Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

எண் முறைகள் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 2 : Number Systems

   Posted On :  01.08.2022 11:00 pm

11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

குறு வினாக்கள், சிறு வினாக்கள், நெடு வினாக்கள், முக்கியமான கேள்விகள் - கணினி அறிவியல் : எண் முறைகள்

கணினிகளின் அடிப்படைகள்

எண் முறைகள்

மதிப்பாய்வு

பகுதி


குறு வினாக்கள்

 

1. தரவு என்றால் என்ன?

விடை: தரவு என்பதற்கான ஆங்கில வார்த்தையான Data என்ற சொல் Datum என்ற சொல்லிலிருந்து வந்தது, அதன் பொருள்செயல்படுத்தப்படாத உண்மை தகவல்” (Raw facts) என்பதாகும். தரவு என்பது மக்கள், இடங்கள் அல்லது பொருட்களின் உண்மைத் தகவல்களை கொண்டது.

 

2. 1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக.

விடை: ஒரு எண்ணின் 1ன் நிரப்பைக் காண கீழ்க்காணும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

படிநிலை 1: கொடுக்கப்பட்ட பதின்ம எண்ணுக்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

படிநிலை 2:  மாற்றப்பட்ட இருநிலை எண் 8 பிட்டுகளாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். 8 பிட்டுக்கும் குறைவாக இருப்பின், முன்னொட்டாக 0க்களை சேர்த்து 8 பிட்டுகளாக மாற்றவும்.

படிநிலை 3: அனைத்து பிட்டுகளையும், தலைகீழாக மாற்றவும். (அதாவது 1 என்பதை 0 எனவும், 0 என்பதை 1 எனவும் மாற்றுக)

 

3. (46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.


4610 = (101110)2

 

4. (28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது ஏன் காரணம் கூறு.

விடை: (2810) என்ற எண் நேர்மறை எண்ணாகும். ஆகையால் 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது.

 

5. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

விடை:

(i) BCD - Binary Coded Decimal.

(ii) ASCII - American Standard Code for Information Interchange.

(iii) EBCDIC - Extended Binary Coded Decimal Interchange Code.

(iv) ISCII - Indian Standard Code for Information Interchange.

(v) Unicode.

 

பகுதி -

சிறு வினாக்கள்


1. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

விடை: அடிமானம் என்பது ஆங்கிலத்தில் Radix அல்லது Base எனப்படும். அடிமானம் ஒவ்வொரு எண்முறையிலும் உள்ள மொத்த எண் மதிப்பு உருக்களின் எண்ணிக்கையை குறிக்கும். எடுத்துக்காட்டு:

(i) பதின்ம நிலை எண்முறை - அடிமானம் (10)

(ii) இருநிலை எண்முறை - அடிமானம் (2)

(iii) எண்ணிலை எண்முறை - அடிமானம் (8)

(iv) பதினாறு நிலை எண்முறை - அடிமானம் (16)

 

2. இருநிலை எண் முறை குறிப்பு வரைக

விடை: இருநிலை எண் முறையில் 0 மற்றும் 1 என்ற இரண்டு எண் உருக்கள் மட்டுமே உள்ளது. இந்த முறை, “உன் அடுக்கு நிலை நிறை முறை”- (2's Power positional weightage method)யில் 2யை அடிமானமாக கொண்டுள்ளது. ஒரு இருநிலை எண் தொடரின் இடது ஓர பிட், அதிக நிலை நிறை மதிப்பை கொண்டுள்ளதால், அது மிகு "மதிப்பு பிட்” (Most Significan Bit - MSB) எனவும், வலது ஓர பிட் குறைந்த மதிப்பை பெறுவதால், அதுகுறை மதிப்பு பிட்” (Least Significant Bit - LSB) என அழைக்கப்படுகின்றது.

 

3. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

விடை:

15010= ?


100101102 = 2268.

 

4. ISCII குறிப்பு வரைக.

விடை: இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்துருக்களை மட்டும் கையாளும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஓர் முறை ISCII ஆகும். இதுவும் 8 பிட் குறியீட்டு முறையாகும். எனவே, இந்த முறையில் 256 எழுத்துருக்களை கையாள முடியும். இந்திய அரசின் மின்னணு துறையின் (Department of Electronics) கீழ் அமைக்கப்பட்ட தரநிர்ணயக் குழுவால் (Standardaisation Committee) 1986-88 ஆண்டுவாக்கில் இந்த முறை உருவாக்கப்பட்டு, இந்திய தரநிர்ணயக் குழுமத்தால், (Bureau of Indian Standards - BIS) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த குறியீட்டு முறை 'யுனிகோட் குறியீட்டு முறையில் இணைந்துவிட்டது.

 

5. கூட்டு: () – 2210+ 1510 () 2010+ 2510

விடை:

() -2210 + 1510


12210 = இருநிலை எண்கள் = 101102

1510= இருநிலை எண்கள் = 11112

படிநிலை 2


படிநிலை 3

22 மற்றும் 15க்களின் இருநிலை கூட்டல் 


2210+ 1510 = 111110012

() 2010 + 2510


2010 = இருநிலை எண்கள் = 101002

2510= இருநிலை எண்கள் = 110012

22 மற்றும் 25க்களின் இருநிலை கூட்டல்


2010 + 2510 = 1011012


பகுதி -

நெடு வினாக்கள்

 

1. () மிதப்புப்புள்ள பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.

() (98.46)10 க்கு நிகரான இரு நிலை எண்ணாக மாற்றுக.

விடை:

() மிதப்புப்புள்ளி பதின்ம எண்ணை இருநிலை எண்ணாக மாற்றுதல்:

“2ன் தொடர் பெருக்கல் முறையை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை இருநிலை எண்ணாக மாற்றலாம். “2-ன் தொடர் பெருக்கல் முறையின் வழிகள் பின்வருமாறு:

படிநிலை 1: மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை 2ஆல் பெருக்கி வரும் விடைமதிப்பின் முழு எண் பகுதியை தனியாக குறித்து வைக்க வேண்டும். முழு எண் பகுதி 0 அல்லது 1 ஆக மட்டுமே இருக்கும்.

படிநிலை 2: படிநிலை 1ல் கிடைக்கப்பெற்ற விடை மதிப்பின் முழு எண் பகுதியை, கொடுக்கப்பட்ட மிதப்புப் புள்ளி எண்ணிலிருந்து கழித்து விட்டு, மீதமுள்ள மிதப்புப்புள்ளி மதிப்புகளை மீண்டும் 2ஆல் பெருக்கி, அதன் விடை மதிப்பின் முழு எண் பகுதியை தனியாக குறித்து வைக்கவும்.

படிநிலை 1 மற்றும் 2யை, இறுதி மதிப்பு 0 என வரும் வரையோ அல்லது தொடர்ந்து சில இலக்கங்கள் வரையோ மீண்டும், மீண்டும் பின்பற்றுக.

படிநிலை 3: படிநிலை 1 மற்றும் 2ன் படி தனியே எழுதி வைக்கப்பட்டுள்ள அனைத்து 0 மற்றும் 1-களை மேலிருந்து கீழாக எழுதவேண்டும். இதுவே, கொடுக்கப்பட்ட மிதப்புப் புள்ளி எண்ணுக்கு நிகரான இருநிலை எண் ஆகும்.


 

2. பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க.

) - 98 ) -135

விடை:

() - 98


() - 135


 

3. () கூட்டுக: 11010102+1011012

() கழிக்க: 11010112-1110102

விடை:


 

Tags : Number Systems | Computer Science எண் முறைகள் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 2 : Number Systems : Answer the following questions Number Systems | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - எண் முறைகள் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 2 : எண் முறைகள்