட்டுமே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின்  சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர். எங்கும் நிறைந்திருப்பார்.

• நம்முடைய வீடு பேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியலும் அவரை நம்புவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.

• அவரை நம்புவதானது அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பதைச் செயல்படுத்துவதிலும் அடங்கி உள்ளது.

 

2. சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

• சாதி மறுப்பு, சமபந்தி, சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

• விதவை மறுமணச் சங்கம், புனே சர்வஜனிக் சபா, தக்காணக் கல்வி கழகம் ஆகிய அமைப்புகளை ரானடே நிறுவினார்.

 

3. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.

• இராமலிங்க சுவாமிகள் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களின் மேலும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.

1865 இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1866 இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடியப் பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை நிறுவினார்.

 

4. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?

சாதி ஒழிக்கப்பட்டது.

• பலதாரமணம், குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டது.

• விதவை மறுமணம் ஊக்குவிக்கப்பட்டது.

• பெண்ணடிமை தனத்தை எதிர்த்தார்.

 

5. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியைப் புனேயில் திறந்தார்.

• சத்திய சோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை நிறுவினார்.

• பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.

• விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

• ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

 

Tags : Social and Religious Reform Movements in the 19th Century | History | Social Science 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century : Answer briefly Social and Religious Reform Movements in the 19th Century | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : சுருக்கமாக விடையளிக்கவும். - 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்