Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | 1°, 2° மற்றும் 3° ஆல்கஹால்களின் அமிலத் தன்மையை ஒப்பிடுதல்
   Posted On :  05.08.2022 07:30 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்

1°, 2° மற்றும் 3° ஆல்கஹால்களின் அமிலத் தன்மையை ஒப்பிடுதல்

ஆல்கஹால்களின் அமிலத்தன்மைக்கு அதன் O-H தொகுதியான முனைவுத் தன்மையுடைய பிணைப்பு காரணமாக அமைகிறது.

1°, 2° மற்றும்ஆல்கஹால்களின் அமிலத் தன்மையை ஒப்பிடுதல்

ஆல்கஹால்களின் அமிலத்தன்மைக்கு அதன் O-H தொகுதியான முனைவுத் தன்மையுடைய பிணைப்பு காரணமாக அமைகிறது. OH தொகுதி பிணைக்கப்ட்டுள்ள கார்பனுடன், எலக்ட்ரானை தன்னை நோக்கி கவரும் இயல்புடைய - CI, - F போன்ற -I தொகுதிகள் இணைக்கப்பட்டிருப்பின் அத்தகைய தொகுதிகள் எலக்ட்ரான் அடர்பினை தம்மை நோக்கி கவர்வதன் மூலம் புரோட்டான் வழங்குதலை சாதகமாக்குகின்றன. மாறாக, ஆல்கைல் தொகுதி போன்ற எலக்ட்ரானை விடுவிக்கும் இயல்புடைய +1 தொகுதிகள், ஆக்சிஜன் மீதான எலக்ட்ரான் அடர்வினை அதிகரிக்கின்றன மேலும், O - H பிணைப்பின் முனைவுத் தன்மையினை குறைக்கின்றன. எனவே, இதன் விளைவாக அமிலத்தன்மை குறைகிறது.

ஓரிணைய, ஈரிணைய மற்றும் மூவிணைய ஆல்கஹால்களை ஒப்பிடும் போது - OH தொகுதி இடம் பெற்றுள்ள கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்கைல் தொகுதிகளின் எண்ணிக்கை மூவிணைய ஆல்கஹாலில் அதிகம், இதன் விளைவாக அமிலத்தன்மை பின்வரும் வரிசையில் அமைகிறது.

ஆல்கஹால்கள் > 2° ஆல்கஹால் > 3° ஆல்கஹால்

எடுத்துக்காட்டு


ஆல்கஹால்கள் பிரான்ஸ்டட் காரமாகவும் செயல்பட இயலும். - OH தொகுதியின் ஆக்சிஜன் தனித்த பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான் இரட்டைகளைக் கொண்டிருப்பதன் காரணமாக புரோட்டானை ஏற்கும் இயல்பினைப் பெற்றுள்ளது.




12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers : Comparison of acidity of 1º, 2ºand 3º alcohols in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் : 1°, 2° மற்றும் 3° ஆல்கஹால்களின் அமிலத் தன்மையை ஒப்பிடுதல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 11 : ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்