Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | மென்மை அரசு என்ற கருத்தாக்கம்

அரசியல் அறிவியல் - மென்மை அரசு என்ற கருத்தாக்கம் | 11th Political Science : Chapter 2 : State

   Posted On :  25.09.2023 03:48 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : அரசு

மென்மை அரசு என்ற கருத்தாக்கம்

முழு வளர்ச்சி பெறாத ஆளுமை திறன்கள் கொண்ட காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய நாடுகள் மென்மை அரசுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

மென்மை அரசு என்ற கருத்தாக்கம் (Concept of Soft state)

செயல்பாடு

❖ மேற்கத்திய நாடுகளில், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ளுதல் என்பது பேறுகால மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாக விளங்குகிறது. கருவுற்ற தாய்மார்கள் பிறக்கப்போகும் தம் குழந்தைகைளின் பாலினத்தை முன்னரே தெரிந்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். 

❖ ஆனால் இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அதன் பாலினத்தை தெரிவிப்பதோ, தெரிந்துகொள்ள முயற்சிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும். - "கருவிலிருக்கும் குழந்தைகளின் - பாலினத்தை கண்டறிதல் தடைச்சட்டம்" [PreConception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT) Act] எனும் சட்டம் மூலம் கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை கருவுற்று இருக்கும் பெண்ணிற்கோ, அவரது உறவினருக்கோ சொல், செயல் மற்றும் பிற குறியீடுகள் வழியாக தெரிவிப்பது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன்?

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் குன்னர் மிர்டால் (Gunner Myrdal) மேற்கத்திய அரசுகளுடன் ஆசிய அரசுகளை ஒப்பிடும்போது, ஆசிய அரசுகளில் நிலவும் சமுதாய ஒழுங்கீனங்கள் ஆசிய அரசுகளை மென்மை அரசுகளாக ஆக்குவதை கண்டறிந்தார். சமூக ஒழுங்கீனம், ஊழல் மற்றும் மிகப்பலவீனமான சட்ட அமலாக்கம் ஆகியன மென்மை அரசின் முக்கிய தன்மைகளாகும்.

முழு வளர்ச்சி பெறாத ஆளுமை திறன்கள் கொண்ட காலனியாதிக்க காலத்திற்கு பிந்தைய நாடுகள் மென்மை அரசுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. தரநிலைகளை கடைபிடிக்காமை, ஒழுக்கத்தை பராமரிக்க இயலாமை, சட்ட அமலாக்கம் செய்ய இயலாமை போன்றவை நமது நாட்டினை மென்மை அரசாக மாற்றிவிடுகிறது. தனது மக்களாட்சி பண்புகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள ஒரு மென்மை அரசால் இயலவே இயலாது.

ஒரு மாணவராக நீங்கள் காணும் சமுதாய ஒழுங்கீனங்களையும், அவற்றை சீர் செய்வதற்காக உங்களின் வழிமுறைகளையும் பட்டியலிடுக.

செயல்பாடு

❖ மேற்கத்திய நாடுகளில், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துகொள்ளுதல் என்பது பேறுகால மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாக விளங்குகிறது. கருவுற்ற தாய்மார்கள் பிறக்கப்போகும் தம் குழந்தைகைளின் பாலினத்தை முன்னரே தெரிந்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். 

❖ ஆனால் இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அதன் பாலினத்தை தெரிவிப்பதோ, தெரிந்துகொள்ள முயற்சிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும். - "கருவிலிருக்கும் குழந்தைகளின் - பாலினத்தை கண்டறிதல் தடைச்சட்டம்" [PreConception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT) Act] எனும் சட்டம் மூலம் கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை கருவுற்று இருக்கும் பெண்ணிற்கோ, அவரது உறவினருக்கோ சொல், செயல் மற்றும் பிற குறியீடுகள் வழியாக தெரிவிப்பது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன்?

Tags : Political Science அரசியல் அறிவியல்.
11th Political Science : Chapter 2 : State : Concept of Soft State Political Science in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : அரசு : மென்மை அரசு என்ற கருத்தாக்கம் - அரசியல் அறிவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 2 : அரசு