Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவாக விடையளிக்கவும்.

தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

   Posted On :  24.07.2022 07:05 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்

விரிவாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : தேசியம்: காந்திய காலகட்டம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: VI. விரிவாக விடையளிக்கவும். VII. செயல்பாடுகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக 20 ஆண்டுகள் போராடியது இந்திய விடுதலை போராட்டத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.

ஆங்கிலேய ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க வன்முறை அல்லாத வழிகளைப் பின்பற்றியது

படிக்கும் காலங்களில் இலண்டனில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள்.

தென்னாப்பிரிக்க இனவேறுபாடு கொண்ட டர்பன் ரயில் சம்பவங்கள்.

டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் படைப்புகள் காந்தியடிகளை மாற்றியது.

உண்மையின் வடிவமாக சத்தியாக்கிரக வழியில் போராடியது.

இந்திய மக்களை சந்தித்து பயணம் மேற்கொண்ட போது தமிழக பயணம் அவரை வேட்டி மற்றும் சிறிய துண்டுவிற்கு மாற்றியது.

பீகாரில் உள்ள சம்பரானில்தீன் காதியாமுறையை அகற்ற போராடி பண்ணை விவசாயிகளுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வரிகொடா இயக்கம் என பல்வேறு இயக்கங்களை நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியது.

குஜராத் தண்டி உப்பு சத்தியாகிரக பாத யாத்திரை.

தீண்டாமை - வகுப்புவாரி முறையை ஒழிக்க பாடுபட்ட நிகழ்ச்சிகள்.

மதுப்பழக்கத்தை கைவிட போராட்டம் நடத்தியது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம் மாபெரும் மக்கள் தலைவராக தன்னை நிலை நிறுத்தினார்.

இது போன்ற காரணிகள் காந்தியடிகளை ‘இந்தியாவின் தேசத்தந்தை' என்ற நிலைக்கு கொண்டு வந்தது.

 

2. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.

இந்தியாவிற்கு தன்னாட்சி பகுதி வழங்குவதில் திருப்தி அடையாத காங்கிரஸ் கட்சி 1930 ஜனவரி 26 ஆம் நாள் சுதந்திரநாளாக அடைவது என அறிவிக்கப்பட்டது.

இதன்படி வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் சுதந்திரம் அடைவது என குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த வரிகொடா இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அங்கீகாரம் அளித்தது.

பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை காந்தியடிகள் அரசப் பிரதிநிதியிடம் அளித்தார்.

பதில் அளிக்காத நிலையில் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை  தீவிரப்படுத்தினார்.

உப்பு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுப்பூர்வமான முடிவாகும்.

காந்தியடிகள் 1930 மார்ச் மாதம் 12 ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டியாத்திரையைத் தொடங்கினார்.

காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சட்ட மறுப்பு இயக்கம் மூலமாக நடந்த குஜராத் தண்டி யாத்திரை காந்தியடிகளை இந்திய அளவில் வெகுவாக உயர்த்தியது.

 

3. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.

• 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபுவின் வங்கப் பிரிவினை இந்தியப் பிரிவினைக்கு முதல் காரணியாக அமைந்தது.

முதல் உலகப் போருக்குப் பின் துருக்கி இசுலாமிய மதத் தலைவருக்கு ஆதரவாக இந்தியாவில் தனியே கிலாபத் இயக்கம் ஆரம்பித்து போராடியது.

மத்திய சட்டப் பேரவையில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என முஸ்லிம் லீக் கோரியது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் தூதராக கருதப்பட்ட முகமது அலி ஜின்னா தனது நிலைப்பாட்டை மாற்றி முஸ்லிம்களுக்கு தனி நாடு வலியுறுத்தியது.

• 1932 இல் வெளி வந்த ராம்சே மெக் டொனால்டு வகுப்பு வாத அறிக்கை.

இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய ஜின்னா 1934 இல் முஸ்லிம் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டி 1940களில் தனிநாடு கோரிக்கையை தீவிரப்படுத்தியது.

இந்து மகா சபையும் முஸ்லிம் லீக்கும் நாட்டின் ஒற்றுமை தவிர்த்து ஒன்றுக்கொன்று எதிரான நடவடிக்கையில் இறங்கியது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த முகம்மது இக்பால் தனிநாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்தது.

• 1946 தேர்தல்களில் முஸ்லிம் லீக் தனது தனித் தொகுதியில் வெற்றி பெற்று தனது கோரிக்கைக்கு வலு சேர்த்தது.

• 1946 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 16 ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாக ஜின்னா அறிவித்தது.

• 1947 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றி இந்தியாவை, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடாக பிரித்து விடுதலை அறிவித்தது.

இதுபோன்ற காரணிகளே இந்தியாவின் பிரிவினைக்கு பின்னால் இருந்த காரணிகளாகும்.

 

VII. செயல்பாடுகள்

1. ஒரு வரைபடத்தில் காந்திய இயக்கத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களைக் குறிப்பிடுமாறும் அங்கு நடந்தது என்று ஓரிரு வாக்கியங்கள் எழுதுமாறும் மாணவர்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு

 

2. மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு காந்தியடிகள், ஜின்னா, B.R. அம்பேத்கர். புரட்சிகர தேசியவாத தலைவர்கள், பொதுவுடைமைவாத தலைவர்கள் ஆகியோரின் கருத்துகள் பற்றி விவாதம் நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு

 

Tags : India Nationalism: Gandhian Phase | History | Social Science தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : Answer in detail India Nationalism: Gandhian Phase | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம் : விரிவாக விடையளிக்கவும். - தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்