Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் | தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

   Posted On :  06.07.2022 09:31 pm

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்வி பதில் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

11 வது தாவரவியல் : அலகு 5

வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

 

6. உயிரியப் பல்வகைமையைப் பாதுகாப்பதில் தேசிய பூங்காக்களின் பங்கினை விவரி.

1. அழகுணர்ச்சிப் பண்பு (Aesthelic Value)

அலங்காரஅழகுமிகைத் தாவரங்கள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

2. அறிவு - ஆராய்ச்சி

பெருமளவு காணப்படும் தாவரச் சிற்றினங்கள் தாவரவியல் அறிவு - ஆய்வு.

சுய வழிகற்றல் - செயல்முறை ஆராய்ச்சிக்கு உதவுகிறது.

3. பல்வேறு துறைகளின் தகவல்களை ஒருங்கிணைக்கிறது

தாவர உள்ளமைப்பியல், கருவியல், தாவர வேதியியல் செல்லியல், வாழ்வியல் சூழ்நிலை உயிரியல் போன்ற தகவல்களை ஒருங்கிணைத்துப் பயில உதவுகிறது..

4. உயிர் பன்மத் தன்மை பாதுகாக்கும் மையங்கள்

அழியும் நிலையிலுள்ள தாவரங்களைப் பாதுகாக்கும் மையங்களாக உள்ளன.

5. ஆண்டு தாவரச் சிற்றினங்கள் விதை பரிமாற்ற மையங்கள்

ஆண்டுதோறுமுள்ள தாவரங்களின் தொகுப்பு கூடவே விதை - பரிமாற்றம் செய்யும் மையங்களாக விளங்குகின்றன.

6. தாவர சிற்றினங்கள் விற்பனை

விற்கப்படுவதோடு அவை பற்றிய தகவல்களையும் வழங்குகின்றன.

7. அதிகம் கவருபவை -

மரத்தோட்டம் உயிர் களஞ்சிய சேகரிப்பு மூங்கில் தொகுப்பகம்,

பூச்சியுண்ணும் தாவரங்கள் புகழ்மிக்க பெரிய ஆலமரம்.

8. எடுத்துக்காட்டுக்கள்

இவை முறையே லக்னோ, திருவனந்தபுரம், ஏர்காடு, கோலகட்டா போன்றவை.

 

7. இரு விதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்?

* இரு வித்திலையை உடைய தாவரங்கள் இருவித்திலை (அ) 'டைகாட்டலிடனே பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

* கோப்பை வடிவபூத்தளம் - 'தலாமிபுளோரேஎன்ற வரிசையின் சிறப்புப் பண்புகளாகும்.

* இந்த வரிசை 'பாலிஃபெட்டாலேஎன்ற துணை வகுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது

வகுப்பு - இருவித்திலைத் தாவரம்துணைவகுப்பு - பாலிஃபெட்டாலேவரிசை - தலாமிஃபுளோரே

 

8. உயிரினங்களின் பரிணாம வரலாற்றுப் பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன?

வரையறை:

மூலக்கூறு வகைபாடு என்பது இனப்பரிணாம வளர்ச்சி முறையின் ஒரு பிரிவு.

இதன் நவீனமுறைகள் - மூலக்கூறு வகைபாடு மற்றும் உயிரிதுறை மரபியல் மேம்படுத்தப்பட்ட பகுத்தாய்வுக்கு ஊக்கமும் துல்யத்தன்மையையும் கொடுத்து புரட்சியை ஏற்படுத்துக்கிறது. இது பாரம்பரிய மூலக்கூறு வேறுபாடுகளைக் கொண்டு

1. DNA வரிசையிலுள்ள தகவல்களைப்பெறவும்,

2. பல்வேறு வகைப்பாட்டு குழுக்களுக்கிடையேயுள்ள இனப்பரிணாம உறவை உருவாக்கவும்

3. பகுப்பாய்வு செய்யவும்,

4. DNA நகலாக்கம் மற்றும் வரிசை முறையாக்கம் - வளர்ச்சி மூலக்கூறு வகைப்பாடு

5. உயிர் தொகை மரபியலின் வளர்ச்சி - பெரும்பங்களிப்பு அளிக்கிறது.

வகைப்பாட்டின் முறையில் பயன்படும் பல்வேறு குறிப்பான்கள் :

அலோசைம் (allozymes) மைட்டோகாண்டிரிய DNA, நுண்துணைக் கோள்கள் , RAPD க்கள் (தொடரற்ற பெருக்க பல்வுடை DNAக்கள்)

AFLPக்கள் (பெருக்கக்கீற்று நீள் பல்வடிவுடமை )

SNP (ஒற்றை நியூக்ளியோடைட்டு பல்வடிவுடமை)

மைக்ரோசில்கள் (அ) வரிசைகள் - போன்றவை 

அ) RFLP (வரைக்கீற்று நீள் பல்வடிவுடமை)

இம்முறை DNA-வின் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் தடைக்கட்டுத்தளங்களின் தனித்துவமான வகைகளை அடையாளம் காண அனுமதிக்கிறது.

இது தாவங்களின் வரையறு தளங்களின் வேறுபாட்டையும், வரையறு நொதிகளினால் பிளக்கப்படும் DNA துண்டுகளின் நீளத்தையும் குறிக்கின்றது. 

ஆ) AFLP - இம்முறை RFLPக்கள் அடையாளம் காண்பதை ஒத்ததாகும். இதில் DNAவை சிறுசிறு துண்டுகளாக வெட்டஒரு வரையறுநொதி பயன்படுத்தப்பட்டு அந்த துண்டுகளை குறிப்பிட்ட நியூக்ளியோடைட் வரிசையில் நிலைபெறச் செய்ய உதவுகிறது.

பயன்கள்:

உயிர்த்தொகை மரபியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிறது.

நெருக்கமான தொடர்புடைய சிற்றினங்களின் ஆய்வு.

சில நேரங்களில் உயர்மட்டக் கிளை பரிணாமவியல் பகுப்பாய்விற்கும் பயன்படுத்தப்படுகிறது. 

இ) RAPD - (தொடர்பற்ற பெருக்கப் பல்வடிவுடைய DNA-க்கள்)

* இது தனிமைப்படுத்தப்பட்ட DNAவின் பல்வேறு இடங்களில் காணப்படும் நிரப்புபகுதிகளுக்கு எதிராகச் சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட முதன்மியைப் பயன்படுத்தி மரபணு குறிப்பான்களை அடையாளம் காணும் முறையாகும்

இன்னொரு இணையொத்த DNA அருகில் உள்ள எதிர் DNA இழையில் இருந்தால் - இந்த வினை DNAவின் அந்தப் பகுதியை பெருக்க உதவும்.

நுண் சாட்டலைட்டுகள் போன்ற RAPDகள் பெரும்பாலும் சிற்றினங்களுக்குள் உள்ள மரபியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிறது.

சிற்றனங்களுக்குள் (அ) நெருங்கிய உறவுடைய சிற்றனங்களுக்குள் உள்ள உறவுகளைத் தொடர்புபடுத்துவதற்கு இனப்பரிமாண ஆய்வுகள் வெற்றிகரமாக பயன்படுகிறது.

 

9. கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை விளக்குக.


மஞ்சரி கக்க மலர்

மலர்

முழு மலர்-இருபால்மலர், இருபூவிதழடுக்குடைய மலர்,ஐந்தங்க மலர், இருபக்க சமச்சீர் மலர். பூவடிச்செதிலுடைய மலர்,பூக்காம்புச்செதிலுடைய மலர் & மேல்மட்ட சூற்பை உடைய மலர்

புல்லிவட்டம்

புல்லிகள் 5- இணைந்தவை - பசுமையானவை தொடு இதழமைப்பு தனிப்புல்லி மலரின் அச்சு நோக்கிக் காணப்படும்

அல்லிவட்டம்

அல்லிகள் 5 - வெண்மை (அ) நீலநிறம்

தனித்தது- ஒழுங்கற்றவை - வண்ணத்துப்பூச்சி வடிவ அல்லிவட்டம்.

1. கொடிஅல்லி (வெக்ஸில்லம்);

2. இறகு அல்லி (அலே)

3. படகல்லி - அடி இணைந்தவை. இறங்கு தழுவு இதழமைவு

மகரந்தத்தாள் மகரந்தத்தாள் 10

வட்டம் (9) இணைந்து ஒரு கற்றையாகவும் 10 வது மகரந்தத்தாள் தனித்து ஒரு

கற்றையாகவும் ஆக இருகற்றை மகரந்தத்தாள் வட்டம்.

மகரந்தப்பை ஈரறையையுடையது தாள் அடி இணைந்தவை நீள்வாக்கில் உட்புறமாக வெடிப்பவை.

சூலக வட்டம் சூற்பை மேல்மட்ட சூற்பை ஒரு சூலக அறை - ஒரு சூலக அறை சூல்கள் பல விளிம்பு சூல் ஒட்டுமுறை சூலகத்தண்டு தனித்தது - உள்நோக்கி வளைந்தது 

சூலகமுடி துாவிகளையுடையது

கனி இருபுற வெடிகனி (Legume)

விதை சிறுநீரக வடிவிலானதுகருவூண் அற்றது.

 

10. லில்லிஃயேசி குடும்பத் தாவரங்களைசொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?



Tags : Taxonomy and Systematic Botany | Botany வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் | தாவரவியல்.
11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany : Answer the following questions Taxonomy and Systematic Botany | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் | தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்