Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu

   Posted On :  24.07.2022 10:56 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.

• கிழக்கே வங்காள விரிகுடா கடலும்.

• மேற்கே கேரளா மாநிலம்.

• வடக்கே ஆந்திரப்பிரதேச மாநிலம்.

• வடமேற்கே கர்நாடக மாநிலம்.

• தெற்கே இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

 

2. தேரி' என்றால் என்ன?

இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகளே தேரி என அழைக்கப்படுகிறது.

 

3. கடற்கரைச் சமவெளி எவ்வாறு உருவாகிறது?

• கடற்கரைச் சமவெளிகள் தமிழகத்தை பொறுத்தவரை கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் பெரும் அளவில் வண்டலை படிய வைப்பதால் இப்பகுதி உருவாகின்றது.

• சில இடங்களில் இவை 80 கி.மீட்டருக்கும் அதிகமான அகலத்துடன் காணப்படுகின்றது.

 

4. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.

• பாம்பன் தீவு

• நல்ல தண்ணி தீவு

• குருசடை தீவு

• உப்பு தண்ணித் தீவு

• முயல்தீவு

• ஸ்ரீரங்கம்

• புள்ளிவாசல் தீவு

• விவேகானந்தர் நினைவுப் பாறை

 

5. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.

• காரையாறு

• பச்சையாறு

• சேர்வலாறு

• சிற்றாறு

• மணிமுத்தாறு

• இராமநதி ஆறு

• கடனா நதி

 

6. பேரிடர் அபாய நேர்வு - வரையறு.

• உயிர்களுக்கும், உடமைகளுக்கும், இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது.

• ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுபடி, “அபாய குறைப்பு  என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து அதன் தாக்கத்தைக் குறைப்பதாகும்”.

 

7. புயலின்போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?

• பலத்த காற்று வீசுவதால் மீனவர்களை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்.

• கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேகமூட்ட நேரங்களில் ஒளிகளை பாய்ச்சும் விளக்குகள் மூலம் எச்சரிக்கை செய்தல்.

• புயல் எண் எச்சரிக்கை கூண்டில் எண்கள் வாரியாக கொடிகளை ஏற்றி எச்சரிக்கை செய்தல்.

• தொடர்ந்து வானிலைச் செய்திகளை கேட்குமாறு அறிவுறுத்தல்.

• தங்கள் உடைமைகளை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லுதல்.

 

Tags : Physical Geography of Tamil Nadu | Geography | Social Science தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu : Answer the following in brief Physical Geography of Tamil Nadu | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் : சுருக்கமாக விடையளிக்கவும். - தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 6 : தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்