Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

அணிகள் மற்றும் கட்டுருக்கள் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 12 : Arrays and Structures

   Posted On :  05.08.2022 06:53 pm

11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

குறு வினாக்கள், சிறு வினாக்கள், நெடு வினாக்கள், முக்கியமான கேள்விகள் - கணினி அறிவியல் : C++ ஓர் அறிமுகம் : அணிகள் மற்றும் கட்டுருக்கள்

C++ - ஓர் அறிமுகம்

அணிகள் மற்றும் கட்டுருக்கள்


அணிகள்


பகுதி -

குறு வினாக்கள்


1. அணியில் பயணித்தல் என்றால் என்ன?

விடை: ஏதேனும் ஒரு செயல்பாட்டை செய்வதற்காக அணியில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஒரு முறையாவது அணுகும் செயல்முறையே பயணித்தல் எனப்படும். அணியில் உள்ள அனைத்து உறுப்புகளின் மதிப்புகளை வெளியிடுவது பயணித்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

 

2. சரங்கள் என்றால் என்ன?

விடை: குறியுருக்களின் வரிசையை சரம் என்கின்றோம், இதில் குறியுரு என்பது ஒரு எழுத்து எண் அல்லது குறியீடாக இருக்கலாம் ஒவ்வொரு குறியுருவும் நினைவகத்தில் ஒரு பைட் அளவு இடம் எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு சரமும் அதன் முடிவை குறிக்கும் வெற்றுக் குறியுருவைக் (null character-'\0', ASCII கோடு 0) கொண்டு முற்று பெற்றிருக்க வேண்டும்.

 

3. இரு பரிமாண அணியை அறிவிக்கும் தொடரியலை எழுதுக.

விடை:

இரு பரிமாண அணியை அறிவிப்பதற்கான தொடரியல்

data-type array- name [row size] [col-size];

 

பகுதி -

சிறு வினாக்கள்


1. அணி என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.

விடை: அணி என்பதுஒன்றுக்கு மேற்பட்டஒரே தரவின மதிப்புகளை பொதுவான ஒரே பெயரில் சேமிக்க ஒரு எளிய வழியாகும்.

C++-ல் அணி என்பது ஓர் தருவிக்கப்பட்ட தரவினமாகும். அணி என்பது ஒரே தரவினத்தைச் சார்ந்த மாறிகளின் திரட்டு ஆகும். அணியின் உறுப்புகளை ஒரு பொதுப்பெயரால் குறிப்பிடலாம்.

C++ மொழியில் பல்வேறு விதமான அணிகள் உள்ளன அவை:

(i) ஒரு பரிமாண அணிகள் (one dimensional arrays)

(ii) இரு பரிமாண அணிகள் (Two - dinensional arrays

(iii) பல பரிமாண அணிகள் (Multi - dimensional arrays)

 

2. சரங்களின் அணியைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

விடை: சரங்களின் அணி என்பது ஒரு இரு பரிமாண குறியுரு அணியாகும். அணி வரையறுப்பில் உள்ள முதல் சுட்டெண் (வரிசை) சரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இரண்டாவது சுட்டெண் (நெடுவரிசை) சரங்களின் உச்ச அளவு நீளத்தைக் குறிக்கும். பொதுவாக, சரங்களின் அணியை அறிவிக்கும் போதே ஒவ்வொரு சரத்தின் இறுதியிலும் வெற்றுக் குறியுருவை இணைப்பதற்கு இடமளிக்கும் வகையில் அறிவிக்கப் படல் வேண்டும். எடுத்துக்காட்டாக கீழே உள்ள இரு பரிமாண அணியை அறிவித்தலை காண்போம்.

char Name[6][10];

 

3. C++ மொழியில் உனது பெயரை உள்ளீடாக பெற்று வெளியீட ஒரு நிரலை எழுதுக.

விடை:

#include<iostream>

using namespace std;

int main()

{

char name[20];

cout<<"Enter your name"<<endl;

cin.get(name,20);

cout<<"Your name:"<<name<<endl;

return 0;

}

வெளியீடு :

Enter your name : xxxx xxxx

My name : xxxx xxxx

 

பகுதி -

பெரு வினாக்கள்


1. இரண்டு அணிக்கோவைகளில் உள்ள மதிப்புகளின் வித்தியாசம் கண்டறிய நிரலை எழுதுக.

விடை:

#include<iostream.h>

using namespace std;

int main()

{

int i,j, A[10][10], B[10][l0], m,n;

cout<<"Enter number of rows"<<endl;

cin>>m;

cout<<"Enter number of columns"<<endl;

cin>>n;

cout<<"Enter the elements of A matrix"<<endl;

for (i = 0; i<m; i++)

{

for (j = 0; j<n; j++)

{

Cin>>A[i][j];

}

}

Cout<<"Enter the elements of B matrix" <<endl;

for (i = 0 ; i<m; i++)

{

for (i = 0; i<m; i++)

{

for (j = 0; j<n; j++)

{

cin>>B[i][j];

}

}

count cc 'The difference between the matrices" <<endl;

}

for (i = 0; i<m; i++)

{

for (j = 0; j<n; j++)

{

cout<<(A[i][j] −B[i][j])<<"s/t"

}

cout <<"/n";

}

}

 

2. இரு பரிமாண அணியை செயற்கூற்றிற்கு அனுப்பும் முறையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை:

C++ மொழியில் அணிகளை செயற்கூற்றிற்கு அளபுருவாக அனுப்பலாம். C++ மொழியில் அணியை செயற்கூற்றிக்கு அனுப்பும் போது, அணியின் பெயரை அளபுருவாக குறிப்பிட வேண்டும்.

இரு பரிமாண அணியை செயற்கூறிற்கு அனுப்புதல் :

இருபரிமாண அணியில் உள்ள மதிப்புகளை வெளியிடும் நிரல்

#include<iostream>

using namespace std;

void display(int n [3][2]);

int main( )

{

int num[3][2] = {

{3, 4},

{9, 5},

{7, 1}

};

display(num);

return 0;

}

void display(int n [3][2])

{

cout<<"Displaying Values:"<<endl;

for (int i = 0 ; 1<3; ++i)

{

for (int j = 0; j <2j ++j)

{

cout <<n[i][j]<<"";

}

cout<<endl<<endl;

வெளியீடு :

Displaying values :

3 4

9 5

7 1

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிரலில் num என்ற இரு பரிமாண அணியானது display() என்ற செயற்கூற்றிற்கு அளபுருவாக அனுப்பி வெளியீடு பெறப்பட்டுள்ளது.

 

ஆய்வு அறிக்கை


1. 10 மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெற்று அவற்றின் சராசரி அவற்றுள் அதிகமான மதிப்பெண் மற்றும் குறைவான மதிப்பெண்களை காண ஒரு நிரலை எழுதுக.

விடை:

#include<iostream>

int main()

{

int m[10], i, max=0, min=0, sum=0;

float avg = 0;

for(i=0; i<10; i++)

{

Cout<<"Enter Marks of student"<<i+l<<endl;

Cin>>m[i];

sum=sum+m[i];

}

avg=sum/10;

cout<<" Average="<<avg<<endl;

max=min=m[0];

for(i=0; i<10; i++)

{

if (m[i]>=max)

max = m[i];

if(m[i]<=min)

min = m[i];

}

Cout<<"maximum mark ="<<max<<endl;

Cout<<"minimum mark ="<<min<<endl;

return 0;

}

 

2. இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய நகரங்களின் மழைநீர் அளவை உள்ளீடாகப் பெற்று அவற்றுள் அதிகமான மழையின் அளவு மற்றும் குறைந்த மழை அளவு கொண்ட நகரங்களை காண ஒரு நிரலை எழுதுக.

விடை:

#include<iostream>

int main()

{

int m[10], i, min=0, max=0, posl, pos2;

char n[4][10]={"CHENNAI", "MUMBAI", "DELHI", "KOLKATTA"};

for(i=0; i<4; i++)

{

Cout<<"Enter rainfall recorded in \t"<<n[i]<<endl;

cin>>m[i];

}

min=max=m[0];

for(i=0; i<4; i++)

{

if (m[i]>=max)

{ max = m[i];

posl = i;

}

if (m[i]<=min)

{min = m[i];

pos2 = i;

}

}

Cout<<"Highest Rainfall\t"<<n[pos1]<<endl;

Cout<<"Lowest Rainfall\t"<<n[pos2]<<endl;

return 0;

}

 

3. உங்கள் அருகாமையில் உள்ள கடைகளை ஆய்வு செய்து அதில் உங்களுக்கு விருப்பமான ஒரே ஒரு பொருளின் விலையை உள்ளீடாக பெற்று, மேலும் எந்த கடையில் அந்த பொருளை குறைவான விலையில் வாங்க இயலும் என்ற ஆய்வறிக்கையை வெளியிட நிரல் எழுதுக.

விடை:

#include<iostream>

using namespace std;

#include<stdlib.h>

#include<math.h>

int main()

{

int m[10], i,j, min=0, max=0;

char n[4] [10]={"A2B", "SANGEETHA", "NILGRIS", "SPENCERS"}, POS1;

for (i= 0; i<4; i++)

{

cout<<"Enter the amount of product in \t''<<n[i]<<endl;

cin>>m[i];

}

min=m[0];

for(i=0; i<4; i++)

{

if (m[i] < = min)

{

min = m [i];

pos1 = i;

}

cout<<"Lowest price at\t"<<n[pos1] <<endl;

return 0;

}

 

 

கட்டுருக்கள்


பகுதி -

குறு வினாக்கள்


1. வரையறு-கட்டுரு. அதன் பயன் என்ன?

விடை:

(i) வெவ்வேறு வகையான தரவு இனங்களை கொண்ட பயனர் வரையறுக்கும் தரவினம் கட்டுரு எனப்படும். இது பல்வேறு வகையான தரவு இனங்களுடன் கூடிய மாறிகளை ஒரே தொகுதிக்குள் ஒன்றிணைத்துள்ளது.

(ii) வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதியின் அறிவித்து, அவைகளுக்கு நினைவகத்தில் அருகருகே இடம் ஒதுக்க கட்டுரு உதவுகிறது.

 

2. 100 முழு எண்களை தேக்கி வைக்க கீழ்கண்டவற்றுள் எதை பயன்படுத்துவது நல்லது?

அணி () கட்டுரு.

காரணம் கூறுக.

விடை: அணி ஒரு மாதிரியான தரவு வகைகளை பொதுவான ஒரே பெயரில் சேமிக்க அணி ஒரு எளிய வழியாகும்.

 

3. பின்வரும் கட்டுரு வரையறையில் பிழை என்ன?

struct employee{ inteno;charename[20];char dept;}

Employee e1,e2;

விடை:

(i) கட்டுரு அரைபுள்ளியுடன்(;) முற்றுபெறவில்லை

(ii) தரவினத்துக்கும் மாறிக்கும் இடைவெளி இல்லை

(iii) Structure tag -ன் முதல் எழுத்து பெரிய எழுத்தில் இருக்க வேண்டும்.

சரியான கூற்று

struct Employee

{

int eno;

char ename[20];

char dept;

}

Employee e1,e2;

 

4. மாணவர் கட்டுருவில் தேர்வு எண், மாணவர் பெயர் மற்றும் 5 பாடங்களின் மதிப்பெண்களை அணியில் சேமிக்கும் மாணவர் கட்டுருவிற்கான கட்டுரு வரையை எழுதுக.

விடை:

struct Student

{

int exam no;

char name[50];

int marks[5];

};

 

பகுதி -

சிறு வினாக்கள்


1. அணி மற்றும் கட்டுருக்களை வேறுபடுத்துக.

விடை:

(i) ஒரே மாதிரியான தரவு வகைகளை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகள் தேவைப்படும் போது அவற்றை குறிக்க அணிகள் பயன்படுத்தப்படுகிறது. வெவ்வேறு தரவு வகை சார்ந்த உறுப்புகளாக இருந்தால் அணிகளை பயன்படுத்த இயலாது.

(ii) ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளை பயன்படுத்தினால் அவை நினைவகத்தில் சேமிக்கப்படும் போது ஒன்றுக்கொன்று அருகாமையான இடங்களில் இருக்காது. இதனால் தேடும் போது தேடலுக்கான நேரம் அதிகரிக்கிறது.

(iii) வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதியின் அறிவித்து, அவைகளுக்கு நினைவகத்தில் அருகருகே இடம் ஒதுக்க கட்டுரு உதவுகிறது.

 

2. பின்வரும் குறிமுறையானது S என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக்கொண்ட அனைத்து மாணவர்களின் மொத்த மதிப்பெண்களின் கூட்டு தொகையை கணக்கிட்டு திரையில் காட்டுகிறது. இதற்கு தேவையான விடுபட்ட கூற்றுகளை நிரப்பவும்.

struct student {intexamno,lang,eng,phy,che,mat, csc, total;char name[15];};

int main()

{

student s[20];

for(int i=0;i<20;i++)

{

........... //accept student details

}

for(int i=0;i<20;i++)

{

........... // 'S' என்ற எழுத்துடன் தொடங்கும் பெயரை சரிபார்க்கவும்

.............. // சரிபார்த்த பெயரை திரையில் காட்டவும்.

}

return 0;

}

விடை:

//accept Student details

Cout<<" Enter Exam number"<<endl;

cin>> s[i].examno;

Cout<<" Enter student name"<<endl;

cin>> s[i].name;

Cout<<" Enter language mark"<<endl;

cin>> s[i].lang;

Cout<<" Enter English mark"<<endl;

cin>> s[i].eng;

Cout<<" Enter Physics mark"<<endl;

cin>> s[i].phy;

Cout<<" Enter Chemisty mark"<<endl;

cin>> s[i].che;

Cout<<" Enter Maths mark"<<endl;

cin>> s[i].mat;

Cout<<" Enter Comp.sci mark"<<endl;

cin>> s[i].csc;

// 's' என்ற எழுத்துடன் தொடங்கும் பெயரை சரிபார்க்கவும்

// சரிபார்த்த பெயரை திரையில் காட்டவும்.

if (s[i].name = = ‘S')

{

Cout<<"Exam number:"<<s[i].exam<<endl;

Cout<<"Name:"<<s[i].name<<endl;

Cout<<"Language:"<<s[i].lang<<endl;

Cout<<"English:"<<s[i].eng<<endl;

Cout<<"Physics:"<<s[i].phy<<endl,

Cout<<"Chemistry:"<<s[i].che<<endl;

Cout<<"Maths:"<<s[i].mat<<endl;

Cout<<"Csc:"<<s[i].csc<<endl; 

total=s[i]. lans+ s[i].eng+s[i].phy+s[i]. che+s[i].mat+ s[i].csc;

cout<<"Total:"<<total<<endl;

}

 

3. ஒரு கட்டுருவின் உறுப்புகளை எவ்வாறு அணுக முடியும்? எடுத்துக்காட்டு தருக.

விடை:

(i) கட்டுரு தரவினத்தில் இரண்டு பொருள்களை அறிவித்தவுடன் அவற்றிற்கானதரவு உறுப்புகளை நேரடியாக அணுகலாம். பொருளானது தரவு உறுப்புகளை அணுகுவதற்கு பொருளின் பெயர் மற்றும் இரண்டு பொருள்களை அறிவித்தவுடன் அதன் உறுப்புகள் அவற்றை நேரடியாக அணுக முடியும்.

(ii) அதற்கான தொடரியலில் பொருளின் பெயர் மற்றும் உறுப்பினரின் பெயருக்கு இடையில் ஒரு புள்ளி (.) பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக மாணவர் கட்டுரு அதன் உறுப்புகளை பின்வருமாறு அணுகலாம்:

எடுத்துக்காட்டு :

balu.rollno

balu.age

 

4. கட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.

விடை:

struct structure_name {

data type member_namel;

data type member_name2;

} reference_name;

எடுத்துக்காட்டு :

struct Student

{

long rollno;

int age;

float weight;

};

 

5. பெயரற்ற கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

விடை:

பெயரற்ற கட்டுருக்கள்

பெயர் () குறிப்பு சொல் இல்லாத ஒரு கட்டுரு பெயரற்ற கட்டுரு எனப்படும்

struct

{

long rollno;

int age;

float weight;

} student;

student என்பது மேலே உள்ள கட்டுருவிற்கு குறிப்பு பெயராக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உறுப்புகளை student.rollno, student.age மற்றும் student.weight என அணுக முடியும்.

 

பகுதி -

நெடு வினாக்கள்


1. கட்டுருக்களின் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை:

ஒரு வகுப்பில் பல மாணவர்கள் இருக்கிறார்கள். எனவே ஒரு மாணவரின் கட்டுரு வரையறையை அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தலாம். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தால் 20 மாணவர்களுக்கும் தனித்தனியாக 20 கட்டுருக்கள் தேவைப்படும். இந்த தேவைக்காக கட்டுருக்களின் அணி பயன்படுகிறது. உள்ளிணைந்த தரவு வகைளில் ஒரு அணி அறிவிக்கப்பட்டது போன்றே கட்டுருக்களிலும் அணிகள் அறிவிக்க முடியும்.

பின்வரும் நிரலானது 20 மாணவர்களின் விவரங்களை உள்ளீடாக பெற்று அந்த மாணவர்களின் விவரங்களையும் அச்சிட்டு காட்டும்.

#include <iostream> 

using namespace std;

struct Student

{

int age;

float height, weight;

char name[30];

};

void main()

{

struct Student std[20];

int i;

cout<<"Enterthedetails for20 student”<<endl;

for(i=0;i<20;i++)

{

cout<< “Enter the details for student”<<i+1<<endl;

cout<< “Enter the age:"<<endl;

cin>>std[i].age;

cout<< “Enter the height:"<<endl;

cin>>std[i].height;

cout<< “Enter the weight:"<<endl;

cin>>std[i].weight;

}

cout<< "The values entered for Age, height and weight are”<<endl;

for(i=0;i<20;i++)

cout<<"Student”<<i+1<< “\t”<<std[i].age<< “\t'”<<std[i].height<< "\t'<<std[i].weight;

}

 

2. கட்டுரு மதிப்புகளுக்கு தொடக்க மதிப்பிருத்துவதற்கான பல்வேறு வழிகள் யாவை? பொருத்தமான எடுத்துக்காட்டு தருக.

விடை:

மாறிகளுக்கு மதிப்புகள் இருத்தப்படுவதை போன்றே கட்டுரு உறுப்புகளுக்கும் மதிப்பு இருத்தப்படும்.

.கா.

balu.rollno= "702016”;

balu.age= 18;

balu.weight= 48.5;

அணிகளுக்கு மதிப்பு இருத்தப்படுவதை போன்றே இதற்கும் நேரடியாக மதிப்புகளை இருத்தலாம்.

balu={702016, 18, 48.5};

 

3. பின்வரும் கட்டுரு வரையறையை பயன்படுத்தி இரண்டு தூரங்களை (distance) கூட்டுவதற்கான c++ நிரலை எழுதுக.

struct Distance{

int feet;

float inch;

}d1 , d2, sum;

விடை:

#include<iostream>

using namespace std;

struct Distance

{

int feet;

float inch;

} d1,d2,sum;

int main()

{

cout<<"Enter first distance"<<endl;

cout<<"Enter feet:"<<endl;

cin>>d1.feet;

cout<<"Enter Inch:"<<endl;

cin>>d1.inch;

cout<<"Enter Second distance"<<endl;

cout<<"Enter feet;"<<endl;

cin>>d2.feet;

cout<<"Enter Inch:"<<endl;

cin>>d2.inch;

sum.feet=d1.feet+d2.feet;

sum.inch=d1.inch+d2.inch;

if(sum.inch>12)

{

++sum.feet;

sum.inch-=12;

}

cout<<"Sum of the distances:"<<sum.feet<<endl;

cout<<sum.inch;

return 0;

}

 

4. பேராசிரியர்களை கொண்ட அணிகளை உள்ளீடுகளை அறிவித்து ஏற்கவும். கணிப்பொறி துறையின் விவரங்கள் மற்றும் A என்ற எழுத்தில் தொடங்கும் பேராசிரியர்களின் பெயர்களை காண்பிக்கவும். கல்லூரி கட்டுருவானது பின்வரும் உறுப்புகளை கொண்டிருக்க வேண்டும். prof_id ஆனது முழு எண் வகையாகவும் பெயர் மற்றும் துறையை எழுத்துருக்களின் வகையாக கொண்ட அணியாக அறிவிக்க வேண்டும்.

விடை:

#include<iostream>

using namespace std;

#include<string.h>

struct college

{

int prof.id;

char pname[20];

char dept[20];

}p[10];

int main ()

{

int i;

for (i=0; i<10; i++)

cout<<"Enter professor id"<<endl;

cin>>p[i].prof_id;

cout<<"Enter professor name"<<endl;

cin>>p[i].pname;

cout<<"Enter department"<<endl;

cin>>p[i].dept;

}

for (i=0; i<10; i++)

{

int flag=1;

if(p[i].dept= = "COMP.SCI" && p[i]. pname=='A')

cout<<p[i].prof_id<<endl;

cout<<p[i].pname<<endl;

cout<<p[i].dept<<endl;

}

if (flag==0)

cout<<"Thegiven details are not found"<<endl;

return 0;

}

 

5. பின்வரும் c++ நிரலின் வெளியீட்டை எழுதுக.

#include<iostream>

#include<stdio>

#include <string>

#include<conio>

using namespace std;

struct books {

char name[20], author[20];

} a[50];

int main()

{

clrscr();

cout<< "Details of Book No " << 1 << "\n";

cout<< "------------------------\n";

cout<< "Book Name :"<<strcpy(a[0].name, "Programming ")<<endl;

cout<< "Book Author :"<<strcpy(a[0].author, "Dromy")<<endl;

cout<< "\nDetails of Book No " << 2 << "\n";

cout<< "------------------------\n";

cout<< "Book Name :"<<strcpy(a[1].name, "C++programming" )<<endl;

cout<< "Book Author :"<<strcpy(a[1].author, "BjarneStroustrup ")<<endl;

cout<<"\n\n";

cout<< 

"=======================\n";

cout<< " S.No\t| Book Name\t|author\n";

cout<< 

"=======================";

for (int i = 0; i < 2; i++) {

cout<< "\n " << i + 1 << "\t|" << a[i].name << "\t| " << a[i].author;

}

cout<< 

"\n=====================";

return 0;

}

விடை:

வெளியீடு:

Details of Book No 1

……………………………………………

Book Name : Programming

Book Author : Dromy

Details of Book No 2

……………………………………………

Book Name : C++ Programming

Book Author : BjarneStroustrup

===========================

S.No. |   Book Name     | author

===========================

1       | Programming     | Dromy

 2      |  C++ Programming | BjarneStroustrup

===========================

 

6. பின்வரும் c++ நிரலின் வெளியீட்டை எழுதுக.

#include <iostream>

#include <string>

using namespace std;

struct student

{

 introll_no;

 char name[10];

 long phone_number;

};

int main(){

student p1 = {1,"Brown",123443};

student p2, p3;

p2.roll_no = 2;

strcpy(p2.name ,"Sam");

p2.phone_number = 1234567822;

p3.roll_no = 3;

strcpy(p3.name,"Addy");

p3.phone_number = 1234567844;

cout<< "First Student" <<endl;

cout<< "roll no : " << p1.roll_no <<endl;

cout<< "name : " << p1.name <<endl;

cout<< "phone no : " << p1.phone_number <<endl;

cout<< "Second Student" <<endl;

cout<< "roll no : " << p2.roll_no <<endl;

cout<< "name : " << p2.name <<endl;

cout<< "phone no : " << p2.phone_number <<endl;

cout<< "Third Student" <<endl;

cout<< "roll no : " << p3.roll_no <<endl;

cout<< "name : " << p3.name <<endl;

cout<< "phone no : " << p3.phone_number <<endl;

return 0;

}

விடை:

வெளியீடு:

First Student

roll no : 1

name : Brown

phone no : 123443

Second Student

roon no : 2

name : Sam

Phone no: 1234567822

Third Student

roll no : 3

name : Addy

Phone no : 1234567844

 

7. பின்வரும் நிரலில் உள்ள பிழைகளை திருத்துக.

#include <istream.h>

structPersonRec

{

charlastName[10];

chaefirstName[10];

int age;

}

PersonRecPeopleArrayType[10];

voidLoadArray(PeopleRecpeop);

void main()

{

PersonRecord people;

for (i = 0; i < 10; i++)

{

cout<<people.firstName<<

‘‘<<people.lastName

<<setw(10) <<people.age;

}

}

LoadArray(PersonRecpeop)

{

for (int i = 0; i < 10; i++)

{

cout<< "Enter first name: ";

cin<<peop[i].firstName;

cout<< "Enter last name: ";

cin>>peop[i].lastName;

cout<< "Enter age: ";

cin>> people[i].age;}

விடை:

1. #include<iostream.h>

2. struct PersonRec

{

3. char last Name[ 10];

4. char first Name[ 10];

5. };

6. PersonRec People[10];

7. void LoadArray(persoRec op)

8. PersonRec op; int i;

9. cout<<people[i]. firtName<<'\t'<<people[i]. lastName<<setw(10)<<people[i].age;

10. void Load Array( PersonRec op)

11. cin>> op[i].firstName;

12. cin>>op[i].lastname;

13. cin>>op[i].age;

14. }

சரியான நிரல் :

#include<iostream.h>

struct PersonRec

{

char lastName[10];

char firstName[10];

int age;

};

PersonRec people[ l0];

void LoadArray (People op);

void main()

{

int i;

PersonRec op;

for(i=0; i<l 0; i++)

{

Cout<<people[i].firstName <<'\t'<<people[i].lastName<< setw( 10)<<people[i].age;

}

}

void LoadArray(personRec op)

{

for(int i=0; i< 10; i++)

{

Cout<<"Enter firstName:";

Cin>>op[i].firstName;

Cout<<"Enter LastName:";

cin>>op[i].lastName;

cout<<"Enter age:";

cin>>op[i].age;

}

}

 

Tags : Arrays and Structures | Computer Science அணிகள் மற்றும் கட்டுருக்கள் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 12 : Arrays and Structures : Answer the following questions Arrays and Structures | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்