Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பிரையோஃபைட்களின் வகைப்பாடு

தாவரவியல் - பிரையோஃபைட்களின் வகைப்பாடு | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

   Posted On :  21.05.2022 03:10 am

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

பிரையோஃபைட்களின் வகைப்பாடு

1. ஹெப்பாட்டி காப்சிடா (ரிக்ஸியா, மார்கான்ஷியா. பொரெல்லா, ரியெல்லா) 2. ஆந்த்ரோசெரடாப்சிடா (ஆந்த்தோசெராஸ், டென்ட்ரோசெராஸ்) 3. பிரையாப்சிடா (ஃபியூனேரியா, பாலிடிரைக்கம், ஸ்பேக்னம்)

பிரையோஃபைட்களின் வகைப்பாடு

1957-ல் புரோஸ்காயர் பிரையோஃபைட்களை மூன்று வகுப்புகளாக வகைப்படுத்தினார்

1. ஹெப்பாட்டி காப்சிடா (ரிக்ஸியா, மார்கான்ஷியா. பொரெல்லா, ரியெல்லா)

2. ஆந்த்ரோசெரடாப்சிடா (ஆந்த்தோசெராஸ், டென்ட்ரோசெராஸ்)

3. பிரையாப்சிடா (ஃபியூனேரியா, பாலிடிரைக்கம், ஸ்பேக்னம்)



வகுப்பு: ஹெப்பாட்டிகாப்சிடா

பரிணாமத்தில் கீழ்நிலையில் உள்ள பிரையோஃபைட்களைக் கொண்டது. ஈரம் மிகுந்த நிழலான இடங்களில் வளரக்கூடிய எளிய தாவரங்களாகும். வேறுபாடு அடையாத உடலத்தைப் பெற்றுள்ள இவை மாஸ்களை ஒப்பிடும் போது எளிய உடலமைப்பைப் பெற்றுள்ளன. புரோட்டோனீமா நிலை காணப்படுவதில்லை. வித்தகத்தாவரம் எளிமையானது, குறைந்த காலமே வாழக்கூடியது. சிலவற்றில் பாதம், சீட்டா, காணப்படுவதில்லை. எடுத்துக்காட்டு: ரிக்ஸியா

வகுப்பு: ஆந்த்தோசெரடாப்சிடா

கேமீட்டகத் தாவரம் வேறுபாடடையாத உடலமைப்பைக் கொண்டது. கிளைத்தலற்ற, ஒருசெல் வேரிகள் காணப்படுகின்றன. புரோட்டோனீமா நிலை காணப்படுவதில்லை. வித்தகத்தாவரம் பாதம், வெடிவித்தகம் என வேறுபாடடைந்து காணப்படுகிறது. சீட்டா காணப்படுவதில்லை.

எடுத்துக்காட்டு: ஆந்த்தோசெராஸ்.

வகுப்பு: பிரையாப்சிடா

இவை மேம்பாடு அடைந்த பிரையோஃபைட்களாகும். கேமீட்டக உடலம் தண்டு போன்ற, இலை போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. தண்டு ஆரச்சீரைப் பெற்றுள்ளது. பல செல்களுடைய கிளைத்த வேரிகள் காணப்படுகிறது. புரோட்டோனீமா நிலை உள்ளது. வித்தகத்தாவரம் பாதம், சீட்டா, வெடிவித்தகம் என வேறுபாடு அடைந்துள்ளது. ஈரல் தாவரங்களை விட அதிக வேறுபாடு பெற்றவை. இவை பெரும்பாலும் அடர்த்தியான மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டு: ஃபியுனேரியா.

 

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 2 : Plant Kingdom : Classification of Bryophytes in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம் : பிரையோஃபைட்களின் வகைப்பாடு - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்