Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | தசமங்களை ஒப்பிடுதல் (Comparison of Decimals)

எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - தசமங்களை ஒப்பிடுதல் (Comparison of Decimals) | 7th Maths : Term 2 Unit 1 : Number System

   Posted On :  05.07.2022 11:14 pm

7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

தசமங்களை ஒப்பிடுதல் (Comparison of Decimals)

1. சம எண்ணிக்கையில் தசம இலக்கங்களை உடைய தசம எண்கள். (Decimal Numbers with Equal Decimal Digits) 2. சமமற்ற எண்ணிக்கையில் தசம இலக்கங்களை உடைய தசம எண்கள் (Decimal Numbers with Unequal Decimal Digits)

தசமங்களை ஒப்பிடுதல் (Comparison of Decimals)

1968இல் நீளம் தாண்டுதலில் ஒலிம்பிக் சாதனையைப் படைத்த பாப் பீமானின் சாதனை 23 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அவரின் உலக சாதனை 8.90 மீட்டர். இச்சாதனையை 1991 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல் லூயிஸ், மைக் பவெல் ஆகியோர் முறியடித்தனர். கார்ல் லூயிஸ் 8.91 மீட்டர் மற்றும் பவெல் 8.95 மீட்டர் என்ற அளவில் சாதனை படைத்தனர். இத்தூரங்களை உங்களால் ஒப்பிட இயலுமா?

தசமங்களை ஒப்பிடக் கீழ்க்காணும் படிகளைக் கையாள்வோம்.


1. சம எண்ணிக்கையில் தசம இலக்கங்களை உடைய தசம எண்கள். (Decimal Numbers with Equal Decimal Digits) 

படி-(1) இரு எண்களின் முழுஎண் பகுதிகளை ஒப்பிடுக. பெரிய முழு எண் பகுதியைக் கொண்ட தசம எண்ணே பெரியது.

படி-(2) முழு எண் பகுதி சமமாக இருப்பின், தசம பகுதியில் உள்ள பத்தில் ஒன்றாம் இலக்கத்தை ஒப்பிடுக. பத்தில் ஒன்றாம் இலக்கத்தில் பெரியது எதுவோ அந்தத் தசம எண்ணே பெரியது.

படி-(3) முழுஎண் பகுதி மற்றும் பத்தில் ஒன்றாம் இலக்கம் இரண்டும் சமமாக இருப்பின், தசம எண் பகுதியின் நூறில் ஒன்றாம் இலக்கங்களை ஒப்பிட வேண்டும். நூறில் ஒன்றாம் இலக்கங்களில் பெரியது எதுவோ, அந்தத் தசம எண்ணே பெரியது. இதே போன்று தேவைக்கேற்ப மேலும் தொடர்க.


2. சமமற்ற எண்ணிக்கையில் தசம இலக்கங்களை உடைய தசம எண்கள் (Decimal Numbers with Unequal Decimal Digits)

45.55 மற்றும் 45.5 என்ற எண்களை ஒப்பீடு செய்க. முதலில் முழு எண் பகுதியை ஒப்பிட, இவ்விரண்டு எண்களும் சமம். எனவே, பத்தில் ஒன்றாம் இலக்கத்தினை ஒப்பிடுவோம். இங்கு, 45.55 மற்றும் 45.5 இல் பத்தில் ஒன்றாம் இலக்கம் சமம். எனவே, நூறில் ஒன்றாம் இலக்கத்திற்குத் தொடர, 45.5 இல் நூறில் ஒன்றாம் இலக்கம் பூஜ்ஜியம் (45.5 மற்றும் 45.50 இரண்டும் சமமானவை). எனவே, நூறில் ஒன்றாம் இலக்கத்தினை ஒப்பிட நாம் பெறுவது, 0 < 5.

எனவே , 45.50 < 45.55

குறிப்பு

தசம இலக்கங்களின் வலப்புற இறுதியில் பூஜ்ஜியத்தினைச் சேர்க்க, அந்தத் தசம எண்களின் மதிப்பு மாறாது.


எடுத்துக்காட்டு 1.13 

வேலன் 8.36 கி.கி உருளைக்கிழங்குகளையும், சேகர் 6.29 கி.கி உருளைக் கிழங்குகளையும், வாங்கினார்கள் எனில், அவற்றில் அதிக எடை உடையது எது

தீர்வு

8.36 மற்றும் 6.29 ஒப்பிடுக 

முழு எண் பகுதியை ஒப்பீடு செய்க 8 > 6

எனவே, 8.36 > 6.29


எடுத்துக்காட்டு 1.14  

A மற்றும் B என்ற இரண்டு பனிக்கூழ் தானியங்கி இயந்திரங்கள் 100 மிலி கோப்பைகளை நிரப்புமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரம் A மற்றும் B யில் நிரப்பப்பட்ட எடையையும் பனிக்கூழ் கோப்பைகள் இரண்டின் எடையையும் ஒப்பிட முறையே, இயந்திரம் A இல் நிரப்பப்பட்டது. 99.56 மி.லி ஆகவும் இயந்திரம் B இல் நிரப்பப்பட்டது 99.65 மி.லி ஆகவும் உள்ளது எனக் கண்டறியப்பட்டது. எந்த இயந்திரமானது அதிக அளவிலான பனிக்கூழினைக் கோப்பைகளில் நிரப்புகிறது எனக் காண்க

தீர்வு

99.56 மற்றும் 99.65 - ஒப்பிடுக

இவ்விரு தசம எண்களின் முழு எண் பகுதிகள் சமமானவை

எனவே, பத்தில் ஒன்றாம் இலக்கத்தை ஒப்பிட 5 < 6

எனவே, 99.56 < 99.65


எடுத்துக்காட்டு 1.15 

தரமான கலைக் காகிதம் (art paper) 0.05 மி.மி தடிமனும் மேல் பூச்சு பூசிய காகிதம் (matte coated paper) 0.09 மி.மீ தடிமனும் உள்ளது எனில், எந்தக் காகிதம் அதிக தடிமன் உடையது எனக் கண்டறிக

தீர்வு 

0.05 மற்றும் 0.09 ஒப்பிடுக.

மேற்கண்ட படிகளைக் கையாள, முழு எண் பகுதி மற்றும் பத்தில் ஒன்றாம் இலக்கம் இரண்டும் சமமானவை. நூறில் ஒன்றாம் இலக்கங்களை ஒப்பிட 5 < 9எனவே, 0.05 < 0.09.

இதுவரை நாம் இரண்டு தசம எண்களின் ஒப்பீடு பற்றிக் கண்டோம். இதனை மேலும் இரண்டுக்கு மேற்பட்ட தசம எண்களுக்கு விரிவுபடுத்த, தசம எண்களை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தி எழுத இயலும்.


எடுத்துக்காட்டு 1.16 

ஒரு பள்ளியின் மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியின் சாதனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏறுவரிசையில் அமைக்க 

(i) முதல் வருடம் 4.90 மீ

(ii) இரண்டாவது வருடம் 4.91 மீ 

(iii) மூன்றாவது வருடம் 4.95 மீ 

தீர்வு

மூன்று தசம எண்களின் முழு எண் பகுதியானது சமமாகும். தசம எண் பகுதியில் பத்தில் ஒன்றாம் இலக்கமும் சமமாக உள்ளது.

நூறில் ஒன்றாம் இலக்கங்கள் 0, 1 மற்றும் 5. 0 <1 <5

எனவே, ஏறுவரிசை 4.90, 4.91, 4.95.

குறிப்பு 

இறங்கு வரிசை: 4.95,4.91,4.90


எடுத்துக்காட்டு 1.17 

மேகலாவும் கலாவும் வாங்கிய தர்ப்பூசணிப் பழங்களின் எடைகள் முறையே 13.523 கி.கி மற்றும் 13.52 கி.கி எனில், எது அதிக எடையுடையது

தீர்வு

மேற்கண்ட இரண்டு தசம எண்களிலும் நூறில் ஒன்றாம் இலக்கம் வரை ஒரே மதிப்புகளைப் பெற்றுள்ளன. ஆனால் ஆயிரத்தில் ஒன்றாம் இலக்கமானது 13.52 விட 13.523 இல் அதிகமாக உள்ளது.

எனவே, 13.523 > 13.520

குறிப்பு 

3.300 மற்றும் 3.3 சமம்.

3.300= 3.3


Tags : Number System | Term 2 Chapter 1 | 7th Maths எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 2 Unit 1 : Number System : Comparison of Decimals Number System | Term 2 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல் : தசமங்களை ஒப்பிடுதல் (Comparison of Decimals) - எண்ணியல் | இரண்டாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 1 : எண்ணியல்