Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade

   Posted On :  24.07.2022 10:27 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்.

III. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

• இடப்பெயர்வு என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம்பெயர்ந்து செல்வதாகும்.

• இது உள்நாட்டு இடப்பெயர்வு, சர்வதேச இடப்பெயர்வு என இரு வகைப்படும்.

 

2. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

• இந்திய தரைவழிப் போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக  கருதப்படுகிறது.

இது மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.

• வணிகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது.

• வேளாண் துறையில் எளிதில் அழுகக்கூடிய பொருட்களை வர்த்தகம் செய்ய விரைவான போக்குவரத்தை அளித்து உதவி புரிகிறது.

 

3. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

• குழாய் போக்குவரத்து அமைப்பதற்கு ஆரம்பகால செலவுகள் அதிகம்.

• ஆனால் பின்னர் இதனை பராமரிப்பதற்கான செலவு மிகவும் குறைவு.

• இவற்றை கடினமான நிலப்பகுதிகளிலும் நீருக்கு அடியிலும் அமைக்க இயலும்.

 

4. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக.

தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்: 1

இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே செயல்படுகிறது.

தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்: 2

இது பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே செயல்படுகிறது.

தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்: 3

இது நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே செயல்படுகிறது.

 

5. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

• தகவல்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துகளின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம்.

• தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

அவை: தனிமனித தகவல் தொடர்பு, பொதுத் தகவல் தொடர்பு.

 

6. பன்னாட்டு வணிகம் - வரையறு.

• இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது

• ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியன பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் ஆகும்.

 

7. சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக.

• சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்கிறது.

• சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது எளிது.

• பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிக்கிடையில் எளிதில் தொடர்பை ஏற்படுத்துகிறது.

• இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் பயன்படும் மலிவான போக்குவரத்து ஆகும்.

 

Tags : Population, Transport, Communication & Trade in India | Geography | Social Science இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 6 : India - Population, Transport, Communication & Trade : Answer the following Questions briefly Population, Transport, Communication & Trade in India | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் : சுருக்கமாக விடையளிக்கவும். - இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்