Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவான விடை தருக.

மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India

   Posted On :  25.07.2022 01:41 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு

விரிவான விடை தருக.

சமூக அறிவியல் : குடிமையியல் : மாநில அரசு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: விரிவான விடை தருக.

VI. விரிவான விடை தருக.

 

1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

அமைச்சரவை தொடர்பானவை:

முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்

அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.

தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.

அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.

அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆளுநர் தொடர்பானவை:

கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

மாநில அரசு வழக்குரைஞர்

மாநில தேர்தல் ஆணையர்

அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

சட்டமன்றம் தொடர்பானவை:

சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.

சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.

சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.

எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

 

2. ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.

சட்டமன்ற அதிகாரங்கள்:

ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.

ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் சட்டமன்றத்தை கலைக்கவும் உரிமை பெற்றுள்ளார்.

தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத் தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றார்.

நிலுவையிலுள்ள மசோதா குறித்துஸ்ரீ சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.

ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.

கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூகசேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்ட மேலவையின் 6 இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார்.

 

3. அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.

மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப் படுத்துகிறது.

சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செயது எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.

நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்காக வரிக் கொள்கையை முடிவு செய்கிறது.

முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.

மற்ற மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.

மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.

ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.

அமைச்சரவையின், ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கிறது.

ஆண்டு வரவு செலவுத் திட்டம், அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.

 

VII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு.

 

1. மாநில அரசாங்கத்தின் நிர்வாக முறையை விளக்கும் ஒரு விளக்கப்படம் (Flow Chart) தயார் செய்க.

 

2. அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆளுநர்கள் பெயர்ப் பட்டியலோடு தமிழ்நாட்டின் முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்களின் பெயரினைப் பட்டியலிடுக.

மாணவர் சுயசெயல்பாடு.

 

Tags : State Government of India | Civics | Social Science மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 3 : State Government of India : Answer in detail State Government of India | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு : விரிவான விடை தருக. - மாநில அரசு | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 3 : மாநில அரசு