Home | 9 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவாக விடையளிக்கவும்.

19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century

   Posted On :  24.07.2022 06:31 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

விரிவாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: VI. விரிவாக விடையளிக்கவும். VII. செயல்பாடுகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. 19 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

• சமூகத்தில் நிலவி வந்த சதி எனும் உடன்கட்டை ஏறுதல்.

• குழந்தைத் திருமணம் மற்றும் பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள்.

• விதவைப் பெண்கள் மறுமணம் செய்ய உரிமை மறுக்கப்பட்டது.

• பெண் அடிமைத்தனம், ஆணை விட பெண் கீழானவள் எனும் நடைமுறைகள் வரதட்சணைகள்.

• பெண் கல்வி மறுப்பு நடைமுறைகள்.

• எல்லையற்ற உபநிடதங்கள் போதனைகள்.

• பிராமணர் மேலாதிக்கம் செய்யும் சடங்கு முறைகள்.

• மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அதிக தாக்கங்கள்.

• பயங்கரமான சாதிக் கொடுமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள்.

• மேலைநாட்டு பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்க மறுத்தது.

 

2. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.

இராமகிருஷ்ண பரமஹம்சர்:

• கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச் சார்ந்த எளிய அர்ச்சகர்.

• புனிதத் தாயான கடவுள் காளியின் தீவிர பக்தர்.

• அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.

• அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச் செல்லும்.

• மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

சுவாமி விவேகானந்தர்:

• இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர். மனிதகுலத்திற்குத் தொண்டு செய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.

• இறைவனை அடைய வேண்டுமென்றால், எளிய மனிதனை நினை என்று கூறியவர்.

• பண்பாடு, தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.

• இந்து சமயத்திற்கு புத்துயிர் அளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தவர்.

1893-அமெரிகக் சிகாகோ உலக சமய மாநாட்டில் இந்து மதக்கருத்துக்களை உலகறியச் செய்தவர்.

• இந்து சமய பக்தி மார்க்கம் கொண்ட இவரது சொற்பொழிவுகள் மிகச்சிறப்பு  வாய்ந்தது.

• சுவாமி விவேகானந்தரின் செயலூக்கம் மிக்க சித்தாந்தம் மேலைக்கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணியது.

 

3. பெண்களின் மேம்பாட்டிற்கு 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.

19 ஆம் நூற்றாண்டில் பெண்களின் மேம்பாட்டிற்கு முன்னெடுத்துச் சென்றவர்களுள் மிக முக்கியமாணவர்கள் பின்வருமாறு:

1. இராஜா ராம்மோகன் ராய்

2. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

3. சுவாமி தயானந்த சரஸ்வதி

4. சுவாமி விவேகானந்தர்

5. அன்னிபெசன்ட் அம்மையார்

6. பண்டித ரமாபாய்

சுவாமி விவேகானந்தர் பெண்களை பூமிக்கு இணையாகக் கூறி பூமித்தாய், பாரதத்தாய் என்று வடிவம் கொடுத்தவர்.

இராஜா ராம்மோகன் ராய் சமூகத்தில் நிலவிய உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கவழக்கங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றும் அரசை வலியுறுத்தி வெற்றி கொண்டவர். இவர் பெண்ணடிமைத்தனத்தையும், ஆணைவிட பெண் கீழானவள் எனும் நடைமுறையை எதிர்த்தவர்.

ஈஸ்வர வித்யாசாகர் பெண் கல்வியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.

ஆத்மராம் பாண்டுரங் என்வர் சாதி மறுப்பு திருமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

சுவாமி தயானந்த சரஸ்வதி விதவை மறுமணம் பெண்கள் வெளிநாடு சென்றால் தீட்டு என்று சொல்லப்படுவதை மறுத்தவர்.

அன்னிபெசன்ட் அம்மையார் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடுபட்டவர்.

பண்டித ரமாபாய் பெண் விடுதலைக்கு பாடுபட்டவர்.

சர் சையது அகமதுகான் இசுலாமிய பெண்கள் கல்வி கற்கவும் அவர்களின் மேம்பாட்டிற்கும் பாடுபட்டவர்.

ஜோதிபாபூலே மனைவி சாவித்திரி பாய் என்பவரும் குழந்தைகள் விடுதி, விதவைப் பெண்கள் காப்பகத்தையும் நிறுவியவர்.

 

VII. செயல்பாடுகள்

 

1. பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் அவர்களின் சீர்திருத்தங்கள் குறித்து மாணவர்கள் நடித்துக் காண்பித்தல்.

வகுப்பறை மாணவர்கள் செயல்பாடுகள்.

 

2. 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூகத் தீமைகள் இன்று நிலவும் சமூகத் தீமைகள் குறித்து பட்டிமன்றம் நடத்துதல்.

வகுப்பறை மாணவர்கள் செயல்பாடுகள்.

 

Tags : Social and Religious Reform Movements in the 19th Century | History | Social Science 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century : Answer in detail Social and Religious Reform Movements in the 19th Century | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : விரிவாக விடையளிக்கவும். - 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்