Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

பாரம்பரிய மரபியல் - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) | 12th Botany : Chapter 2 : Classical Genetics

   Posted On :  09.08.2022 05:48 pm

12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரவியல் : பாரம்பரிய மரபியல் : உயிரியல் தாவரவியல் புத்தக வினாக்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பாரம்பரிய மரபியல்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

மதிப்பீடு

 

1. மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது

அ) மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள் 

ஆ) எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா 

இ) ரிபோசோம்கள் மற்றும் பசுங்கணிகம் 

ஈ) லைசோசோம்கள் மற்றும் ரிபோசோம்கள்

விடை : அ) மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள் 

 

2. AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் தாவரத்தின் பல்வேறு வகையான கேமீட்களை கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது 

அ) aaBB

ஆ) AaBB 

இ) AABB 

ஈ) aabb

விடை : ஈ) aabb 

 

3. மரபணு வகையம் AABbCCயைக் கொண்ட தாவரம் எத்தனை வகையான கேமீட்களை உருவாக்கும்? 

அ) மூன்று

ஆ) நான்கு 

இ) ஒன்பது

ஈ) இரண்டு

விடை : ஈ) இரண்டு 

 

4. பின்வருவனவற்றுள் எது பல்கூட்டு பாரம்பரியத்திற்கு உதாரணமாகும்? 

அ) மிராபிலஸ் ஜலாபா மலரின் நிறம் 

ஆ) ஆண் தேனீ உற்பத்தி 

இ) தோட்டப் பட்டாணியின் விதைக்கனியின் வடிவம் 

ஈ) மனிதர்களின் தோல் நிறம்

விடை : ஈ) மனிதர்களின் தோல் நிறம் 

 

5. தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr)க்கு ஓங்கியும், மஞ்சள்விதையிலை யானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F2யில் எதிர்பார்க்கப்படும் RRYY X rryy புறத் தோற்றம் யாது? 

அ) உருண்டை விதைவுடன் பச்சை விதையிலைகள் மட்டும்

ஆ) சுருங்கிய விதைகளுடன் மஞ்சள் விதையிலைகள் மட்டும் 

இ) சுருங்கிய விதைகளுடன் பச்சை விதையிலைகள் மட்டும் 

ஈ) உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும் 

விடை : ஈ) உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டு இருக்கும் 

 

6. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது 

அ) இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன கலப்புறுதல் 

ஆ) F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு 

இ) F2 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு 

ஈ) இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு 

விடை: இ) F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு 

 

7. பட்டாணித் தாவரத்தில் மஞ்சள் நிற விதைகள், பச்சை நிற விதைகளுக்கு ஓங்குத்தன்மையுடனும், கலப்புயிரி மஞ்சள் நிற விதைத்தாவரம் பச்சை நிற விதை கொண்ட தாவரத்துடன் கலப்பு மேற் கொள்ளும் பட்சத்தில் மஞ்சள் மற்றும் பச்சை நிற விதைகள் கொண்ட தாவரங்கள் முதலாம் சந்ததி யில் (F1) எவ்விகிதத்தில் கிடைக்கப்பெறும்? 

அ) 9:1 

ஆ) 1:3 

இ) 3:1 

ஈ) 50:50

விடை : ஈ) 50:50 

8. ஒரு தாவரத்தில் மரபணுவாக்க விகிதம் ஓங்கு பண்புடைய புறத்தோற்றத்தினைத் தோற்றுவிக்கு மேயானால் அது 

அ) பிற்கலப்பு 

ஆ) சோதனைக்கலப்பு 

இ) இருபண்புக் கலப்பு ஈ) சந்ததி வழித்தொடர் ஆய்வு

விடை : ஆ) சோதனைக்கலப்பு 

 

9. இருபண்புக் கலப்பை பொறுத்தமட்டில் கீழ்க்காணும் சரியான கூற்றைத் தேர்ந்தெடு

அ) ஒரே குரோமோசோமில் இறுக்கமாக பிணைப்புற்றுக் காணப்படும் மரபணுக்களினால் தோன்றும் ஒரு சில இணைப்புகள் 

ஆ) ஒரே குரோமோசோமில் இறுக்கமாக பிணைப் புற்றுக் காணப்படும் மரபணுக்களினால் தோன்றும் அதிகமான பிணைப்புகள் 

இ) ஒரே குரோமோசோமில் அதிக தொலைவிலுள்ள மரபணுக்களால் தோன்றும் வெகுசில மறு இணைப்புகள்  

ஈ) ஒரே குரோமோசோமில் தளர்வாக பிணைப்புற்றிருக்கும் மரபணுக்கள் இறுக்கமாக பிணைப்புற்றி ருக்கும் மரபணுக்களை போன்றே மறு இணைவு கொண்டிருப்பது 

விடை : அ) ஒரே குரோமோசோமில் இறுக்கமாக பிணைப்புற்றுக் காணப்படும் மரபணுக்களினால் தோன்றும் ஒரு சில இணைப்புகள் 

 

10. மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் F1 சந்ததியின் இரு பெற்றோரின் பண்புகளையும் வெளிப்படுத்தும்? 

அ) முழுமைபெறா ஓங்குத்தன்மை 

ஆ) ஓங்கு வழி  

இ) ஒரு மரபணுவின் பாரம்பரியம் 

ஈ) இணை ஓங்குத்தன்மை

விடை : ஈ) இணை ஓங்குத்தன்மை 

 

11. வெள்ளரியின் கனி நிறம் இதற்கு உதாரணமாகும்?

அ) ஒடுங்கிய மறைத்தல் 

ஆ) ஓங்கிய மறைத்தல் 

இ) நிரப்பு மரபணுக்கள் 

ஈ) தடை ஏற்படுத்தும் மரபணுக்கள்

விடை : ஆ) ஓங்கிய மறைத்தல் 

 

12. பாரம்பரிய பட்டாணித் தாவரச் சோதனைகளில் மெண்டல் எதைப் பயன்படுத்தவில்லை? 

அ) மலரின் அமைவிடம் 

ஆ) விதையின் நிறம் 

இ) கனியின் நீளம் 

ஈ) விதையின் வடிவம்

விடை : இ) கனியின் நீளம் 

 

13. இரு பண்புக்கலப்பு 9:3:3:1 இடைப்பட்ட AaBb Aabb என்று மாறுபாடடைந்த ஓங்கிய மறைத்தல் விளைவானது 

அ) இரு அமைவிடத்திலுள்ள ஒரு அல்லீல் மற்றொரு அல்லீலை விட ஓங்குதன்மை கொண்டதாக உள்ளது. 

ஆ) இரு வேறுபட்ட அமைவிடத்தில் இரு அல்லீல்களின் இடையேயான இடைச்செயல்கள் 

இ) ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ள ஒரு அல்லீல் மற்றொரு அல்லீலை விட ஓங்குதன்மை உடையதாக உள்ளது 

ஈ) அல்லீல்களின் இடைச்செயல்களுக்கு இடையே ஒரே அமைவிடத்தில் நிகழ்வது 

விடை : ஆ) இரு வேறுபட்ட அமைவிடத்தில் இரு அல்லீல்களின் இடையேயான இடைச்செயல்கள்

 

14. சோதனைக் கலப்பின் இரு பண்புக் கலப்பில் ஈடுபடும் முதல் மகவுச்சந்ததிகளில் அதிகப் பெற்றோரிய சந்ததிகள் மறுசேர்க்கையின் மூலம் உருவாக்கப்படுவது இது எதைக் குறிக்கிறது? 

அ) இரு வேறுபட்டக் குரோமோசோம்களில் காணப்படும் இரு மரபணுக்கள் 

ஆ) குன்றல் பகுப்பின் போது பிரிவுறாக் குரோமோசோம்கள் 

இ) ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற இரு மரபணுக்கள் 

ஈ) இரு பண்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுவது 

விடை: இ) ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற இரு மரபணுக்கள் 

 

15. மெண்டலின் ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் ஏழு பண்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் எத்தனை குரோமோசோம்களில் காணப்படுகிறது? 

அ) ஏழு 

ஆ) ஆறு 

இ) ஐந்து 

ஈ) நான்கு

விடை : அ) ஏழு 

 

16. கீழ்காண்பனவற்றுள் எது பெற்றோரிடன் காணப்படாத இணைந்த பண்புக்கூறுகள் சந்ததியில் காணப்படுவதை விளக்குகிறது. 

அ) தனித்துப் பிரிதல்விதி 

ஆ) குரோமோசோம் கோட்பாடு 

இ) சார்பின்றி ஒதுங்குதல் விதி 

ஈ) பல்மரபணுப் பாரம்பரியம்

விடை : இ) சார்பின்றி ஒதுங்குதல் விதி 

 

17. கேமீட்கள் எப்பொழுதும் கலப்புயிர்களாக இருப்பதில்லை ” எனும் கூற்று 

அ) ஓங்கு விதி 

ஆ) சாரபின்றி ஒதுங்குதல் விதி 

இ) தனித்துப் பிரிதல் விதி 

ஈ) இயைபிலாக் கருவுறுதல் விதி

விடை : இ) தனித்துப் பிரிதல் விதி 

 

18. ஒரு மரபணு மற்றொரு மரபணுக்களை மறைக்கும் செயல் ஆனால் ஒத்த அமைவிடத்தில் காணப்படாமைக்கு 

அ) மறைக்கப்பட்ட 

ஆ) நிரப்பி மட்டும் 

இ) மறைக்கப்படும் 

ஈ) இணை ஓங்கு

விடை : அ) மறைக்கப்பட்ட 

 

19. தூயகால்வழி நெட்டைத்தாவரங்கள் தூய கால் வழி குட்டைத் தாவரத்துடன் கலப்புற்று முதலாம் மகவுச் சந்ததியில் (F1) அனைத்துத் தாவரங்களும் நெட்டையாகவே காணப்பட்டது. அதே முதல் மகவுச்சந்ததி தாவரங்களைத் தற்கலப்பு செய்யும் போது கிடைக்கும் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் 3:1 இது 

அ) ஓங்குத்தன்மை 

ஆ) பாரம்பரியமாதல் 

இ) இணை ஓங்குத்தன்மை 

ஈ) மரபுவழித்தன்மை

விடை : அ) ஓங்குத்தன்மை

 

20. ஓங்குத்தன்மை மறைத்தலின் விகிதமானது

அ) 9:3 : 3 : 1 

ஆ) 12: 3 :1 -

இ) 9 : 3 : 4 

ஈ) 9:6:1 

விடை : ஆ)12:3:1 

 

21. மெண்டலின் கலப்பின ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தைத் தேர்ந்தெடு? 

அ) 1856-1863 

ஆ) 1850-1870 

இ) 1857 - 1869 

ஈ) 1870 - 1877

விடை : அ) 1856 - 1863

 

22. கீழ்க்காணும் பண்புகளுள் எவற்றை மெண்டலின் பட்டாணி ஆய்வுகளில் கருத்தில் கொள்ளவில்லை ?

அ) தண்டு - நெட்டை அல்லது குட்டை 

ஆ) சுரக்கும் வளரி அல்லது சுரக்க இயலாத வளரி 

இ) விதை - பச்சை அல்லது மஞ்சள் 

ஈ) கனி - உப்பிய அல்லது இறுக்கிய

விடை : ஆ) சுரக்கும் வளரி அல்லது சுரக்க இயலாத வளரி

Tags : Classical Genetics | Botany பாரம்பரிய மரபியல் - தாவரவியல்.
12th Botany : Chapter 2 : Classical Genetics : Choose the Correct Answers (Pure Science Group) Classical Genetics | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) - பாரம்பரிய மரபியல் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 2 : பாரம்பரிய மரபியல்