Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | புத்தக வினாக்கள் விடைகள்

உயிரின் தோற்றமும் பரிணாமமும் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 19 : Origin and Evolution of Life

   Posted On :  29.07.2022 06:19 pm

10வது அறிவியல் : அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும்

புத்தக வினாக்கள் விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க. II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியா தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. IV. பொருத்துக: V. ஓரிரு வாக்கியத்தில் விடையளி: VI. குறு வினாக்கள்: VII. நெடு வினாக்கள் : IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்: (HOTS)

உயிரின் தோற்றமும் பரிணாமமும்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி

அ) தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்.

ஆ) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.

இ) தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.

ஈ) தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை.

 

2. “பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்

அ) சார்லஸ் டார்வின்

ஆ) எர்னஸ்ட் ஹெக்கல்

இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

ஈ) கிரிகர் மெண்டல்

 

3. பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்கு பயன்படுகிறது?

அ) கருவியல் சான்றுகள்

ஆ) தொல் உயிரியல் சான்றுகள்

இ) எச்ச உறுப்பு சான்றுகள்

ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்

 

4. தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் தற்போதைய முறை

அ) ரேடியோ கார்பன் முறை

ஆ) யுரேனியம் காரீய முறை

இ) பொட்டாசியம் ஆர்கான் முறை

ஈ) அ மற்றும் இ

 

5. வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்

அ) கொரானா

ஆ) J.W. கார்ஸ் பெர்கர்

இ) ரொனால்டு ராஸ்

ஈ) ஹியுகோ டி விரிஸ்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் பெறப்பட்ட பண்புகள் என அழைக்கப்படுகின்றன.

2. ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள் எச்ச உறுப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

3. வௌவால் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் அமைப்பு ஒத்த உறுப்புகள் உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு.

4. பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர் டார்வின்  

 

III. சரியா தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

 

1. உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் சார்லஸ் டார்வின்.

விடை: தவறு

உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டைக் கூறியவர் லாமார்க்.

2. செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன.

விடை: சரி

3. பறவைகள் ஊர்வனற்றிலிருந்து தோன்றியவை.

விடை: சரி

 

IV. பொருத்துக:

 

1. முன்னோர் பண்பு மீட்சி - முள்ளெலும்பு மற்றும் குடல்வால்

2. எச்ச உறுப்புகள் - பூனை மற்றும் வெளவாலின் முன்னங்கால்

3. செயல் ஒத்த உறுப்புகள் - வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி

4. அமைப்பு ஒத்த உறுப்புகள் - வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை

5. மரப்பூங்கா - கதிரியக்கக் கார்பன் (C14)

6. W. F. லிபி - திருவக்கரை

விடை:

1. முன்னோர் பண்பு மீட்சி - வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி

2. எச்ச உறுப்புகள் - முள்ளெலும்பு மற்றும் குடல்வால்

3. செயல் ஒத்த உறுப்புகள் - வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை

4. அமைப்பு ஒத்த உறுப்புகள் - பூனை மற்றும் வெளவாலின் முன்னங்கால்

5. மரப்பூங்கா - திருவக்கரை

6. W. F. லிபி - கதிரியக்கக் கார்பன் (C14)

 

V. ஓரிரு வாக்கியத்தில் விடையளி:

 

1. மனிதனின் கை, பூனையின் முன்னங்கால், திமிங்கலத்தின் முன் துடுப்பு மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறு மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்கு என்ன பெயர்?

அமைப்பு ஒத்த உறுப்புகள்

2. புதைபடிவப் பறவை என்று கருதப்படும் உயிரினம் எது?

ஆர்க்கியாப்டெரிக்ஸ்

3. புதை உயிர்ப் படிவம் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்டுகிறது?

தொல்லுயிரியல்

 

VI. குறு வினாக்கள்:

 

1. கிவி பறவையின் சிதைவடைந்த இறக்கைகள், ஒரு பெறப்பட்ட பண்பு. ஏன் அது பெறப்பட்ட பண்பு என அழைக்கப்படுகிறது?

• கிவி ஒரு பறக்க முடியாத பறவை.

• கிவி பறவையின் சிறப்பிழந்த இறக்கைகள் உறுப்பைப் பயன்படுத்தாமைக்கான எடுத்துக்காட்டு.

• ஒரு உறுப்பை நீண்ட காலம் பயன்படுத்தாத போது அது படிபடியாகக் குன்றல் அடைகிறது.

 

2. ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?

• ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரிகளாகக் கருதப்படுகிறது.

• இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது.

• ஊர்வன போல நீண்ட வால், நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவ பற்கைளையும் பெற்றிருந்தது.

• எனவே ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக கருதப்படுகிறது.

 

3. வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

வட்டார இனத் தாவரவியல் என்பது ஒரு குறிப்பிட்டப் பகுதியில் உள்ள தாவரங்கள் அப்பகுதி மக்களுக்கு வழி வழியாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றிய அறிவாகும்.

முக்கியத்துவம்:

• பரம்பரை பரம்பரையாகத் தாவரங்களின் பயன்களை அறிய முடிகிறது.

• நமக்கு தெரிந்த மற்றும் தெரியாத தாவரங்களின் பயன்களைப் பற்றிய தகவலை அளிக்கிறது.

• வட்டார இனத் தாவரவியலானது மருந்தாளுநர், வேதியியல் வல்லுநர், மூலிகை மருத்துவப் பயிற்சியாளர் முதலானோருக்குப் பயன்படும் தகவல்களை அளிக்கிறது.

• மலை வாழ் பழங்குடி மக்கள் மருத்துவ இன அறிவியல் மூலம் பலவகையான நோய்களை குணப்படுத்தும் மருந்து தாவரங்களை அறிந்து வைத்துள்ளனர்.

 

4. புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?

• படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள, கார்பன், யுரேனியம், காரீயம் போன்ற கதிரியக்கத் தனிமங்களால் கண்டு பிடிக்கலாம்.

• உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்வதில்லை.

• அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழிய தொடங்குகிறது.

• உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன் (C14) அளவைக் கொண்டு அந்த தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 

VII. நெடு வினாக்கள் :

 

1. பரிணாமத்திற்கான உந்து விசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு?

விடை:

பரிணாமத்திற்கான உந்து விசையாக இயற்கை தேர்வு உள்ளது. எவ்வாறெனில்,

அதிக இனப்பெருக்கத் திறன்:

• உயிரினங்கள், அதிகளவு உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை.

• அவை பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை.

வாழ்க்கைக்கான போராட்டம்:

• அதிக உற்பத்தி காரணமாக, உயிரினங்கள் வாழ தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது.

• இது உயிரினங்களுக்கான உணவு மற்றும் இடத்திற்கான தீவிர போட்டியை உருவாக்கி, போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

வேறுபாடுகள்:

• டார்வின் கூற்றுப்படி சாதகமான வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுகள் உயிரினத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.

இயற்கைத் தேர்வு:

• வாழ்க்கைக்கான போராட்டத்தின் போது கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்கள் உயிர்பிழைத்து சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும்.

• கடினமான சூழலை எதிர்கொள்ள முடியாத உயிரினங்கள் உயிர் பிழைக்கத் தகுதியின்றி மறைந்து விடும்.

• சாதகமான வேறுபாடுகளை உடைய உயிரினங்களைத் தேர்வு செய்யும் இச்செயல்முறை இயற்கை தேர்வு என அழைக்கப்படுகிறது.

சிற்றினங்களின் தோற்றம்:

• பல தலைமுறைகளாக படிப்படியாக ஏற்பட்ட சாதகமான வேறுபாடுகளின் தொகுப்பினால் புதிய சிற்றினங்கள் உருவாகின்றன.

 

2. அமைப்பு ஒத்த உறுப்புகளையும் செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?

விடை:


அமைப்பு ஒத்த உறுப்புகள்

1. ஒரே மாதிரியான கருவளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகள், அமைப்பு ஒத்த உறுப்புகள் எனப்படும்.

2. பாலூட்டிகளின் முன்னங்கால்கள் அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும்.

செயல் ஒத்த உறுப்புகள்

1. செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளது.

2. வௌவாலின் இறக்கை, பறவையின் இறக்கை பூச்சியின் இறக்கை இதற்கு எடுத்துக்காட்டாகும்.

 

3. படிவமாதல் தாவரங்களில் எவ்வாறு நடைபெறுகிறது?

விடை:

• படிவமாதல் தாவரங்களில், இரண்டாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தாவரத் தண்டு பகுதியானது ஆற்றங்கரையில் மண்ணில் புதையுண்டு காலப் போக்கில் அதிலுள்ள கரிமப் பொருள்கள் சிலிகாவினால் நிரப்பப்பட்டு படிவமாகியுள்ளது.

• கல்மரமான பின்பும் இத்தாவரங்கள் முந்தைய நிறம், வடிவம், வரித்தன்மை முதலானவற்றைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

• ஆண்டு வளையம், நிறங்களின் அடுக்கு, கணுப் பகுதிகள் போன்ற அனைத்துப் பண்புகளும் கல்மரமான பிறகும் புலப்படும் வகையில் அமைந்துள்ளன.

 

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்: (HOTS)

 

1. அருண் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு செடியின் மீது ஒரு தும்பி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அதன் இறக்கைகளை உற்று நோக்கினான். காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே மாதிரி உள்ளதாக நினைத்தான். அவன் நினைத்தது சரியா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.

அருண் நினைத்தது சரி.

காரணங்கள்:

காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டதாக உள்ளது.

 

2. புதை உயிர்ப் படிவங்களின் பதிவுகள் நமக்குப் பரிணாமம் பற்றித் தெரிவிக்கின்றன. எவ்வாறு?

பெரும்பாலான முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவைகளின் பரிணாமப் பாதையைப் புரிந்து கொள்ள புதைபடிவங்கள் பற்றிய ஆய்வுகள் உதவுகின்றன. பரிணாம வளர்ச்சி என்பது எளிய உயிரினங்களில் இருந்து சிக்கலான அமைப்பு கொண்ட உயிரினங்கள் படிப்படியாக தோன்றுவது என்பதை புதை படிக ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

 

3. ஆக்டோபஸ், கரப்பான்பூச்சி மற்றும் தவளை ஆகிய அனைத்திற்கும் கண்கள் உள்ளன. இவை பொதுவான பரிணாம தோற்றத்தைக் கொண்டுள்ளதால் ஒரே வகையாக கருத முடியுமா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.

ஆக்டோபஸ், கரப்பான் பூச்சி மற்றும் தவளை ஆகிய அனைத்திற்கும் கண்கள் உள்ளன.

ஆக்டோபஸ்:

மெல்லுடலி தொகுதியைச் சார்ந்தது. இதன் கண்கள் எளிய அமைப்புடன் லென்சு இல்லாமல் காணப்படும்.

கரப்பான் பூச்சி:

பூச்சியினத்தை சார்ந்தது (முதுகெலும்பற்றவை). கூட்டுகண்கள் அமைப்பை கொண்டது.

தவளை :

நீர் நில வாழ்வன, முதுகெலும்புடையது. சிறப்பான அமைப்பு கொண்டது. மேற்கூறிய மூன்றிலும் வெவ்வேறு அமைப்புகளைக் கொண்ட பொழுதிலும் ஒரே பணியை செய்கின்றன. இவை ஒரு இனத்தில் படிப்படியாக நிகழும் வேறுபாடுகளின் தொகுப்பினால் ஏற்படுகிறது.



Tags : Origin and Evolution of Life | Science உயிரின் தோற்றமும் பரிணாமமும் | அறிவியல்.
10th Science : Chapter 19 : Origin and Evolution of Life : Book Back Questions with Answers Origin and Evolution of Life | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும் : புத்தக வினாக்கள் விடைகள் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 19 : உயிரின் தோற்றமும் பரிணாமமும்