கனிமங்களின் வகைப்பாடு
1. தேவையான அளவின் அடிப்படையில் கனிமங்களின் வகைப்பாடு
இன்றியமையாத் தனிமங்கள் தேவையின் அடிப்படையில் பெரும் ஊட்டமூலங்கள், நுண் ஊட்டமூலங்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத கனிமங்கள் எனப் பிரிக்கப்படுகின்றது. அதிக அளவில் தேவைப்படும் இன்றியமையாத் தனிமங்கள் பெரும் ஊட்டமூலங்கள் என அழைக்கப்படுகிறது. குறைவான செறிவில் தேவைப்படும் அத்தியாவசியத் தனிமங்கள் நுண் ஊட்டமூலங்கள் எனப்படும்.
சோடியம், சிலிக்கான், கோபால்ட் மற்றும் செலினியம் போன்ற
தனிமங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் சில தாவரங்களின்
செயல்பாட்டிற்கு இவை தேவைப்படுகின்றன. இந்தத் தனிமங்கள் வகைப்படுத்தப்படாத கனிமங்களின்
பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இத்தனிமங்கள் சில குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சிலிக்கான் பூச்சி எதிர்ப்பு,
நீரோட்டத்தால் சாய்தலைத் தடுக்க மற்றும் செல்சுவர் உருவாக்கத்திற்கு ஈக்யுஸிட்டேசி
(ஈக்யுஸிட்டம்) சைப்பரேசி, கிராமினே ஆகிய குடும்பங்களின் தாவரங்களுக்கு தேவைப்படுகிறது.
(அட்டவணை 12.1)
பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் தோன்றுமிடத்தை வைத்து முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் வேறுபாட்டை உணரலாம். இதற்கு முக்கிய காரணம்
அ) விரைவாக இடம் பெயரும் தனிமங்கள்
ஆ) ஒப்பீட்டளவில் இடம்பெயராத தனிமங்கள் என வகைப்படுத்தப்படுகிறது. (படம் 12.1)
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரின், சோடியம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் விரைவாக இடம்பெயரும் தனிமங்கள். இளம் இலைகளை நோக்கி தனிமங்கள் விரைவாக இடம்பெயர்வதால் பற்றாக்குறை அறிகுறிகள் முதிர்சியடைந்த, உதிரும் நிலையில் உள்ள இலைகளில் தோன்றுகிறது.
கால்சியம், கந்தகம், இரும்பு, போரான் மற்றும் தாமிரம் போன்ற தனிமங்கள் எளிதில் இடம்பெயர்வதில்லை. எனவே, பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தோன்றுகிறது.
அ. அமைப்புச் சட்டத் தனிமங்கள்
கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற தனிமங்கள் அடிப்படை அமைப்பிற்கு அவசியமானவை.
வளிமண்டல நைட்ரஜனை அம்மோனியாவாக ஒடுக்கம் அடைய செய்யும் வினையைச் செயல்படுத்தும் நைட்ரோஜினேஸ் நொதிக்கு மாலிப்டினம் (Mo) அவசியம். ஆல்கஹால் டிஹைட்ரோஜினேஸ் மற்றும் கார்பனிக் அன்ஹைட்ரேஸ் நொதிகளின் செயல்பாட்டிற்குத் துத்தநாகம் (Zn) ஊக்கியாகச் செயல்படுகிறது. RUBP கார்பாக்சிலேஸ் - ஆக்ஸிஜினேஸ் மற்றும் PEP கார்பாக்சிலேஸ் போன்ற நொதிகளின் ஊக்கியாக மெக்னீசியம் (Mg) செயல்படுகிறது. யூரியேஸ் மற்றும் ஹைட்ரோஜினேஸ் நொதியின் பகுதி கூறாக நிக்கல் (Ni) உள்ளது.
சவ்வூடுபரவல் திறனைக் கட்டுப்படுத்துவதற்குப் பொட்டாசியம்(K) முக்கியப் பங்கு வகிக்கிறது. சவ்வூடுபரவல்திறனே நீர் உறிஞ்சுதல், இலைத்துளை இயக்கம் மற்றும் விரைப்பழுத்தத்திற்கு காரணமாக உள்ளது.
பச்சையத்தில் காணப்படும் மெக்னீசியம், ATP யில் உள்ள பாஸ்பரஸ் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.