Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

செயற்கூறுகள் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 11 : Functions

   Posted On :  04.08.2022 06:04 pm

11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

குறு வினாக்கள், சிறு வினாக்கள், நெடு வினாக்கள், முக்கியமான கேள்விகள், ஆய்வு அறிக்கை, பின்வரும் கணக்குகளைத் தீர்க்க C++ நிரலை எழுதவும் - அறிவியல் : C++ ஓர் அறிமுகம் : செயற்கூறுகள்

C++ - ஓர் அறிமுகம்

C++ -ன் செயற்கூறுகள்


பகுதி -

குறு வினாக்கள்


1. செயற்கூறுகள் வரையறை.

விடை: ஒருபெரிய நிரலை சிறியதுணை நிரலாக பிரிக்க முடியும். அவ்வாறு பிரிக்கப்படும் அத்தனை நிரல் செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு செயற்கூறும் அதற்குரிய செயற்பாடுகளை செயல்படுத்தும். நிரலின் நீளத்தையும் மற்றும் சிக்கற்பாட்டையும் குறைக்கவும் நிரலை எளிதில் புரிந்து கொள்ளவும், பிழைகளைக் கண்டறிந்து திருத்தவும் செயற்கூறுகள் வழிவகுக்கிறது.

 

2. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

விடை: strlen() என்ற செயற்கூறு மூல' சரத்தை அதன் செயலுருப்பாக எடுத்துக் கொண்டு அதன் நீளத்தை திருப்பி அனுப்பும். வெற்று குறியுறுவை (\0) சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளாது.

 

3. void தரவு வகையின் முக்கியத்துவங்கள் என்ன?

விடை:

(i) void தரவினம் இரண்டு முக்கிய நோக்கங்கள் கொண்டது:

(ii) இந்த செயற்கூறு எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது என்பதைக் குறிக்க.

(iii) பொது இனச் சுட்டியை (generic pointer) அறிவிக்க.

 

4. அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக.

விடை: செயலுருபுக்கள் அல்லது அளபுருக்கள் மூலமாக அழைக்கும் செயற்கூறிலிருந்து அழைக்கப்படும் செயற்கூறுக்கு மதிப்புகள் பரிமாற்றம் செய்யப்படும். வரையறுக்கப்பட்ட செயற்கூறில் , மாறிகளாக பயன்படுத்தப்பட்டுள்ள அளபுருக்களை முறையான அளபுருக்கள் என்றழைக்கப்படும். அழைப்பு செயற்கூறில் உள்ள மாறிலிகள் அல்லது மாறிகள் அல்லது கோவைகளை மெய்யான அளபுருக்கள் என்றழைக்கப்படும்.

வகைகள் :

(i) முன்னியல்புச் செயலுருபுக்கள்,

(ii) மாறிலி செயலுருபுக்கள்.

 

5. உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.

விடை:

(i) உள்ளமை மாறி, ஒரு தொகுதிக்குள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும்.

(ii) ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்.

(iii) ஓர் உள்ளமை மாறியை அது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது.

(iv) நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது, அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன. வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.

 

பகுதி -

சிறு வினாக்கள்

 

1. உள்ளிணைந்த செயற்கூறுகள் என்றால் என்ன?

விடை:

(i) பல்வேறு செயற்பாட்டிற்கு உடனே பயன்படுத்தும் வகையில் C++ மொழியில் உயரிய சேகரிப்புகளாக பல செயற்கூறுகள் உள்ளன.

(ii) தலைப்பு கோப்புகளில் இவ்வகை செயற்கூறுகளின் வரையறைகளை முன்னரே எழுதப்பட்டு, பிழை திருத்தி மற்றும் நிரல் பெயர்க்கப்பட்ட (Complied) அவற்றைத் தொகுத்து சேமிக்கப்பட்டுள்ளன.

(iii) இவ்வாறு நம் தேவைக்கு உடனே உபயோகிக்கப்படுத்தப்படும் துணை நிரல்களை முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் அல்லது உள்ளமைந்த செயற்கூறுகள் என்றழைக்கப்படுகின்றன.

 

2. isuppr() மற்றும் toupper() செயற்கூறுகளின் வேறுபாடுகள் யாவை?

விடை:


Isupper()

உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்து ஆங்கில பெரிய எழுத்தாக உள்ளதா என்று சரிபார்க்க இந்த செயற்கூறு பயன்படும்.

உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எழுத்து ஆங்கில பெரிய எழுத்தெனில் இந்த செயற்கூறு 1 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும் அல்லது 0 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும்.

எடுத்துக்காட்டு: n என்ற மாறியில் மதிப்பு 1 என்றும் M என்ற மாறியில் மதிப்பு 0 என்றும் இருத்தும்.  

int n=isupper('A');

int m=isupper('a');

toupper()

உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு எழுத்து ஆங்கில பெரிய எழுத்தாக மாற்ற இந்த செயற்கூறு பயன்படுகிறது.

உள்ளீடு செய்யப்பட்ட குறியுறு எழுத்து ஆங்கில பெரிய   எழுத்தாகவே இருந்தால், வெளியீடு அதே குறியுறுவாக இருக்கும்

எடுத்துக்காட்டு: தொடரியல்: char toupper(char c); கீழே கொடுக்கப்பட்டகூற்று C என்ற மாறியில் 'K' என்ற மதிப்பிருத்தும் char c = toupper('k'); ஆனால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றின் வெளியீடு 'B' ஆகவே இருக்கும்.

cout << toupper('B');

 

3. strcmp() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

விடை: strcmp() என்ற செயற்கூறு string1 மற்றும் string2 என்ற இரண்டு அளபுருக்களை எடுத்துக் கொள்ளும். இந்த செயற்கூறு string1 மற்றும் string2 உள்ளடக்கத்தை அகர வரிசையில் ஒப்பீடு செய்யும்.

பொதுவடிவம்: strcmp(string1, string2);

strcmp() செயற்கூறு திருப்பி அனுப்பும் மதிப்புகள்:

(i) string1-ல் உள்ள முதல் குறியுறுவின் மதிப்பு string2-ல் உள்ள முதல் குறியுறுவின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் நேர்மை மதிப்பைத் (Positive value) திருப்பி அனுப்பும். (ASCII மதிப்புகளை ஒப்பிடும்.)

(ii) string1-ல் உள்ள முதல் குறியுறுவின் மதிப்பு string2 -ல் உள்ள முதல் குறியுறுவின் மதிப்பை விட குறைவாக இருந்தால் எதிர்ம மதிப்பைத் (Negative value) திருப்பி அனுப்பும்.

(iii) string1 மற்றும் string2 சமம் எனில் 0 என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும்.

 

4. C++ மொழியில் உள்ள pow() செயற்கூறு பற்றி சிறுகுறிப்பு வரைக.

விடை: pow() செயற்கூறு அடித்தள (base) செயலுருபின் மேல் அடுக்குக்குறி(exponent) மதிப்பைத் திருப்பி அனுப்பும். pow() செயற்கூறின் செயலுருபின் தரவுவகை long double-ஆக இருந்தால், திருப்பி அனுப்பும் தரவின் வகை long double ஆக இருக்கும். இல்லையெனில் திருப்பி அனுப்பும் தரவுவகை double - ஆக இருக்கும். pow() செயற்கூறு இரண்டு செயலுருபுகளை ஏற்கும்.

(i) அடித்தளம் - அடித்தள மதிப்பு

(ii) அடுக்குக்குறி - அடித்தள மதிப்பின் அடுக்குக்குறி

 

5. செயற்கூறு முன்வடிவம் நிரல்பெயர்ப்பிக்கு எந்த தகவலை வழங்கும்?

விடை: செயற்கூறு முன்வடிவம் திருப்பி அனுப்பும் தரவினம், பெயர் மற்றும் முறையான அளபுருக்கள் அல்லது செயலுருபுக்கள் போன்ற தகவல்களை அளிக்கிறது.

 

6. முன்னிலைப்பு செயலுருபுக்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

விடை: C++ மொழியில் ஒரு செயற்கூற்றின் முன்வடிவில் உள்ள முறையான அளபுருக்களில் முன்னியல்பு மதிப்புகளை இருத்தி வைக்க முடியும். செயற்கூற்றை அழைக்கும் போது முன்னியல்பு செயலுருபு சில மதிப்புகளைத் தவிர்க்க வழிவகுக்கும். செயற்கூற்றை அழைக்கும் போது ஏதேனும் செயலுருபுகளுக்கு மதிப்பு கொடுக்காவிடில் நிரல்பெயர்ப்பி முன்னியல்பு செயலுருபுக்களின் மதிப்புகளை அழைக்கப்பட்ட செயற் கூற்றிக்கு ஏற்கும். மாறியில் தொடக்க மதிப்பிருந்தும் வடிவில் முன்னியல்பு மதிப்பு தரப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டு : void default value(int n1=10, n2=100);

 

பகுதி -

பெரு வினாக்கள்


1. மதிப்பு மூலம் அழைத்தல் முறையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை: இந்த முறையில் மெய்யான அளபுருவின் மதிப்பை முறையான அளபுருவில் நகலெடுக்கும். இந்த முறையில் முறையான அளபுருவின் மதிப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அது மெய்யான அளபுருவின் மதிப்பில் பிரதிபலிப்பதில்லை.

நிரல் :

#include<iostream>

using namespace std;

void display(int x)

{

int a=x*x;

cout<<"\n\nThe Value inside display function (a*a):"<<a;

}

int main()

{

int a;

cout<<"\nExample : Function call by value:";

cout<<"\n\nEnter the Value for A :";

cin>>a;

display(a);

cout<<"\n\nThe Value inside main function"<<a;

return(0);

}

வெளியீடு :

Function call by value

Enter the Value for A:5

The Value inside display function (a * a) : 25

The Value inside main function 5

 

2. தற்சுழற்சி என்றால் என்ன? தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணிற்கான மிகப்பெரிய பொதுவான காரணியை கணக்கிட ஒரு நிரலை எழுதுக.

விடை: ஒரு செயற்கூறு தன்னைத் தானே அழைத்துக் கொண்டால் அதை தற்சுழற்சி செயற்கூறு என்று அறியப்படும். இந்த நுட்பத்தை தற்சுழற்சி முறை என்றழைக்கப்படும்.

தற்சுழற்சி முறையில் ஒரு எண்ணிற்கான மிகப்பெரிய பொதுவான காரணியை கணக்கிடுதல்.

#include<iostream>

using namespace std;

//Function to find HCF //

int hcf(int nl, int n2)

{

if (n2 !=0)

return hcf(n2, nl) % n2);

else

return n1;

}

int main()

{

int numl, num2;

cout<<"Enter two positive integers:”;

cin >> num 1 >> num 2;

cout<<"Highest Common Factor (HCF) of “<<numl;

cout<<"&" << num2 << "is:" << hcf(numl, num2);

return((0);

}

வெளியீடு:

Enter two positive integers : 350 100

Greatest common Divisor(GCD) of : 350 & 100 is : 50

 

3. செயற்கூறு மதிப்பை திருப்பி அனுப்பும் பல்வேறு வடிவங்களை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை:

(i) மதிப்பை, திருப்பி அனுப்பாத மற்றும் அளபுருக்களை ஏற்காத செயற்கூறு: கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரல் மதிப்பைத் திருப்பி அனுப்பாத மற்றும் அளபுருக்களை ஏற்காத செயற்கூறிற்கான ஒரு எடுத்துக்காட்டு.

display() என்பது செயற்கூறின் பெயர், இதன் திருப்பி அனுப்பும் தரவினம் void மற்றும் இந்த செயற்கூறு எந்த அளபுருவையும் ஏற்காது.

நிரல் :

#include<iostream>

using namespace std;

void display()

{

cout<<"First C++ Program with Function";

}

int main()

{

display(); // Function calling statement//

return(0);

}

(ii) திருப்பி அனுப்பும் மதிப்பு மற்றும் அளபுருக்களை ஏற்காத செயற்கூறு:

display() என்ற செயற்கூறின் திருப்பி அனுப்பும் தரவினம் int மற்றும் இந்த செயற்கூறு அளபுருவையும் ஏற்காது. return செயற்கூறு அழைப்பு செயற்கூறுக்கு மதிப்பைத் திருப்பி அனுப்பும் மற்றும் நிரலின் கட்டுப்பாட்டை மீண்டும் அழைப்புக் கூற்றுக்கு திருப்பி அனுப்பும்.

நிரல் :

#include<iostream>

using namespace std;

int display()

{

int a, b, s;

cout<<"Enter 2 numbers: "';

cin>>a>>b;

s=a+b;

return s;

}

int main()

{

int m=display();

cout<<"\nThe Sum="<<m;

return(0);

}

(iii) மதிப்பை திருப்பி அனுப்பாத மற்றும் அளபுருக்களை ஏற்கும் செயற்கூறு:

display() என்ற செயற்கூறின் திருப்பி அனுப்பும் தரவினம் void, மேலும் இது X மற்றும் y என்ற இரண்டு அளபுருக்கள் அல்லது செயலுருபுக்களின் மதிப்புகளை ஏற்கும். return கூற்று கட்டுப்பாட்டை அழைப்பு கூற்றுக்குத் திருப்பி அனுப்பும்.

நிரல் :

#include<iostream>

using namespace std;

void display(int x, int y)

{

int s=x + y;

cout<<"The Sum of Passed Values: "<<s;

}

int main()

{

int a,b;

cout<<"\nEnter the First Number:";

cin>>a;

cout<<"\nEnter the Second Number:";

cin>>b;

display(a,b);

return(0);

வெளியீடு : 

Enter the First Number :50

Enter the Second Number :45

The Sum of Passed Values: 95

(iv) மதிப்பை திருப்பி அனுப்பும் மற்றும் அளபுருவை ஏற்கும் செயற்கூறு:

display(), என்ற செயற்கூறு int என்ற மதிப்பைத் திருப்பி அனுப்பும். மேலும் x மற்றும் y என்ற இரண்டு அளபுருக்கள் அல்லது செயலுருபுக்களில் மதிப்புகளை ஏற்கும். retum கூற்று கட்டுப்பாட்டை அழைப்பு கூற்றுக்குத் திருப்பி அனுப்பும்.

நிரல் :

#include<iostream>

using namespace std;

int display(int x, int y)

{

int s=x+y;

return s;

}

int main()

{

int a,b;

cout<<"\nEnter the First Number:";

cin>>a;

cout<<"\nEnter the Second Number:";

cin>>b; int s=display(a,b);

cout<<"\nExample: Function with Return Value and with Arguments”;

cout<<\"\nThe Sum of Passed Values:

"<<s;

return(0);

}

 

4. மாறியின் வரையெல்லை விதிமுறைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை: வரையெல்லை என்பது ஒரு மாறி செயல்படும் வரம்பெல்லை அல்லது அதன் வாழ்நாள் வரையாகும். மேலும் இதை விவரிக்கும் போது மாறிகளை நான்கு இடங்களில் அறிவிக்கலாம்.

(i) ஒரு தொகுதிக்குள் அறிவிக்கும்போது அவற்றை உள்ளமை மாறிகள் என்றழைக்கப்படும்.

(ii) செயல்கூறின் உள்ளே அறிவித்தால் அவற்றை செயல்கூறு மாறிகள் என்றழைக்கப்படும்.

(iii) எல்லா செயற்கூறுக்கும் வெளியே அறிவித்தால், அவற்றை பொதுமையான முழுதளாவிய (Global) மாறிகள் என்றழைக்கப்படும்.

(iv) இனக்குழுவில் உள்ளே அறிவித்தால் அவற்றை இனக்குழு மாறிகள் அல்லது தரவு உறுப்புகள் (data members) என்று அழைக்கப்படும்.

உள்ளமை வரையெல்லை:

(i) உள்ளமை மாறி, ஒரு தொகுதிக்குள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும்.

(ii) ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்.

(iii) ஓர் உள்ளமை மாறியை அது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது.

(iv) நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது, அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன. வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.

நிரல்:

//Demo to test Local Scope//

#include<iostream>s

using namespace std;

int main ()

{

int a, b;

a = 10;

b = 20;

if (a > b)

{

int temp; //local to this if block//

temp = a;

a = b;

b = temp;

}

cout <<"\n Descending order .... \n";

cout <<a <<"\t"<<b;

return(0);

}

செயற்கூற்று வரையெல்லை:

(i) செயற்கூறினுள் அறிவிக்கப்பட்ட மாறியின் வரையெல்லை அந்த செயற்கூறின் தொகுதி மற்றும் துணை தொகுதி வரை உள்ளது.

(ii) மாறியின் வாழ்நாள் செயற்கூறு தொகுதியின் வாழ்நாள் வரைக்கும் இருக்கும் முறையான அளபுருக்களின் வரையெல்லை செயற்கூறின் வரையெல்லை ஆகும்.

நிரல் :

//Demo to test Function Scope//

#include<iostream>

using namespace std;

void add(int x, int y)

{

int m=x+y; //'m' declared within function add()//

cout<<"\nThe Sum="<<m;

}

int main()

{

int a, b;

a = 10;

b = 20;

add(a,b);

return(0);

}

கோப்பு வரையெல்லை:

(i) அனைத்துக் கட்டளைத் தொகுதிகளுக்கும் செயற்கூறுகளுக்கும் மேலாக (குறிப்பாக main() செயற்கூறினுக்கு மேலே) அறிவிக்கப்படும் மாறி, கோப்பு வரையெல்லை கொண்டதாகும். கோப்பு வரையெல்லை அந்த நிரலின் முழுமையும் விரிகிறது. அதன் வாழ்நாள் அந்த நிரல் செயல்பட்டு முடியும் வரை நீடிக்கும்.

(ii) கோப்பு வரையெல்லை மாறியை முழுதளாவி மாறிகள் என்றழைக்கப்படும்.

நிரல்:

//Demo to test File or global Scope//

#include<iostream>

using namespace std;

int file_var=20; //Declared within File//

void add(int x, int y)

{

int m=x+y+file_var;

cout<<"\n The Sum="<<m;

}

int main ()

{

int a, b;

a = 10;

b = 20;

add(a,b);

cout<<”\nThe File Variable="<<file_var;

return(0);

}

இனக்குழு வரையெல்லை:

(i) பயனர்கள் புதிய தரவினங்களை உருவாக்கவும், நடைமுறைப்படுத்தவும் ஒரு புதிய வழியை இனக்குழு திறக்கிறது. வேறுபட்ட இனத்தரவுகளை ஒன்றாகச் சேர்த்து வைக்க இனக்குழுக்கள் ஒரு புதிய வழிமுறையை வழங்குகின்றன.

தரவு உறுப்புகள் தரவு மாறிகள் என்று அழைக்கப்படும், இவை இனக்குழுவின் பண்புக்கூறுகளை உணர்த்தும்.


 

5. ஒரு முழு எண்ணை உள்ளீட்டு அதை தலைகீழாக மாற்றம் செய்யும் நிரலை எழுதுக.

விடை :

#include<iostream>

using namespace std;

int main ()

{

int n, d, s = 0;

cout<<"Enter a number"<<endl;

cin>>n;

while (n! =0)

{

d=n%10;

s = (s*10)+d;

n = n/10;

}

cout<<"The reversed number is"<<s;

return 0;

}

 

ஆய்வு அறிக்கை


1. வர்க்க மூலம் (square root), அடுக்கின் மதிப்பு (power values), tan, கன மூலம் (cube root) போன்றவற்றைக் கண்டறிய செயற்கூறுகளைப் பயன்படுத்தி நிரலை எழுதுக.

விடை :

#include<math.h>

#include<iostream.h>

using namsespace std;

#include<cmath.h>

int main ();

{

int n = 81;

cout<<"Square root of a number" <<n<<" is "<<sqrt(n)<<endl;

int x=z,m=5;

cout<<"The value of 2^5 is" << pow (x,m) <<endl;

int y=125;

cout<<"Cube root of " <<y << "is" << pow (y,1.0/3.0);

long double d=0.99999;

cout<<"tan(x)="<<tan(x)<<end;

double x Degrees = 60.0;

cout<<"tan(x)=" <<tan (xDegrees *3.14/180) << endl;

return 0;

}

 

2. ஐந்து மாணவர்களின் பெயர்களை அவர்களின் தலைப்பு எழுத்தை இறுதியில் அமையுமாறு உள்ளீடாக செய்க, பெயரை ஆங்கில சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களாக வெளியீடாக செய்யவும். மேலும் ஒவ்வொரு பெயருக்கும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை வெளியீடாக பெற உரிய நிரலை எழுதுக.

விடை :

#include<iostream.h>

#include<string.h>

int main ()

{

char n[25];

for (int i = 1; i<=5; i++)

{

cout<<"Enter name"<<i<<endl;

gets(n);

cout<<strupr(n)<<endl;

cout<<strlwr(n)<<endl;

cout<<strlen(n)<<endl;

}

return 0;

}

 

3. காரணிப்படுத்துதல் (factorial), பகா எண் (prime number), ஆம்ஸ்டார்ங் எண்கள் (Armstrong numbers) போன்றவை கண்டறிய செயற்கூறுகளை பயன்படுத்தி நிரலை எழுதுக.

விடை :

(a) #inlcude<iostream.h>

void fact(int x)

{

int i, f = 1;

for (i=1; i<=x; i++)

f=f*i;

cout<<"factorial is"<<f<<endl;

}

int main()

{

int n;

cout<<"Enter a number"<<endl;

cin>>n;

fact(n);

}

(b) #inlcude<iostream.h>

void prime(int x)

{

int c = 0;

for (int i=1; i<=x; i++)

{

if (x/i==0)

c++;

}

if(c == 2)

cout<<"The given number is a prime number"<<endl;

else

cout<<"The given number is not a prime number"<<endl;

}

int main()

{

int n;

cout<<"Enter a number"<<endl;

cin>>n;

prime(n);

return 0;

}

(c) #inlcude<iostream.h>

using namespace std;

void

armstrong(int x)

{

int m = x, s = 0;

while (m! =0)

{

int d= m % 10;

s = s+ d * d * d;

m = m / 10;

}

if(s ==x)

cout<<x<<"is an Amstrong Number"<<endl;

else

cout<<x<<"is not an Amstrong Number"<<endl;

}

int main()

{

int n;

cout<<"Enter a number"<<endl;

cin<<n;

amstrong(n);

return 0;

}

 

4. ஒருவரின் பெயர் மற்றும் பாலினம் உள்ளீடாக பெற்று திரு/ திருமதி என்ற சொல்லை பெயருடன் இணைத்து வெளியிடுவதற்கு உரிய நிரலை எழுதுக.

விடை :

#inlcude<iostream.h>

int main()

{

Char .s;

char n[25];

cout<<"Enter name"<<endl;

get(n);

cout<<"Enter Gender (M or F)"<<endl;

cin>>s;

if(s == 'M')

cout<<"Mr"<<" "<<n;

else

cout<<"Ms"<<" "<<n;

return 0;

}


Tags : Functions | Computer Science செயற்கூறுகள் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 11 : Functions : Answer the following questions Functions | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - செயற்கூறுகள் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 11 : செயற்கூறுகள்