Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

   Posted On :  24.07.2022 07:02 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : தேசியம்: காந்திய காலகட்டம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.

பஞ்சாப் அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் சீக்கியர்களின் அறுவடைத் திருநாள் பைசாகி அன்று பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருந்தனர்.

இதனை அறிந்த ஜெனரல் டயர் ஆயுதமேந்திய வீரர்கள் மற்றும் பீரங்கியுடன் சுற்றி கண்மூடித்தனமாக சுட்டுப் படுகொலை செய்தார்.

துப்பாக்கிச் சூட்டில் 379 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

 

2. கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.

முதல் உலகப்போரின் முடிவில் துருக்கியின் காலிப் கடுமையாக நடத்தப்பட்டார். .

துருக்கி மற்றும் காலிப்பிற்கு ஆதரவுக்கரம் நீட்டும் பொருட்டு 1919 நவம்பர் மாதம் தில்லியில் கிலாபத் இயக்கம் நடைபெற்றது.

துருக்கிக்கு ஆதரவாக பெரும் போராட்டம் முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி சகோதரர்கள் தலைமையில் இந்த இயக்கம் நடைபெற்றது.

 

3. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப் பெற்றார்?

காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவாக வரி கொடா இயக்கம் தீவிரமாக நடந்தது.

இந்த நாடு தழுவிய போராட்டத்தில் வன்முறை பெரிதும் நிகழ்ந்தது.

உத்திரப்பிரதேச சௌரி-சௌராவில் ஆங்கில காவல் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

சௌரி - சௌரா சம்பவத்தைத் தொடர்ந்து காந்தியடிகள் இந்த இயக்கத்தைத் திரும்ப பெற்றார்.

 

4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

சர் ஜான் சைமன் என்பவரால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்தியர் எவரும் இக்குழுவில் இடம் பெறாமல் வெள்ளையர் மட்டுமே இருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்கள் சைமனே திரும்பப் போ' என்ற கோஷத்துடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

5. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?

டொமினியன் எனப்படும் தன்னாட்சியில் திருப்தி அடையாத காங்கிரஸார் சிலர் முழுமையான சுதந்திரம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

1929 டிசம்பர் மாதம் லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.

இதில் முழுமையான சுயராஜ்ஜியம் என்ற சுதந்திரம் இலக்காக அறிவிக்கப்பட்டது.

 

6. பகத்சிங் பற்றி குறிப்பு வரைக.

பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பஞ்சாப் பகத்சிங் இந்துஸ்தான் ராணுவ குடியரசை அமைத்தார்.

1929 மத்திய சட்டப்பேரவையில் வெடிகுண்டு மற்றும் துண்டுப் பிரசுரங்களை வீசி 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்தை எழுப்பினார்.

இதில் பகத்சிங் மற்றும் ராஜகுருவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பகத்சிங்கின் துணிச்சல் இந்திய இளைஞர்களைக் கவர்ந்து, பிரபலம் அடைந்தார்.

 

7. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒத்துக் கொள்ளப்பட்டது.

ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 இல் இருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது.

மத்திய சட்டப்பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

 

Tags : India Nationalism: Gandhian Phase | History | Social Science தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : Answer the following briefly India Nationalism: Gandhian Phase | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம் : சுருக்கமாக விடையளிக்கவும். - தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : தேசியம்: காந்திய காலகட்டம்