Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

மரபுரிமம் | கணினி அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Computer Science : Chapter 16 : Inheritance

   Posted On :  05.08.2022 06:04 pm

11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

குறு வினாக்கள், சிறு வினாக்கள், நெடு வினாக்கள், முக்கியமான கேள்விகள், ஆய்வறிக்கை, கொடுக்கப்பட்ட நிரல், வழக்கு ஆய்வு அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் - கணினி அறிவியல் : C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி : மரபுரிமம்

C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி

மரபுரிமம்

மதிப்பீடு


பகுதி

குறு வினாக்கள்


1. மரபுரிமம் என்றால் என்ன?

விடை: ஏற்கெனவே இருக்கும் ஓர் இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவித்தல் மரபுரிமம் எனப்படும்.

 

2. அடிப்படை இனக்குழு என்றால் என்ன?

விடை: மரபுரிமத்தினை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழுவை, மீ-இனக்குழு அல்லது அடிப்படை இனக்குழு என்கிறோம்.

 

3. தருவிக்கப்பட்ட இனக்குழு ஏன் சக்தி வாய்ந்த இனக்குழு என்று கருதப்படுகிறது?

விடை: தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்திமிக்கவை. இது கூடுதல் பண்புக்கூறுகளையும், செயல்முறைகளையும் பெற்றுக்கொண்டு செயல்திறனை அதிகரிக்க செய்கிறது.

 

4. பல அடிப்படை இனக்குழுக்கள் கொண்ட பலநிலை மற்றும் பலவழி மரபுரிமம் எந்த வகையில் வேறுபடுகிறது?

விடை:

(i) பல அடிப்படை இனக்குழுக்களிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது பல வழி மரபுரிமம் எனப்படும்.

(ii) ஓர் இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டால் அது பலநிலை மரபுரிமம் எனப்படும்.

 

5. public மற்றும் private காண்புநிலை பாங்கு வேறுபாடு தருக.

விடை:


public காண்புநிலை பாங்கு 

ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன்  தருவிக்கப்படும் போது,அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக கருதப்படுகின்றன.

private காண்புநிலை பாங்கு

ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன்  தருவிக்கப்படும்  போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள்  தருவிக்கப்படும்  இனக்குழுவில் private  உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.

 

பகுதி -

சிறு வினாக்கள்

 

1. ஓர் இனக்குழுவை தருவிக்கும்போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை யாவை?

விடை:

தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் போது கீழ்காணும், குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(i) Class என்னும் சிறப்புச் சொல் இடம்பெற வேண்டும்.

(ii) Class என்ற சொல்லை அடுத்து, தருவிக்கப்படும் இனக்குழுவின் பெயர் இடம் பெற வேண்டும்

(iii) ஒற்றை முக்காற்புள்ளி (:) இடம் பெற வேண்டும்.

(iv) Private, public அல்லது protected ஆகியவற்றுள் எத்தகைய அணுகியல்புடன் (காண்புநிலை பாங்கு) தருவிக்கப்படுகிறது என குறிப்பிட வேண்டும். காண்புநிலை பாங்கு எதுவும் குறிப்பிடப்பட வில்லையெனில், தானமைவாக காண்புநிலை private எனக் கொள்ளப்படும்.

(v) ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை இனக்குழுக்கள் (தாய் இனக்குழுக்கள்) இருப்பின், அவற்றை காற்புள்ளியிட்டு பிரிக்க வேண்டும்.

 

2. private காண்புநிலையில் இருக்கும் உறுப்புகளுக்கும், public காண்புநிலையில் இருக்கும் உறுப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

விடை:

(i) ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public உறுப்புகள் public உறுப்புகளாகவும், protected உறுப்புகள் protected உறுப்புகளாகவும் தருவிக்கப்பட்ட இனக்குழுவில் இருக்கும்.

(ii) ஓர் இனக்குழு private அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் private உறுப்புகளாக கருதப்படும்.

 

3. நிரல் முறையின் மறுபயனாக்கத்திற்கு உதவுகின்ற பல்லுருவாக்கத்திற்கும் மரபுரிமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

விடை:

(i) பல்லுருவாக்கம் செயற்கூறுகளை மறுபயனாக்கத்திற்கு அதே மாதிரியான பொருள்கள் மூலம் செயல்படுத்துகிறது.

(ii) மரபுரிமானது. ஏற்கனவே இருக்கும் இனக்குழுக்களின் அடிப்படையில் புதிய இனக்குழுக்களை தருவிக்கும்.

(iii) அடிப்படை இனக்குழுக்களின் பண்புக் கூறுகளை ஈட்டிக் கொள்ள புதிய இனக்குழுவிற்கும் அதனுடைய பொருள்களுக்கும் மரபுரிமம் வழிவகை செய்கிறது.

 

4. மேலிடல் என்றால் என்ன?

விடை:

தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும், அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும் ஒரே பெயரை பெற்றிருந்தால், தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அடிப்படை இனக்குழுவின் மரபுவழி பெறப்பட்ட செயற்கூறுகளை நிழலிடும்/மறைக்கும். இதை செயற்கூறு மேலிடல் என்கிறோம்.

 

5. மரபுரிமத்தில் இயக்கப்படும் ஆக்கிகள் மற்றும் அழிப்பிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

விடை:

(i) அடிப்படை இனக்குழுவின் ஆக்கிகள் முதலில் இயக்கப்பட்டு, அடுத்து தருவிக்கப்பட்ட இனக்குழுவின் ஆக்கிகள் இயக்கப்படும்.

(ii) தருவிக்கப்பட்ட இனக்குழு அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை மரபுவழி பெற முடியாது. ஆனால் அடிப்படை இனக்குழுவின் ஆக்கியை கீழ்கண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு வரையறுப்பின் மூலம் அழைக்கலாம்.

(iii) அடிப்படை இனக்குழு :: அடிப்படைஇனக்குழு ஆக்கி().

(iv) பல அடிப்படை இனக்குழுக்கள் இருப்பின், அதன் இயக்கம் இடது பக்க வரிசை முறையில் தொடங்கப்படும்.

(v) பலநிலை மரபுரிமத்தில், ஆக்கிகள் மரபுரிமம் பெற்ற வரிசைமுறையில் இயக்கப்படும்.

 

பகுதி -

பெரு வினாக்கள்


1. மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விவரி.

விடை:

மரபுரிமத்தின் வகைகள் : மரபுரிமத்தில் பல வகைகள் உள்ள ன. ஒரு வழி மரபுரிமம், பலவழி மரபுரிமம், பல நிலை மரபுரிமம், கலப்பு மரபுரிமம் மற்றும் படிமுறை மரபுரிமம்.


(i) ஒரு வழி மரபுரிமம்: ஒரேயொரு இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது ஒரு வழி மரபுரிமம் ஆகும்.

(ii) பலவழி மரபுரிமம்: பல அடிப்படை இனக்குழுக்களிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது பல வழி மரபுரிமம் ஆகும்.

(iii) படிமுறை மரபுரிமம்: ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுமாயின் அது படிமுறை மரபுரிமம் எனப்படும்.

(iv) பலநிலை மரபுரிமம்: மரபுரிமத்தின் மாறும் இயல்புடைய பண்புகள் இந்த வகை மரபுரிமத்தில் பிரதிபலிக்கின்றன. ஓர் இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக்கொண்டு தருவிக்கப்பட்டால், அது பலநிலை மரபுரிமம் எனப்படும்.

(v) கலப்பு மரபுரிமம்: ஒன்றுக்கு மேற்பட்ட மரபுரிம வகைகளை இணைப்பதன் மூலம் கலப்பு மரபுரிம வகையை உருவாக்கலாம். இது, பலநிலை அல்லது பலவழி மரபுரிமம், படிமுறை மற்றும் பலநிலை மரபுரிமம், அல்லது படிமுறை, பலநிலை மற்றும் பல வகை கலப்பினமாக இருக்கலாம்.

மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விளக்கும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

2. பல்வேறு காண்புநிலை பாங்கினை வரைபடத்தை கொண்டு விளக்குக.

விடை:

(i) private காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்படை இனக்குழு private என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள் தருவிக்கப்படும் இனக்குழுவில் private உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.


(ii) protected காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்டை இனக்குழு protected என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected மற்றும் public உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாக கருதப்படுகின்றன.


(iii) public காண்புநிலை பாங்கு: ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் protected உறுப்புகள், தருவிக்கப்படும் இனக்குழுவில் protected உறுப்புகளாகவும், public உறுப்புகள் public உறுப்புகளாக கருதப்படுகின்றன.


 

3. பின்வரும் C++ நிரல் குறிமுறைக் கொண்டு, கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.

#include<iostream>

#include<string.h>

#include<stdio.h>

using name spacestd;

class publisher

{

char pname[15];

char hoffice[15];

char address[25];

double turnover;

protected:

char phone[3][1O];

void register();

public:

publisher();

~publisher();

void enter data();

void disp data();

};

class branch

{

charbcity[15];

char baddress[25];

protected:

intno_of_emp;

public:

charbphone[2][10];

branch();

~branch();

void have data();

void give data();

};

class author: public branch, publisher

{

intaut_code;

charaname[2O];

float income;

public:

author();

~author();

voidgetdata();

voidputdata();

};

3.1. நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?

விடை: பலவழி மரபுரிமம்.

3.2. அடிப்படை. இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கு யாது?

விடை: Public.

3.3. Author இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.

விடை: Constructor Order :

(i) Constructor of base class publisher.

(ii) Constructor of base class branch.

(iii) Constructor of derived class author.

Destructor Order:

(i) Destructor of derived class author.

(ii) Destructor of base class branch.

(iii) Destructor of base class publisher.

3.4. அடிப்படை இனக்குழுக்கள் மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் பெயரை குறிப்பிடுக.

விடை: Base Classes :

(i) Publisher

(ii) Branch

Derived Class : Author.

3.5. பின்வரும் இனக்குழுவின் பொருள் எத்தனை பைட்டுகளை எடுத்துக் கொள்ளும்?

(a) publisher (b) branch (c) author

விடை:

(a) 94 bytes

(b) 64 bytes

(c) 28 bytes.

3.6. author இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.

விடை: Data members accessed:

(i) Phone

(ii) no_of_emp

(iii) out-code

(iv) aname

(v) income.

3.7. author இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்கள் குறிப்பிடுக.

விடை: Member functions accessed:

(i) register ( );

(ii) enterdata ( );

(iii) have data ( );

(iv) give data ( );

(v) get data ( );

(vi) put data ( ) ;

3.8. author இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.

விடை: getdata ( ) மற்றும் putdata ( ) அணுகக்கூடிய தரவு உறுப்புகள் phone, no_of_emp, out-code, aname, income register(), enterdata(), dispdata (), havedata () and givedata().

 

4. பின்வரும் C++ நிரல் குறிமுறைக் கொண்டு, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

class Personal

{

int Class,Rno;

char Section;

protected:

char Name[20];

public:

personal();

void pentry();

voidPdisplay();

};

class Marks:private Personal

{

float M{5};

protected:

char Grade[5];

public:

Marks();

void M entry();

void M display();

};

class Result:public Marks

{

float Total,Agg;

public:

char FinalGrade, Commence[20];

Result();

void R calculate();

void R display();

}:

 

4.1. நிரல் குறிமுறையில் எந்த வகை மரபுரிமம் குறிப்பிடப்பட்டுள்ளது?

விடை: பலநிலை மரபுரிமம்.

4.2. அடிப்படை இனக்குழுக்களின் காண்புநிலை பாங்கினை குறிப்பிடுக.

விடை: Private, Public.

4.3. Result இனக்குழுவிற்கு பொருள் உருவாக்கப்படும்போது, ஆக்கி, அழிப்பி இயக்கப்படும் வரிசைமுறையை எழுதுக.

விடை: Constructors :

(i) Personal ( )

(ii) Marks ( )

(iii) Result ( )

Destructor :

(i) Result ( )

(ii) Marks ( )

(iii) Personal ( )

4.4. அடிப்படை இனக்குழு(க்கள்) மற்றும் தருவிக்கப்பட்ட இனக்குழு(க்கள்) பெயர்களை குறிப்பிடுக.

விடை: Base Classes : Personal

Derived Classes : Marks, Result.

4.5. பின்வரும் இனக்குழுக்களின் பொருள் எத்தனை பைட்டுகள் எடுத்துக் கொள்ளும்?

(a) Personal (b) Marks (c) Result

விடை:

(a) 25 bytes

(b) 25 bytes

(c) 29 bytes.

4.6. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு தரவுகளின் பெயர்களை குறிப்பிடுக.

விடை: Total, Agg, Grade, Final Grade, Commence.

4.7. Result இனக்குழுவின் பொருளால் அணுகக்கூடிய உறுப்பு செயற்கூறுகளின் பெயர்களை குறிப்பிடுக.

விடை: RCalculate ( ), Rdisplay ( ), Mentry ( ), Mdisplay () Pentry ( ), Pdisplay ().

4.8. Result இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அணுகக்கூடிய தரவு உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.

விடை: Total, Agg, Grade, final grade, commence Rcalculate (), Rdisplay (), Mentry (), Mdisplay (), Pentry ( ), Pdisplay ().

 

5. கீழ்காணும் நிரலுக்கு வெளியீட்டை எழுதுக.

#include<iostream>

using namespace std;

class A

{

protected:

int x;

public:

void show()

{

cout<<"x = "<<x<<endl;

}

A()

{

cout<<endl<<" I am class A "<<endl;

}

~A()

{

cout<<endl<<" Bye ";

}

};

class B : public A

{

{

protected:

int y;

public:

B(int x, int y)

{

this->x = x; //this -> is used to denote the objects datamember

this->y = y; //this -> is used to denote the objects datamember

}

B()

{

cout<<endl<<" I am class B "<<endl;

}

~B()

{

cout<<endl<<" Bye ";

}

void show()

{

cout<<"x = "<<x<<endl;

cout<<"y = "<<y<<endl;

}

};

int main()

{

objA;

 objB(30, 20);

objB.show();

return 0;

}

விடை :

I am class A

I am class B

x = 30

y = 20

Bye

Bye

 

6. கீழ்கண்ட நிரலில் உள்ள பிழைகளை கண்டறிந்து பிழைதிருத்தம் செய்க.

வெளியீடு

----------------

15

14

13

நிரல் :

------------------

%include(iostream.h)

#include<conio.h>

Class A

[

public;

int a1,a2:a3;

Void getdata[]

{

a1=15;

a2=13; a3=13;

}

}

Class B:: public A ()

{

PUBLIC

Voidfunc()

{

int b1:b2:b3;

A::getdata[];

b1=a1;

b2=a2;

a3=a3;

cout<<b1<<'\t <<b2«<?t\?<<b3;

}

void main()

{

clrscr()

B der;

der1:func();

getch();

}

விடை :

(i) #include<iostream.h>

(ii) class A

(iii) void getdata()

(iv) a2 = 14;

(v) };

(vi) class B: public A

(vii) public :

(viii) void func()

(ix) int bl,b2, b3;

(x) A:: getdata ( );

cant <<b1>> ' 1t' <<b2>>' 1t'<<b3;

};

(xi) clrscr;

(xii) B derl;

(xii) derl. func (); 

 

Tags : Inheritance | Computer Science மரபுரிமம் | கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 16 : Inheritance : Answer the following questions Inheritance | Computer Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - மரபுரிமம் | கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்