Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage

   Posted On :  24.07.2022 08:26 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

ஆப்கானிஸ்தான்

வங்காளதேசம்

பர்மா

நேபாளம்

பாகிஸ்தான்

பூடான்

மியான்மர்

இலங்கை

 

2. இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ள குஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது.

இந்த நேர வேறுபாட்டை தவிர்ப்பதற்காக இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30' கிழக்கு தீர்க்கரேகையின் தல நேரம், இந்திய திட்ட நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது.

இந்திய திட்ட நேரமானது கிரீன்விச் சராசரி நேரத்தை விட 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

 

3. தக்காண பீடபூமி - குறிப்பு வரைக.

தக்காண பீடபூமி, தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.

வடமேற்கு திசையில் விந்திய சாத்பூரா மலை தொடர்களையும் வடக்கில் மகாதேவ், மைக்காலா குன்றுகளையும், வடகிழக்கில் இராஜ்மகால் குன்றுகளையும், மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளையும், கிழக்கில் கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் எல்லைகளாக கொண்டது.

சுமார் 7 லட்சம் சதுர கி.மீ பரப்பளவையும் கடல் மட்டத்திலிருந்து 500 மீ முதல் 1000 மீ உயரம் வரையும் அமைந்துள்ளது.

 

4. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.

நர்மதை, தபதி மற்றும் மாஹி.

 

5. இலட்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.

இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது

இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும்.

இங்கு மனிதர்கள் வசிக்காத பிட் தீவு பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்றது.

இலட்சத்தீவு மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்கள் 1973 ஆம் ஆண்டு முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது.

 

Tags : India - Location, Relief and Drainage | Geography | Social Science இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 1 : India - Location, Relief and Drainage : Answer in brief India - Location, Relief and Drainage | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு : சுருக்கமாக விடையளிக்கவும். - இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் - மற்றும் வடிகாலமைப்பு