Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany

   Posted On :  18.12.2022 04:33 pm

12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சிறு வினாக்கள்,பெறு வினாக்கள்

தாவரவியல் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்


பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்


15. சோற்றுக்கற்றாழையின் ஒப்பனைப் பயன்பாட்டை எழுது 

* அலாயின் (குளுக்கோசைடுகளின் கலவை) மற்றும் இதன் களிம்பு தோலுக்கு ஊட்டமளிக்கும். 

* குளிர்ச்சியான, ஈரப்பதமூட்டும் பண்பு. களிம்பு, பூச்சு, ஷாம்பு, முகச்சவர களிம்பு செய்யப் பயன்படும். 

* மூப்படைந்த தோலைப் பொலிவாக்கும். 

* இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குழைவுத் தன்மை, பாக்டீரிய எதிர்ப்பி, ஆக்சிஜ னேற்ற எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி, கிருமி நாசினி பண்புகள் கொண்டது. 

 

16. பொய் தானியம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக 

* புல் குடும்பத்தை சாராத தாவரங்களிலிருந்த பெறப்பட்டு உண்ணப்படும் தானியங்கள். 

* (எ.டு) கீனோபோடியம் கினோவா, அமராந்ததேசி குடும்பத்தைச் சார்ந்தது. 

* குளூட்டன் இல்லா முழுதானிய கார்போஹைட் ரேட்டும், முழுமையான புரதமும் உடையது (முழுமையான புரதம் - அனைத்து 9 இன்றியமை யாத அமினோ அமிலங்களை கொண்ட 

* கடினமான புரதம்). 6000 ஆண்டுகளாக மலைப் பகுதிகளில் உண்ணப்படுகிறது. 

 

17. மரச்சாமான்கள் (நாற்காலி போன்றவை) செய்ய உகந்த கட்டை எது என்பதை விவரி . 

* தென்கிழக்கு ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்ட தேக்கு (டெக்டோனா கிராண்டிஸ்) 

* புதிய வன்கட்டை , தங்கநிறப் பழுப்பாகவும், ஒளியில் வெளிப்படும்போது, அடர்நிறமாகவும் மாறும். 

* கரையான், பூஞ்சைகளுக்கு எதிர்பாற்றல் கொண்டது. எனவே நீண்ட காலப் பயன் பாட்டுக்கு உகந்தது. 

* உடைதல், கீறல் இல்லாததால் தச்சர்களுடன் தோழமையானது. 

* இரயில் வண்டி, பார வண்டி, கப்பல், பாலம், படகு, க்தவு நிலைகள், கதவுகள் செய்யப் பயன்படும். 

 

18. வேதிச் சாயத்தை போடும் ஒருவருக்கு எரிச்சல் வருகிறது. நீங்கள் அதற்கு மாறாக எதை சிபாரிசு செய்வீர்கள். 

* லாசோனியா இனெர்மிஸ், தண்டு. இலைகளில் இருந்து “ஹென்னா” என்ற ஆரஞ்சுச் சாயம் பெறப்படும். 

* இலைகளின் முக்கியப்பொருளான “லாகோசோன்” தீங்கற்றது.

* தோலில் எரிச்சல் கொடுக்காது. 

* தோல், முடி, நகங்களுக்குச் சாயமிடப் பயன்படும்.

* குதிரைவால், தலைமுடி சாயமிட உதவும். 

 

19. மனித ஆரோக்கியத்திற்குக் காரணமான உடல் நீர்மங்களின் பெயர்களைத் தருக

* வாதம் * பித்தம் * கபம் 

 

20. இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக

* மாற்று வேளாண்மை முறை. 

* உயிரியியல் இடுபொருட்களைப் பயன்படுத்தி, இயற்கையாகத் தாவரங்கள் பயிரிடப்படும். 

* இதனால் மண்வளமும், சுற்றுச்சுழலும் பராமரிக்கப்படும். \

* மாசு, இழப்பு குறைக்கப்படும்.

 

21. 'கசப்புகளின் அரசன்' என அழைக்கப்படுவது எது? அதன் மருத்துவ முக்கியத்துவத்தை குறிப்பிடு. 

* நிலவேம்பு (ஆண்ட்ரோகிராபிஸ் பானி குலேட்டா).

* கல்லீரல் பாதுகாப்பி 

* கல்லீரல் நோய்களுக்குப் பயன்படும். 

* நிலவேம்பும். 8 மூலிகைகளும் சேர்ந்தே நில வேம்புக் குடிநீர் மலேரியா, டெங்கு சிகிச்சையின் போது பயன்படும். 

* கசப்புகளின் அரசன் (த கிங் ஆப் பிட்டர்ஸ்) என அழைக்கப்படுகிறது. 

 

22. உயிரி மருந்து, தாவர மருந்து வேறுபடுத்துக

உயிரி மருந்து (Bio Medicine) தாவரங்களினின்று பெறப்படும் மருத்துவ மூலக்கூறுகளுள்ள மருந்துகள் உயிரி மருந்தாகும். தாவர மருந்து (Botanical Medicines) பொடிகள் அல்லது வேறு வகைகளில் சந்தைப்படுத்தப்படும் மருத்துவ தாவரங்கள் தாவர மருந்துகள் (Botanical Medicines) எனப்படும்.

 

23. பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்பின் தோற்றம் மற்றும் விளையுமிடத்தை எழுதுக. 

1. துவரை (Red gram) 

தோற்றம், விளையுமிடம் 

தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை. மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம், குஜராத்தில் பயிரிடப்படும். 

2. பாசிப்பயறு (Green gram) 

தோற்றம், விளையுமிடம் 

இந்தியாவில் தோன்றியதற்கான தொல்லியப் சான்றுகள் மகாராஷ்டிராவில் கிடைத்தன. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாட்டில் அதிகப் பயிரிடப்படும். 

 

24. சிறுதானியங்கள் என்றால் என்ன? அதனுடைய வகைகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக் காட்டு தருக. 

சிறு தானியங்கள் (Millets) 

ஆப்பிரிக்கா, ஆசியாவில், பழங்கால மக்களால். பயிரிடப்படும் சிறிய விதைகள், சிறுதானியங்கள் எனப்படும். தரச புரச பசையற்ற (குளூட்டன்) குறைவான சர்க்கரை கொண்ட தானியம். 

கேழ்வரகு (Finger Millet) (எல்லுசின் கோரகனா) கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து, இந்தியாவுக்கு வந்த கால்சியம் நிறைந்த பயிர். 

பயன்கள் 

* இந்தியத் தெற்கு மலைப்பகுதியில் முக்கிய உணவு. 

* கஞ்சி, கூழாகப் பயன்படும். 

* ராகிமால்ட், ஊட்டச் சத்துப் பானம். 

* கேழ்வரகு நொதிப்பானங்கள் தயாரிப்பில் மூலப் பொருள். 

* சோளம் (Sorghum) (சொர்கம் வல்கேர்) உலகின் முக்கிய சிறுதானியங்களில் ஒன்று. கால்சியம். இரும்புச் சத்து உள்ளது. 

பயன்கள் 

* கோழி, பறவை, பன்றி. கால்நடைத் தீவனம் 

* சாராய பானங்களின் மூலப்பொருள். மிகச் சிறு தானியங்கள் (Minor Millet) • தினை (Foxtail Millet) (சிட்டேரியா இடாலிக்கா)

* இந்தியாவின் பாரம்பரிய தினை வகைகளில் ஒன்று. 

* 6000 வருடங்களுக்கு முன் சீனாவில் வளர்க்கப்பட்டது. 

* புரதம், கார்போஹைட்டிரேட், வைட்டமின் B, C, பொட்டாசியம். கால்சியம் நிறைந்துள்ளது . 

பயன்கள் 

இதய பலம், கண் பார்வை மேம்பாடு, பாலூட்டும் அன்னையர்க்குக் கொடுக்கப்படும். 

வரகு (பஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்) 

மேற்கு ஆப்பிரிக்காவில் பிறந்தது. நார்ச்சத்து, புரதம், கனிமம் நிறைந்தது. 

பயன்கள் 

வரகு மாவுக் களி, சிறுநீர் பெருக்கி, மலச்சிக்கல் குணமாகும். உடல் பருமனைக் குறைக்கும். இரத்தச் சர்க்கரை. இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

 

25. ஒருவர் தினமும் ஒரு கோப்பை காஃபி அருந்துவது அவருடைய ஆரோக்கியத்திற்கு உதவும். . இது சரியா? சரியென்றால் நன்மைகளை வரிசைப்படுத்து.

காஃபியின் நன்மைகள் 

* காஃபெயின் அசிட்டைல்கோலைன் என்ற நரம்பிடைக் கடத்தி செயல்திறனை அதிகரிக்கிறது.

* கொழுப்படைத்த கல்லீரல் நோய், சிர்ரோசிஸ் (கல்லீரல் இழைநார் நோய்) புற்றுநோய்களை குறைக்கிறது. 

* இரண்டாம் வகைச் சர்க்கரை நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது.

 

26. மஞ்சளின் பயன்களை பட்டியலிடுக. 

மஞ்சளின் பயன்கள் :

* குழம்பு பொடியின் கலவைப் பொருள். 

* மருந்தக, இனிப்புப் பண்ட, உணவுத் தொழிற் சாலைகளில் நிறமூட்டி. 

* விழாக்களில் மஞ்சள் தடவிய புனித அரிசி பயனாகிறது 

* தோல், நூல், பேப்பர், விளையாட்டுப் பொருட்களை நிறமூட்டப் பயன்படும். 

* மஞ்சள் நிறத்துக்குக் காரணமான 'குர்குமின் என்ற வேதிப்பொருள் ஆண்டி- ஆக்ஸிடெண்ட். 

* புற்றுநோய், வீக்கம், சர்க்கரை நோய், பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் எதிர்ப்புப் பொருள். 

* இரத்தக்குழாய்களில் தட்டை செல்கள் உறைதலைத் தடுத்து, மாரடைப்பைத் தடுக்கும். 

 

27. பாரம்பரிய மருத்துவ முறைகள் என்றால் என்ன? அது எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? அவற்றின் நோக்கங்கள் யாவை? 

பாரம்பரிய மருத்துவ முறையின் வகைகள் 

i) நிறுவன மயமாக்கப்பட்ட (அல்லது) ஆவணப் படுத்தப்பட்ட முறை 

* இதில் சித்தா, ஆயுர் வேதா என்ற இந்திய முறைகள் 2000 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. 

* அறிகுறிகள், நோய் கண்டறிதல், குணப்படுத்தும் மருந்து தயாரித்தல், அளவு மற்றும் உணவு, சிகிச்சை உணவு, தினசரி மற்றும் பருவகால உணவு ஆகியன உள்ளன 

ii) நிறுவனமயமாக்கப்படாத முறை

* ஆவணங்கள் இல்லை. 

* இத்தகைய அறிவு வாய்மொழியாக உள்ளது.

* கிராமப்புற. பழங்குடி மக்களால் நடை முறைப் படுத்தப்படும் 

பாரம்பரிய முறையின் கவனம் 

* ஆரோக்கியமான வாழ்க்கை முறை. 

* ஆரோக்கியமான உணவு. 

* ஆரோக்கியத்தைப் பராமரித்தல்.

* நோயைக் குணப்படுத்தல். 

i) சித்த மருத்துவம் '

* தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மிக பரவலான மருத்துவ முறையாகும். 

* 18 சித்தர்கள் எழுதிய நூல்களை அடிப்படையாக கொண்டது. 

* வாதம், பித்தம், கபம் ஆகிய உடல் நீர்மங்கள் நீர்மங்களின் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும். 

* கனிமங்களைப் பயன்படுத்தி நீண்ட நாட்கள் இருக்கும் மருந்துப் பொருட்களை தயாரிக்கின்றன. 

* சுமார் 800 மூலிகைகள் பயன்படுத்தப் படுகின்றன. 

* நோய் தடுப்ப, உடல் நலம் மேம்பாடு புதுப்பொலிவு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

ii) ஆயுர்வேத மருத்துவம் 

ஆயுர்வேதம் பிரம்மனிடமிருந்து தோன்றியது. சரகா, சுஷ்ருதா, வாக்பட்டா ஆகிய ஏடுகளி லிருந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிர்மங்களை அடிப்படையாக கொண்டது இது மூலிகை தாவரங்களிலும், விலங்குகளிடம் இருந்து ஆதாரத்தைப் பெறுகின்றன. இமாலய மூலிகை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஆயுர்வேத குணப்பாடநூல் சுமார் 500 மூலிகைகளை பட்டியலிடுகிறது. 

iii) மக்கள் மருத்துவமுறை :  

இருளர்கள், மலையாளிகள், குரும்பர்கள், பளியன்கள் காணிகள் ஆகியோர்களால் அறியப் பட்டது. இது கிராமப்புற மற்றும் பழங்குடிமக்களின் பாரம்பரிய வாய்மொழி மருந்தாக உள்ளது.

 

28. கொட்டைப்பழங்களின் பயன்களில் நீயறிந்ததை எழுதுக. 

கொட்டைப் பழங்களின் பயன்கள் 

ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது, எதிர் ஆக்ஜினேற்றிகள் உள்ளன. 

பயன்கள் (முந்திரி) 

* இனிப்பு, பிற பண்டங்களை அலங்கரிக்க. 

* பசை, குழம்பு, இனிப்பு வகைகளின் மூலப் பொருட்கள். 

* வறுத்த முந்திரி தின்பண்டங்களாகும்.

 

29. நறுமணத்தைலங்களில் மல்லி மற்றும் ரோஜாவின் பங்கினைத் தருக 

பெர் ஃபியூம் (Perfume) என்ற இலத் தீன் வார்த்தை 'புகைவழி' என்று பொருள் படும். மணமுள்ள, எளிதில் ஆவியாகும் எண்ணைக ளினின்று இவை தயாரிக்கப்படும் (எ.டு ரோஜா, மல்லிகை மலர்கள்) 

பயன்கள் (மல்லிகை) 

* வழிபாடு, சடங்கு, தூபங்கள், புகையூட்டிகள், முடித்தைலம், ஒப்பனைப்பொருள், சோப்பு தயாரிக்கப்பயன்படும். 

* சுகமான, இதம் தரக்ககூடிய, மனச்சோர்வை நீக்குவது. 

* பிற வாசனைத் திரவியங்களுடன் நன்கு கலப்பதால், நறுமணத்தைலம், ஒப்பனைப் பொருள், காற்று மணமூட்டி (Air Freshner), வியர்வைக் குறைப்பி, முகப் பவுடர், ஷாம்பு, நாற்றம் நீக்கி தயாரிக்க பயன்படும். 

ரோஜா : 

ரோஜா எண்ணெய் பழமையானது. அதிக விலை உள்ள நறுமணத் தைலங்களில் ஒன்று. 1000 கிராம் மலர்களிலிருந்து சராசரியாக 0.5 கிராமுக்குச் சற்று குறைவாக எண்ணெய் கிடைக்கிறது. 

பயன்கள் : 

* வாசனைத் திரவியங்கள், வாசனைசோப்புகள், மென்பானம், மதுபானம், புகையிலை, மெல்லும் மற்றும் புகைக்கும் புகையிலை ஆகியவற்றில் பயன்படுகிறது. 

* இந்தியாவில் பன்னீர் கண் திரவியங்கள், கண் கழுவிகளில் பயன்படுகிறது. 

* பினைல் எத்தில் ஆல்கஹால் மற்றும் இனிப்பு வகைகள் நீர்ப்பாகு மற்றும் மென்பானங்களில் பயன்படுகிறது. 

* சுபநிகழ்வுகளில் விருந்தினர்களை வரவேற்க அவர்கள் மீது தெளிக்கப்படுகின்றன. 

 

30. நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக. 

I). கீழாநெல்லி (பில்லாந்தஸ் அமாரஸ்) (செயலாக்க மூல மருந்து) ஃபீலாந்தின் 

மருத்துவ முக்கியத்துவம் 

* மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதுகாப்பு மருந்து 

* டாக்டர் தியாகராஜன், ஃபிலாந்தஸ் அமாரஸ் ஹெப்படைடிஸ் வைரஸ் தாக்குதலை எதிர்க்கிறது என நிரூபித்தார். 

II) நில வேம்பு (ஆண்ட்ரோகிராபிஸ் பானிகு லேட்டா) (செயலாக்க மூல மருந்து) 

ஆன்ட்ரோகிராஃபலைடுகள் 

மருத்துவ முக்கியத்துவம் 

* கல்லீரல் நோய்களுக்கு மருந்து 

* எட்டு மூலிகைகளுடன் சேர்த்து தயாரிக்கப்படும். நிலவேம்புக் குடிநீர், மலேரியா, டெங்கு சிகிச்சைக்குப் பயன்படும். 

 

31. அரிசியின் பொருளாதார முக்கியத்துவத்தை தருக 

* கலோரி மிகுந்த, எளிதில் செரிக்கக்கூடிய, தெற்கு, வடகிழக்கு இந்திய உணவு. 

* அவல், பொரி காலை உணவு, சிற்றுண்டியாகப் பயன்படும். 

* தவிட்டு எண்ணை சமையல் , தொழிற் சாலைகளில் பயன்படும். 

* உமி எரி பொருளாக, பொதி கட்ட, உரம் தயாரிக்க பயன்படும்.  

 

32. தமிழ்நாட்டில் எந்த மருத்துவ பாரம்பரிய முறை (TSM) பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டதும், கலாச்சார ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும்? விளக்குக?

சித்த மருத்துவம் : 

* பிரபலமாக, நடைமுறை கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

* 18 சித்தர்கள் எழுதிய நூல்களை அடிப்படை, யாகக் கொண்டது. 

* கவிதை வடிவில் ஆவணப்படுத்தப்பட்டது. 

* பஞ்சபூதத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. 

* வாதம், பித்தம், கபம் போன்ற 3 நீர்மங்களில் ஏற்படும் மாற்றம் உடல்நலத்தைப் பாதிக்கும். 

* தாவரங்கள், விலங்குகள், பாசிகள், கடற் பொருள்கள், தாதுக்கள் ஆகியவை சித்த மருந்தின் மூலங்கள். 

* தனிமங்களிலிருந்து, நீண்ட நாள் இருக்கும் மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படும்.

* 800 மூலிகைகள் இதன் ஆதாரம். 

* நோய்த் தடுப்பு, உடல் நல மேம்பாடு, புதுப் பொலிவு, குணப்படுத்தும் சிகிச்சையில் கவனம் செலுத்தப்படும்.

 

33. புலனுணர்வுமாற்ற மருந்துகள் என்றால் என்ன? அபின் மற்றும் கஞ்சாச்செடி பற்றிய குறிப்பு வரைக. 

* சில தாவர வேதிப்பொருட்கள், ஒருவருடைய புலனுணர்வுக் காட்சிகளில் (Perception) மருட்சியை ஏற்படுத்தும். இவை புலணுணர்வு மாற்ற மருந்துகள். 

1. அபின் / கசகசா (Opium Poppy) 

தாவரவியல் பெயர் : பப்பாவர் சாம்னிபெரம் 

குடும்பம் : பப்பாவரேசி 

தோற்றம். விளையுமிடம் 

* தென்கிழக்கு ஐரோப்பா, மேற்கத்திய ஆசியா பிறப்பிடம். மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், உத்திரப்ப பிரதேசம், வளர்க்க உரிமம் பெற்றவை. 

* தூக்கத்தை தூண்டும். மார்பின் ஒரு வலி நிவாரணி. அறுவைச் சிகிச்சையில் பயன்படும். அடிமைப்படுத்தும் மருந்து. 

2. கஞ்சா செடி (Cannabis) 

தாவரவியல் பெயர் : கன்னாபிஸ் சட்டைவா 

குடும்பம் : கன்னா பியேசி 

தோற்றம். விளையுமிடம் 

* ‘சீனாதான் பிறப்பிடம். குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், உத்திரப்பிரதேசம். மத்தியப் பிரதேசம் வளர்க்க சட்டப்பூர்வ அனுமதி பெற்றவை. 

* மூல மருந்து - டிரான்ஸ் - ட்ெராஹைட்ரோ கெனாபினால் (THC) 

* வலி நிவாரணி 

* இரத்த அழுத்தம் குறைக்கும்

* கிளாக்கோமா எனும் கண் அழுத்தத்துக்கு சிகிச்சை 

* புற்று நோய்களுக்கு கீமோ தெரபி, கதிர்வீச்சுக் சிகிக்சைக்கு குமட்டலைக் குறைக்கும்

* சுவாசக் குழாய் விரிவடையச் செய்யும். 

* நீண்ட காலப் பயன்பாடு போதை தரும்.

தனிநபர், சமுதாய பயன்பாடு ஆரோக்கியக் கேடு. எனவே பல நாடுகள் பயிரிட தடை விதித்துள்ளன.

 

34. நறுமணப்பொருட்களின் அரசன், அரசி யாவை? அவற்றை விளக்கி, அவற்றின் பயன்களையும் விளக்குக.

நறுமணப் பொருட்களின் அரசி - ஏலக்காய் : 

தாவரவியல் பெயர் : எலிட்டரியா கார்டோமோமம் 

தோற்றம். விளையுமிடம் : 

தென்னிந்தியா, ஸ்ரீலங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை, வடகிழக்கு இந்தியா. 

பயன்கள் : 

* நறுமணம், வெதுவெப்பான பண்பு, காரச்சுவை கொண்டவை. 

* மிட்டாய்த் தொழிற்சாலை, அடுமனைத் தயாரிப்பு, புத்துணர்வான நறுமணப் பொருள். 

* குழம்புப் பொடி, ஊறுகாய். கேக் தயாரிப்பு. 

* மருத்துவத்தில் தூண்டி, அபான வாயு நீக்கி, வாயு நறுமண மூட்டி. 

நறுமணப் பொருட்களின் அரசன் - (இந்தியாவின் கருந்தங்கம்) : 

கருமிளகு (பைப்பர் நைக்ரம்) 

தோற்றம். விளையுமிடம் : 

மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது. காரத் தன்மைக்கு அல்கலாய்டு பைப்பரின் காரணம். 

பயன்கள் : 

* சாஸ், சூப், குழம்புப்பொடி, ஊறுகாய் தயாரிக்க ... மணமூட்ட பயன்படும். 

* மருத்துவத்தில் உமிழ்நீர்; வயிற்றுச் சுரப்பு, செரிப்பு மருந்து. மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சலை அதிகரிக்கும். .

 

35. உன் வீட்டுத் தோட்டத்திற்கான இயற்கை பூச்சிக் கொல்லியை, வீட்டிலுள்ள காய்கறிகளைப் பயன்படுத்தி எவ்வாறு தயாரிப்பாய்? 

* 120 கிராம் கார மிளகாயுடன், 110 கிராம் பூண்டு , வெங்காயம் சேர்க்கவும். 

* கைகளாலோ, மின் அரவையாலோ கூழாக்க வேண்டும். 

* 500 மிலி வெதுவெப்பான நீருடன் கலக்கு. 

* கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி, ஒளிபடும் இடத்தில் 24 மணி நேரம் வைக்கவும். 

* வடிவட்டி, தெளிப்பானில் ஊற்றி வைக்கவும். 

* நோய் தாக்கிய தாவரத்தில் 4-5 நாட்களுக்கு, 3 அல்லது 4 முறை தெளிக்கவும்.

Tags : Economically Useful Plants and Entrepreneurial Botany பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்.
12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany : Answer the following questions Economically Useful Plants and Entrepreneurial Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 10 : பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்