Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

பயிர் பெருக்கம் - தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) | 12th Botany : Chapter 9 : Plant Breeding

   Posted On :  09.08.2022 06:13 pm

12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

தாவரவியல் : பயிர் பெருக்கம் : உயிரியல் தாவரவியல் குழு புத்தக வினாக்கள் மற்றும் முக்கியமான கேள்விகள் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

தாவரவியல் : பயிர் பெருக்கம்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு)

மதிப்பீடு 


1. கூற்று : மரபணுவிய வேறுபாடுகள் தேர்ந்தெடுத் தலுக்கு மூலப்பொருட்களைத் தருகின்றன. 

காரணம் : மரபணுவிய வேறுபாடுகள் ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன 

அ) கூற்று சரி காரணம் தவறு 

ஆ) கூற்று தவறு காரணம் சரி 

இ) கூற்று மற்றும் காரணம் சரி 

ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு

விடை : ஆ) கூற்று தவறு காரணம் சரி

 

2. வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் பல்வேறு தாவரங்களின் வரலாற்றைப் படிப்பதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று 

அ) தோற்ற மையங்கள் 

ஆ) வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்படும் மையங்கள் 

இ) கலப்புயிரியின் மையங்கள் 

ஈ) வேறுபாட்டின் மையங்கள்

விடை : அ) தோற்ற மையங்கள்

 

3. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

அ) கூட்டுத்தேர்வு - புறத்தோற்றப் பண்புகள் 

ஆ) தூயவழித்தேர்வு - மீண்டும் மீண்டும் நடைபெறும் தன் மகரந்தச்சேர்க்கை 

இ) நகல் தேர்வு - பாலினப்பெருக்கம் செய்பவை 

ஈ) இயற்கைத் தேர்வு - இயற்கையின் ஈடுபாடு. 

விடை: இ)நகல்தேர்வு - பாலினப்பெருக்கம் செய்பவை 

 

4. வரிசை ஒன்றை (I) வரிசை இரண்டுடன் (II) பொருத்து. 


அ) i) - 1) ii) – II) iii) - III) iv) - IV) 

ஆ) i) – III) ii) – I) iii) - IV) iv) – II) 

இ) i) - IV) ii) – II) iii) - I) iv) – III) 

ஈ) i) – II) ii) - IV) iii) - III) iv) - I) 

விடை : ஆ) |i) - III), ii) - I), iii) - IV), iv) - II)

 

5. பயிர் பெருக்கத்தில் வேகமான முறை

அ) அறிமுகப்படுத்துதல் 

ஆ) தேர்ந்தெடுத்தல் 

இ) கலப்பினமாதல் 

ஈ) சடுதிமாற்றப் பயிர்பெருக்கம்

விடை : ஆ) தேர்ந்தெடுத்தல் 

 

6. தெரிவு செய்யப்பட்ட உயர்ரக, பொருளாதாரப் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை 

அ) இயற்கைத்தேர்வு 

ஆ) கலப்புறுத்தம் 

இ) சடுதிமாற்றம் 

ஈ) உயிரி-உரங்கள்

விடை : ஆ) கலப்புறுத்தம் 

 

7. பயிர் பெருக்கத்தின் மூலம் ஒரே மாதிரியான மரபணு வகையம். கொண்ட தாவரங்களைப் பெறும்முறை 

அ) நகலாக்கம் 

ஆ) ஒற்றைமடியம் 

இ) தன்பன்மடியம் 

ஈ) மரபணு தொகையம்

விடை : அ) நகலாக்கம்

 

8. வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது 

அ) நகலாக்கம் 

ஆ) கலப்பின வீரியம் 

இ) தேர்ந்தெடுத்தல் 

ஈ) அறிமுகப்படுத்துதல்

விடை : ஈ) அறிமுகப்படுத்துதல் 

 

9. குட்டை மரபணு உடையக் கோதுமை 

அ) பால் 1

ஆ) அடோமிடா 1 

இ) நோரின் 10 

ஈ) பெலிடா 2

விடை : இ) நோரின் 10 

 

10. ஒரே இரகத்தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது 

அ) சிற்றினங்களுக்கிடையே கலப்பு 

ஆ) இரகங்களுக்கிடையே கலப்பு 

இ) ஒரே இரகத்திற்குள் கலப்பு 

ஈ) பேரினங்களுக்கிடையே கலப்பு 

விடை : இ) ஒரே இரகத்திற்குள் கலப்பு

 

11. அயல் மகரந்தச்சேர்க்கை செய்யும் பயிரில் மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப் படும் வழித்தோன்றல் 

அ) தூய வழி

ஆ) சந்ததி வழி 

இ) உட்கலப்புவழி 

ஈ) கலப்பினவீரிய வழி

விடை : அ) தூய வழி 

 

12. ஜெயா மற்றும் ரத்னா கீழ்கண்ட எந்த அரைக் குட்டை இரகத்திலிருந்து பெறப்பட்டன 

அ) கோதுமை 

ஆ) நெல் 

இ) காராமணி 

ஈ) கடுகு

விடை : ஆ) நெல் 

 

13. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கருப்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன. 

அ) சக்காரம் ரோபஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம் 

ஆ) சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

இ) சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம் 

ஈ) சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபஸ்டம்

விடை : ஆ) சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

 

14. வரிசை ஒன்றை (I) (பயிர்) வரிசை இரண்டுடன் (II) (நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.  


I II III IV 

அ) iv) iii) ii) i)  

ஆ) ii) i) iii) iv) 

இ) ii) iv) i) iii) 

ஈ) i) iii) iv) ii)

விடை : ஆ) I-ii), II - i), III - iii), IV - iv) 

 

15. பயிரிடப்படும் கோதுமையின் தரத்தை அதிகப் படுத்துவதற்காக அட்லஸ் 66 என்ற கோதுமை இரகம் கொடுநராகப் பயன்படுத்தப்பட்டு இதில் உள்ள சத்து 

அ) இரும்பு

ஆ) கார்போஹைட்ரேட் 

இ) புரதம்

ஈ) வைட்டமின்கள்

விடை : இ) புரதம்

 

16. கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் பொருந்தியுள்ளது. 


விடை : அ) பூசா கோமல் - பாக்டீரிய அழுகல் 

 

17. கீழ்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது? 

அ) கோதுமை - ஹிம்கிரி

ஆ) மில் பிரீட் -  சாஹிவால் 

இ) நெல் - ரத்னா

ஈ) பூசாகோமல் - பிராசிகா

விடை : ஈ) பூசாகோமல் - பிராசிகா

 

18. பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்து. 


அ) i) இ) ii) அ) iii) ஆ) iv) ஈ) 

ஆ) i) ஈ) ii) இ) iii) அ) iv) ஆ) 

இ) i) அ) ii) இ) iii) ஆ) iv) ஈ) 

ஈ) i) ஆ) ii) அ) iii) ஈ) iv) இ)

விடை : அ) iv ஆ) i) ஈ) ii) இ) iii)

Tags : Plant Breeding | Botany பயிர் பெருக்கம் - தாவரவியல்.
12th Botany : Chapter 9 : Plant Breeding : Choose the Correct Answers (Pure Science Group) Plant Breeding | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம் : சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (உயிரியல் தாவரவியல் குழு) - பயிர் பெருக்கம் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 9 : பயிர் பெருக்கம்