Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

தமிழ்நாடு - மானுடப் புவியியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu

   Posted On :  25.07.2022 12:52 am

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : தமிழ்நாடு - மானுடப் புவியியல்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : புவியியல் : தமிழ்நாடு - மானுடப் புவியியல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக விடையளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்களை எழுதுக.


பருவம்

சொர்ணவாரி (சித்தரைப்பட்டம்)

விதைக்கும் காலம் ஏப்ரல் - மே

அறுவடை காலம் ஆகஸ்ட் - செப்டம்பர்

முக்கிய பயிர்கள் பருத்தி திணை வகைகள்.

சம்பா (ஆடிப் பட்டம்)

விதைக்கும் காலம் ஜூலை - ஆகஸ்ட்

அறுவடை காலம் ஜனவரி - பிப்ரவரி

முக்கிய பயிர்கள் நெல், கரும்பு.

நவரை

விதைக்கும் காலம் நவம்பர் - டிசம்பர்

அறுவடை காலம் பிப்ரவரி - மார்ச்

முக்கிய பயிர்கள் பழங்கள், காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி

 

2. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின்மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது

• பருத்திநெசவாலைகள் கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள திருப்பூர், பல்லடம், அவினாசி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போன்ற இடங்களில் பரவி உள்ளன.

• கோயம்புத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பருத்தி விளைச்சலும் உற்பத்தியும் நெசவாளர்களுக்கு பெரிதும் உதவுகிறது.

• ஆதலால் கோயம்புத்தூர் 'தமிழ்நாட்டின் மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது.

 

3. தமிழ்நாட்டில் முக்கிய பல்நோக்கு திட்டங்களின் பெயர்களை எழுதுக.

• மேட்டூர் அணை

• முல்லைபெரியார் அணை

• பவானிசாகர் அணை

• வைகை அணை

• அமராவதி அணை

• மணிமுத்தாறு அணை

• கிருஷ்ணகிரி அணை

• பாபநாசம் அணை

• சாத்தனூர் அணை

• பரம்பிகுளம் ஆழியாறு திட்டம்

 

4. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?

• சென்னையில் பறக்கும் தொடருந்துத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

• பறக்கும் இரயில் என்பது நிலத்திலிருந்து உயரே கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்லும் புறநகர் தொடருந்து (இரயில்) சேவையைக் குறிக்கும்.

• இதன் உரிமையாளர் தென்னக இரயில்வே இந்தியா.

 

5. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக.

விமான நிலையங்கள் :

• சென்னை

• கோயம்புத்தூர்

• திருச்சி

• சேலம்

 மதுரை

• தூத்துக்குடி

துறைமுகங்கள் :

• சென்னை

• நாகப்பட்டினம்

• எண்ணூர்

• குளச்சல்

• தூத்துக்குடி

• கன்னியாகுமரி

பாம்பன்

• கூடங்குளம்

  கடலூர்

 

Tags : Human Geography of Tamil Nadu தமிழ்நாடு - மானுடப் புவியியல்.
10th Social Science : Geography : Chapter 8 : Human Geography of Tamil Nadu : Answer the following in brief Human Geography of Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : தமிழ்நாடு - மானுடப் புவியியல் : சுருக்கமாக விடையளிக்கவும். - தமிழ்நாடு - மானுடப் புவியியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : தமிழ்நாடு - மானுடப் புவியியல்