Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்

வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல் | 7th Maths : Term 1 Unit 5 : Geometry

   Posted On :  05.07.2022 02:17 am

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல்

பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்

வடிவியல் : பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்

பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல் 


(i) 60° அளவுடைய கோணத்தை வரைதல் 

படி 1: ஒரு நேர்கோடு வரைக. அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்க.

படி 2 : A மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரத்தில் நேர்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க.

படி 3: அதே அளவு ஆரத்துடன், B மையமாகக் கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க

படி 4 : AC இணைக்க. BAC என்பது 60° அளவுடைய கோணமாகும்


(ii) 120° அளவுடைய கோணத்தை வரைதல்

120° கோண அளவில், இரண்டு 60° கோண அளவுகள் உள்ளதை நாம் அறிவோம். எனவே 120° கோணத்தை அமைப்பதற்கு 60° கோணத்தை இரு முறை தொடர்ந்து அமைத்தல் போதுமானதாகும்

படி 1:  ஒரு நேர்கோடு வரைக. அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்க.

படி 2 : A மையமாகக் கொண்டு வசதியான ஆரத்தில் நேர்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க

படி 3: ஆரத்தின் அளவை மாற்றாமல் Bயை மையமாகக் கொண்டு படி 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க

படி 4 : மீண்டும் அதே அளவு ஆரத்துடன், C மையமாகக்கொண்டு படி 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு (படத்தில் உள்ளவாறு) மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை D எனக் குறிக்க

படி 5: AD இணை. BAD என்பதே தேவையான 120° அளவுடைய கோணமாகும்.


(iii) 30° அளவுடைய கோணத்தை வரைதல்

60° இல் பாதி அளவு 30° என்பதால் 60° கோணத்தைக் கோண இருசமவெட்டியைப் பயன்படுத்திப் பிரிப்பதன் மூலம் 30° கோணத்தை வரை இயலும்

படி 1:  60° கோணத்தை அமைக்கவும் (60° அளவுடைய கோணத்தை வரைதல் முறையைப் பயன்படுத்துக). 

படி 2 : B மையமாகக்கொண்டு ஏதேனும் ஒரு  ஆரமுடைய வட்டவில்லை BAC இன் உட்பகுதியில் வரைக

படி 3 : அதே அளவு ஆரத்துடன், C மையமாகக்கொண்டு படி 2 இல் வரைந்த வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை  D எனக் குறிக்க

படி 4 : AD இணைக்க. BAD ஆனது தேவையான 30° அளவுடைய கோணமாகும். (DAC இன் அளவைக் குறித்துச் சிந்திக்க).


(iv) 90° அளவுடைய கோணத்தை வரைதல்

படி 1:  120° அளவுடைய கோணத்தை அமைக்கவும் (120° அளவுடைய கோணத்தை வரைதல் முறையைப் பயன்படுத்துக).

படி 2 : C மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு அளவுடைய ஆரத்தில் CAD இன் உட்பகுதியில் சிறு வட்டவில் ஒன்றை வரைக.

படி 3 : அதே அளவு ஆரத்துடன் D மையமாகக்கொண்டு படி 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை E எனக் குறிக்க.

படி 4:  AE இணைக்க. BAD = 90° அளவுடைய கோணமாகும்.



Tags : Geometry | Term 1 Chapter 5 | 7th Maths வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 5 : Geometry : Construction of special angles without using protractor Geometry | Term 1 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல் : பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல் - வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல்