Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பின்வருபவைகளுக்கு விடை தருக

இரண்டாம் நிலை வளர்ச்சி - தாவரவியல் - பின்வருபவைகளுக்கு விடை தருக | 11th Botany : Chapter 10 : Secondary Growth

   Posted On :  06.07.2022 11:03 pm

11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி

பின்வருபவைகளுக்கு விடை தருக

தாவரவியல் : இரண்டாம் நிலை வளர்ச்சி - முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்விகளுக்கான பதில்கள் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

11 வது தாவரவியல் : அலகு 10

இரண்டாம் நிலை வளர்ச்சி

 

பின்வருபவைகளுக்கு விடை தருக

 

6. காட்டில் மான் கொம்பினால் மரத்தின் பட்டை சேதப்படுத்தப்படும் பொழுது அவற்றைத் தாவரங்கள் எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது.

* பட்டை என்ற சொல் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணப்படும் அனைத்து திசுக்களையும் குறிக்கும்.

* மான் கொம்பு பட்டையை சேதம் செய்யும்போது, அதனுடைய காயம் குணமாக்கும் நுட்பம் தூண்டப்படுகிறது.

* வாஸ்குலார் கேம்பியம் செல் பிரிதல் நடைபெற்று காயப்பட்ட பகுதியை மூடுகிறது. * வினைப்பகுதி (Reaction Zone) உருவாகி கட்டையின் வேதித்தன்மையை மாற்றி மேற்கொண்டு நுண்ணுயிரித் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

* தடைப்பகுதி (அ) காலஸ் - உருவாகி இது காயப்பட்ட பகுதியின் மேல் வளர்ந்து மூடுகிறது.

* கீழ்பகுதியில் புதிய திசுக்கள் வளர்ந்து காயம் குணமாவது முழுமையடைகிறது.


 

7. எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும் ஏன்?

* வசந்த காலத்தில் - நன்கு சாதகமான தட்பவெப்ப நிலை காணப்படுகிறது - சாதகமான வெப்பநிலை, ஒளி அடர்வு, நல்ல மழை, மண்ணீ ர் அளவு - இவை வளர்ச்சிக்கு ஏதுவாக உள்ளது.

* எனவே அதிகபட்ச ஒளிச்சேர்க்கை , வளர்ச்சி ஏற்படுத்த கேம்பியம் அதிக எண்ணிக்கையில் சைலக் கூறுகளான வெஸல்கள் மற்றும் டிரக்கிடுகள், அதிக உள் வெளி கொண்ட வசந்த கட்டையை உருவாக்குகிறது.

* அதனால் அதிக நீரும் கனிம உப்புக்களும் உறிஞ்சப்படுகின்றன. அதிகமான வளர்ச்சியும் காணப்படுகின்றது.


 

8. தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத் திசுவாகும். பக்க ஆக்குத் திசு வின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.

இருவிதையிலை தாவரங்களில் இரண்டாம் நிலை வளர்ச்சியானது,

1. வாஸ்குலக் கேம்பியம் மற்றும்

2. கார்க் கேம்பியம் இவற்றின் செயல்பாட்டினால் நடைபெறுகிறது.

பக்கவாட்டு ஆக்குத்திசு:

1. வாஸ்குலக் கேம்பியம்

2. கார்க் கேம்பியம்

I. வாஸ்குலக் கேம்பியத்தின் தோற்றம் மற்றும் உருவாக்கம் :

* சைலம் - புளோயத்திற்கிடையே காணப்படுகிறது - கற்றை கேம்பியம்.

* வாஸ்குலக் கற்றைகளுக்கிடையே காணப்படும் மெடுல்லா கதிர்களின் ஒரு சில பாரங்கைமா செல்கள் ஆக்குத் திசு தன்மை பெறுகிறது. இது கற்றையிடைக் கேம்பியம் எனப்படும்.

* கற்றை, கற்றையிடை கேம் பியங்களின் இருமுனைகளும் இணைந்து வாஸ்குலக் கேம்பிய வளையம் உருவாகிறது.

* வாஸ்குலக் கேம்பிய செல்களில் ஆக்குத்திசுக்களை போலல்லாமல் பெரிய மைய நுண் குமிழ் பை (அ) பைகள் ஒரு மெல்லிய அடர் சைட்டோபிளாச அடுக்கால் சூழப்பட்டுள்ளது.

* இருவகை தோற்றுவிகள் : 1. கதிர்கோல் வடிவ தோற்றுவிகள் 2. 'ரே' தோற்றுவிகள் என்பன காணப்படுகின்றன.

1. கதிர்கோல் வடிவ தோற்றுவிகள்:

செங்குத்தான நீண்ட செல்களாகும். இவை அச்சு முறைமையான இரண்டாம் சைலத்தையும் (சைலம் நார்கள், அச்சு பாரங்கைமா), இரண்டாம் புளோயத்தையும் (சல்லடைக் கூறுகள், நார்கள், அச்சு பாரங்கைமா) உருவாக்குகிறது.

* இவை அமைவு முறையில் இரு வகைப்படும்.

a. அடுக்கு கேம்பியம் : பரிதி இணைப்போக்கு வெட்டுத்தோற்றத்தில் கிடைமட்ட , வரிசையில் முனைப்பகுதிகள் ஒரே மட்டத்தில் அமைந்திருக்கும்.

b. அடுக்குறா கேம்பியம் : நீண்ட கதிர்கோல் வடிவ தோற்றுவிகளைக் கொண்ட தாவரங்களில் ஒரு அடுக்கு வரிசை செல்கள், நுனிகளில் தழுவிக் காணப்படுவதால் அடுக்குறா கேம்பியம் எனப்படும்.

2. 'ரே தோற்றுவிகள் :

கிடைமட்ட நீண்ட செல்கள், ஆர முறைமையான இரண்டாம் சைலத்தையும், புளோயத்தையும் உண்டாக்கும்.

வாஸ்குலக் கேம்பிய செயல்பாடு :

கேம்பிய வளையம் - பகுப்படைந்து உள், வெளி பகுதிகளில் புதிய செல்களைத் தோற்றுவிக்கின்றன. கேம்பிய வளையத்திற்கு வெளியே இரண்டாம் ஃபுளோயத்தையும் உள் பகுதியில் இரண்டாம் சைலத்தையும் உருவாக்குகிறது. இதனால் முதல்நிலை சைலமும், முதல்நிலை புளோயமும் படிப்படியாக நசுக்கப்படுகின்றன.

II. ஃபெல்லோஜென் (கார்க் - கேம்பியம்):

* இது வாஸ்குலார் கேம்பியத்தைப் போலன்றி ஒரு படித்தான ஆக்குத்திசு செல்களை உடையது.

* தண்டு, வேர் இவற்றின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது உருவாகிறது.

* இது புறத்தோல், முதல்நிலை புறணி ஃபுளோயம் அல்லது பெரிசைக்கிள் (ஸ்டீலின் வெளிப்பகுதி) இவற்றிலிருந்து உருவாகிறது.

* பக்கவாட்டில் பகுப்படைந்து, ஆரவாக்கில் செல்களைத் தோற்றுவிக்கிறது.

* வெளிப்புற செல்கள் வேறுபாடடைந்து பெல்லத்தையும் (கார்க்), உட்புற செல்கள் பெல்லோடெர்மையும் (இரண்டாம் புறணி) தோற்றுவிக்கிறது.

* இவ்வாறு வாஸ்குலார் கேம்பியம், கார்க் கேம்பியம் இவை வேர், தண்டின் இரண்டாம் வளர்ச்சிக்குக் காரணமாகிறது.


 

9. ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ), (ஆ) எனப்பெயரிட்டார். '' கட்டையின் வயது 50, '' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்? ஏன்?

விடை :

கட்டை (அ) - 50 வருட பழமையானது.

கட்டை (ஆ) - 20 வருட பழமையானது.

கட்டை (அ) : அதிக வயதான கட்டை. அதுவே வலிமையும் தாங்கும் திறனும் உடையது.

* ஒரு கட்டையில் மையப்பகுதி அடர் நிறமுடையதாய் காணப்படுகிறது. வயதாக, ஆக மையக்கட்டையில் உள்ள சைலக் குழாய்களில் பல பலூன் போன்ற உள் வளரிகள் ஏற்படுகிறது. இதற்கு டைலோஸ்கள் என்று பெயர். சைலக் குழாய்களின் டைலோஸ்களில் டானின், ரெசின், எண்ணெய் போன்றவை படிந்து நீரைக் கடத்துவதில்லை. கடினமாகிய அடர் வண்ணமுடைய இறந்த இந்த கட்டை வைரக் கட்டை எனப்படுகிறது.

* 50 வயதான மரத்தில் அதிகமான வைரக்கட்டை (டியுரமென்) காணப்படுவதால் அதுவே நீடித்த உழைப்பையும் அதிக நுண்ணுயிரிகள், பூச்சி, கரையான் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளது.


 

10. ஒரு மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் பொது மைய வளையங்கள், வளர்ச்சி வளையங்கள் எனப்படுகிறது. வளர்ச்சி வளையங்கள் எவ்வாறு உருவாகின்றன. அதன் முக்கியத்துவம் யாது?

ஆண்டு வளையங்கள் (அ) வளர்ச்சி வளையங்கள் :

* வசந்த காலத்தில் கேம்பியத்தின் அதிக செயல்பாட்டால் அகன்ற உள்வெடி கொண்ட அதிக எண்ணிக்கை சைலக் கூறுகளையும் தோற்றுவிக்கின்றன. இவை அடர் நிறமற்ற குறைவான அடர்வு கொண்டிருக்கும் இது முன்பருவக் கட்டை (அ) வசந்த காலக் கட்டை எனப்படும்.

* குளிர் காலத்தில் கேம்பியத்தின் செயல்பாடு குறைந்த அளவிலான குறுகலான செல் உள்வெளி கொண்ட வெஸல்கள் / டிரக்கீடுகளைப் பெற்ற குறைந்த அளவிலான சைலக் கூறுகளைத் தோற்றுவிக்கின்றன. இவை அடர் நிறத்தையும் அதிக அடர்த்தியும் கொண்டிருக்கும். இது பின்பருவக் கட்டை (அ) குளிர் காலக்கட்டை எனப்படும்.

* ஆண்டு வளையம் (அ) வளர்ச்சி வளையம் : முன் பருவக்கட்டையும், பின் பருவக்கட்டையும் மாறிமாறி உருவாவதாலும், பின்பருவக்கட்டையின் அடர்த்தி மிகுதியால் வளையங்கள் கண்களுக்குத் தெளிவாகப் புலப்படுகிறது. இவை வளர்ச்சி வளையங்கள் எனவும் கருதப்படுகிறது.

* சில மரங்களில் காலநிலை மாற்றத்தினால் ஒன்றுக்கு மேற்பட்ட வளர்ச்சி வளையங்கள் உருவாகின்றன.

* போலி ஆண்டு வளையங்கள் : இயற்கை சீற்றங்களான வறட்சி, உறைபனி, இலை நீக்கம், வெள்ளம், காயங்கள், உயிர் காரணிகள் போன்றவற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட வளையங்கள் உருவாவது போலி ஆண்டு வளையங்கள் எனப்படுகிறது.

* மர வயதியல் (Dendrochronology) : ஆண்டு வளையம் - வருட வளர்ச்சி என்பதால் ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் வயது ஆண்டு வளையங்களின் எண்ணிக்கையைக் கொண்டு உறுதி செய்யப்படுகிறது. இது மர வயதியல் (அ) டென்ட்ரோகுரோனாலஜி எனப்படுகிறது.

 

 

Tags : Secondary Growth | Plant Anatomy (Structural Organisation) | Botany இரண்டாம் நிலை வளர்ச்சி - தாவரவியல்.
11th Botany : Chapter 10 : Secondary Growth : Answer the following questions Secondary Growth | Plant Anatomy (Structural Organisation) | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி : பின்வருபவைகளுக்கு விடை தருக - இரண்டாம் நிலை வளர்ச்சி - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 10 : இரண்டாம் நிலை வளர்ச்சி