Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

செல் சுழற்சி - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 7 : Cell Cycle

   Posted On :  06.07.2022 09:38 pm

11 வது தாவரவியல் : அலகு 7 : செல் சுழற்சி

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : செல் சுழற்சி - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

11 வது தாவரவியல் : அலகு 7

செல் சுழற்சி

 

மதிப்பீடு

 

1. செல் சுழற்சியின் சரியான வரிசை

அ) S-M-G1-G2

ஆ) S-G1-G2-M

இ) G1-S-G2-M

ஈ) M-G-G2-S

 

2. செல் சுழற்சியின் G1 நிலையில் செல் பகுப்பு வரையரைக்கப்பட்டால்அந்த நிலையின் பெயர் என்ன?

அ) S- நிலை –

ஆ) G2 - நிலை

இ) M - நிலை

ஈ) G0 – நிலை

 

3. விலங்கு செல்களில் மைட்டாசிஸ் சரியாக நடை பெறுவதற்கு (APC) அனஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்த கூட்டமைப்பு உதவுகிறது. இது ஒரு புரத சிதைவை செயல்படுத்தும் கூட்டமைப்பாகும். மனித செல்லில் APC பிழையினால் கீழே உள்ளவற்றில் எது நிகழ முடியும்?

அ) குரோமோசோம்கள் துண்டாக்கப்படுதல்

ஆ) குரோமோசோம்கள் குறுக்கம் அடையாது

இ) குரோமோசோம்கள் பிரிவுறாது

ஈ) குரோமோசோம்கள் மீள் சேர்க்கை நிகழும் 

 

4. செல் சுழற்சியின் S - நிலையில்

அ) ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA வின் அளவு இரண்டு மடங்காகிறது

ஆ) ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும் 

இ) குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாகும்

ஈ) ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA வின் அளவு பாதியாக குறையும் 

 

5. சென்ட்ரோமியர் இதற்கு தேவை

அ) படியெடுத்தல்

ஆ) குறுக்கே கலத்தல்

இ) சைட்டோபிளாச பிளவுறுதல்

ஈ) குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு

 

6. எதற்கு இடையே ஜோடி சேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது

அ) mRNA மற்றும் ரைபோசோம்கள்

ஆ) கதிர்கோல் இழைகள் மற்றும் சென்டிரோமியர்கள்

இ) இரண்டு ஒத்த குரோமோசோம்கள்

ஈ) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கேமீட்டு 

 

7. குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது

அ) டிப்ளோட்டீன்

ஆ) பாக்கிடீன்

இ) லெப்டோட்டீன்

ஈ) சைக்கோட்டீன்.

 

8. கீழே கொடுக்கப்பட்டுள்ள மறைமுக செல் பகுப்பை (மைட்டாசிஸ்) கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடை செய்யலாம்?

அ) அனாஃபேஸ்

ஆ) மெட்டாஃபேஸ்

இ) புரோஃபேஸ்

ஈ) இடைக்காலநிலை

 

9. குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம்?

அ) இரட்டைகள்

ஆ) ஜோடி சேர்தல்

இ) பிரிவு நிலை

ஈ) சினர்ஜிட்டுகள்

 

10. நட்சத்திர இழையற்ற பகுப்பு - மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு

அ) கீழ்நிலை விலங்குகள்

ஆ) உயர்நிலை விலங்குகள்

இ) உயர்நிலைத் தாவரங்கள்

ஈ) அனைத்து உயிருள்ள உயிரினங்கள்


Tags : Cell Cycle | Botany செல் சுழற்சி - தாவரவியல்.
11th Botany : Chapter 7 : Cell Cycle : Choose the Correct Answers Cell Cycle | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 7 : செல் சுழற்சி : சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் - செல் சுழற்சி - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 7 : செல் சுழற்சி