Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவான விடை தருக.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் - விரிவான விடை தருக. | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy

   Posted On :  25.07.2022 01:49 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

விரிவான விடை தருக.

சமூக அறிவியல் : குடிமையியல் : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: விரிவான விடை தருக.

VI. விரிவான விடை தருக.

 

1. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.

• ‘அணிசேரா இயக்கம்' என்ற சொல் 1953 இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

• அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.

• இதன் நோக்கம் ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளி நாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தை பராமரித்தலாகும்.

• அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும், 17 நாடுகளை பார்வையாளராகவும், 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்:

• இந்தியா - ஜவகர்லால் நேரு

• இந்தோனேசியா - சுகர்னோ

• யூகோஸ்லாவியாடிட்டோ

• கானா - குவாமே நிக்ரூமா

• எகிப்து - நாசர்

 

2. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?

• நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு.

• நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை.

• இயற்கை வளங்கள்.

• பொருளாதார வளர்ச்சியின் அவசியம்.

• அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு

• அமைதிக்கான அவசியம், ஆயுதகுறைப்பு,

• அணு ஆயுதப் பெருக்கத்தடை,

• ராணுவ வலிமை.

• சர்வதேச சூழ்நிலை.

 

3. அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.

• தேசிய நலனைப் பேணுதல்.

• உலக அமைதியை எய்துதல்.

• ஆயுதக்குறைப்பு.

• பிறநாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்.

• அமைதியான வழிகளில் பிரச்சினைகளைத் தீர்த்தல்.

• அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு.

• சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்.

• காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு.

 

VII. செயல்பாடு.

 

1. நீங்கள் முடிவு எடுப்பவராக இருந்தால் தக்க வைத்துக்கொள்ள விரும்பும் அல்லது மாற்றம் செய்ய விரும்பும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் ஏதேனும் இரண்டு அம்சங்களை அடையாளம் காணவும்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு.


Tags : India’s Foreign Policy | Civics | Social Science இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy : Answer in detail India’s Foreign Policy | Civics | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : விரிவான விடை தருக. - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | குடிமையியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை