Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture

   Posted On :  24.07.2022 09:20 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 3 : இந்தியா - வேளாண்மை

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வேளாண்மை : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. ‘மண்' – வரையறு.

• மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருட்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருட்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது.

• இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.

 

2. இந்தியாவில் காணப்படும் மண் வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் காணப்படும் மண் வகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது.

• வண்டல் மண்

• காடு மற்றும் மலை மண்

• கரிசல் மண்

• வறண்ட பாலை மண்

• செம்மண்

• உப்பு மற்றும் காரமண்

• சரளை மண்

• களிமண் மற்றும் சதுப்பு நில மண்

 

3. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.

• ஈரமாக இருக்கும் போது சேறாகவும்,

• ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும் தன்மையும் உடையது.

 

4. ‘வேளாண்மை’வரையறு.

வேளாண்மை என்பது குறிப்பிட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கும் உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும் நார் மற்றும் தேவையான இதர பொருட்களையும் வழங்குகிறது.

 

5. இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.

• தன்னிறைவு வேளாண்மை

• வறண்ட நில வேளாண்மை

• இடப்பெயர்வு வேளாண்மை

• கலப்பு வேளாண்மை

• தீவிர வேளாண்மை

• படிக்கட்டு முறை வேளாண்மை

 

6. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.

• காரிஃப் பருவம் (ஜூன் - செப்டம்பர்)

• ராபி பருவம் (அக்டோபர் - மார்ச்)

• சையத் பருவம் (ஏப்ரல் - ஜூன்)

 

7. இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.

• தோட்டப் பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.

• தேயிலை, காபி, இரப்பர், வாசனைப்பொருட்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப் பயிர்களாகும்.

 

8. கால்நடைகள் என்றால் என்ன?

• கால்நடைகள் இந்தியாவின் விவசயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் ஆகும்.

• கால்நடைகளின் பல்வேறு வகைப் பயன்பாடுகள் காரணமாக இவை சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.

• வேளாண்மை பொய்க்கும் பொழுது வேலைவாய்ப்பும், வருவாயையும் அளிக்கின்றன.

• நிலத்தை உழுவதற்கும், பயிர்களுக்கு உரம் அளிப்பவையாகவும் இவை விளங்குகின்றன.

 

9. இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.

இந்தியாவில் மீன் பிடி தொழில் இருவகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1. கடல் மீன் பிடிப்பு

2. உள்நாட்டு () நன்னீர் மீன்பிடிப்பு

கடல் மீன் பிடிப்பு 

• கடற்கரைப்பகுதி, கடற்கரையை ஒட்டிய பகுதி மற்றும் ஆழ்கடல் போன்ற முக்கியமாக கண்டத்திட்டு பகுதிகளில் மீன் பிடித்தல் நடைபெறுகிறது.

• கேரளா கடல்மீன் உற்பத்தியில் முதன்மையானதாக உள்ளது.

உள்நாட்டு மீன் பிடிப்பு

• நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில் அடங்கும்.

• இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

 

Tags : Agriculture in India | Geography | Social Science இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 3 : India - Agriculture : Answer in brief Agriculture in India | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 3 : இந்தியா - வேளாண்மை : சுருக்கமாக விடையளிக்கவும். - இந்தியா - வேளாண்மை | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 3 : இந்தியா - வேளாண்மை