Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள்
   Posted On :  27.07.2022 05:32 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள்

சுதந்திரம் அடைந்ததிலிருந்து உலகளவில் ஆயுதப் பெருக்கத் தடை இந்தியாவின் அணு கொள்கையில் மேலோங்கிய ஒரு கருத்தாகவே இருந்து வருகிறது.

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள்

தேசிய நலனைப் பேணுதல்

உலக அமைதியை எய்துதல்

ஆயுதக் குறைப்பு

பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்

அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்

அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு

சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்

காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு

 

படை வலிமை குறைப்புக் கொள்கை

சுதந்திரம் அடைந்ததிலிருந்து உலகளவில் ஆயுதப் பெருக்கத் தடை இந்தியாவின் அணு கொள்கையில் மேலோங்கிய ஒரு கருத்தாகவே இருந்து வருகிறது. இதனால் ஐ.நா.வின் படை வலிமைக் குறைப்புத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்தது. 1974 மற்றும் 1998 அணு சோதனைகள் போர்த்திறமை சார்ந்த நடவடிக்கைகளுக்காகவே செய்யப்பட்டவையாகும்.

இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துகள்:

முதலில் பயன்படுத்துவதில்லை

குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன்

அணு ஆயுதத்தைப் போர்த்தாக்குதலுக்குப் பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.


10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy : Basic Concepts of India’s Foreign Policy in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை