Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | முறைக் குறிகளும் குறியீடுகளும்

தலப்பட விவரணம் - புவியியல் - முறைக் குறிகளும் குறியீடுகளும் | 11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map

   Posted On :  16.05.2022 01:36 am

11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம்

முறைக் குறிகளும் குறியீடுகளும்

நிலவரைபடத்தில் புவிக் கூறுகள் முறைக் குறிகள் மற்றும் குறியீடுகளாக காட்டப்படுகின்றன.

முறைக் குறிகளும் குறியீடுகளும்

நிலவரைபடத்தில் புவிக் கூறுகள் முறைக் குறிகள் மற்றும் குறியீடுகளாக காட்டப்படுகின்றன. இத்தகையக் குறியீடுகள் புவியின் உண்மையான கூறுகளின் சித்தரிப்பு ஒற்றுமையைக் கொண்டு மிகத்தெளிவாக விளக்குகிறது. சில முறைக்குறியீடுகளை அங்கீகரிப்பதற்கு முன்பு அவற்றை கவனமாக ஆய்வு செய்தல் வேண்டும்.

பல்வேறு வகையான இயற்கை மற்றும் கலாச்சாரக் கூறுகள் புள்ளிக் குறியீடுகள், கோட்டுக் குறியீடுகள், பரப்புக் குறியீடுகள் மூலமாக விளக்கப்படுகின்றன. மேலும் இவை எழுத்துக்கள், படங்கள், குறிகள் அல்லது நிறங்கள் போன்றவற்றால் காட்டப்படுகின்றன. இந்திய நிலஅளவைத் துறையானது தலநிலவரைப்படத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளுக்கான தரப்படுத்தப்பட்ட தொகுப்பினைத் தயாரித்துள்ளது..

இந்திய நில அளவை துறையின் நில வரைப்படத்தில் பொதுவாக ஏழு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

கருப்பு

நிலவரைபடத்தில் எழுத்தப்பட்டுள்ள கட்டக எண் தவிர மற்ற அனைத்து எழுத்துக்களும், கருப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும் (பெயர்,எழுத்துச் சுருக்கம் அதாவது இரயில் நிலையம், தபால் நிலையம்) ஆற்றின் கரை உடைப்பட்ட நிலம், வறண்ட நீரோடை, கணக்கெடுக்கப்பட்ட மரங்கள், உயரம் மற்றும் உயரக் குன்றுகள், இருப்புப்பாதை, தொலைபேசி மற்றும் தந்தி கம்பிகள், அட்ச மற்றும் தீர்க்க கோடுகள், அனைத்து எல்லைக் கோடுகள், எழுத்துரு பெருக்கம் அதாவது திறந்த வெளி புதர்கள், பணி நடைபெறும் கப்பிச் சாலை, மீட்டர் வழி இரயில் பாதை போன்றவை.

 

பழுப்பு

சம உயரக்கோடுகள் மற்றும் அவற்றின் மதிப்புகள்உருவத்தோற்ற கோடுகள்மணல் நிலத்தோற்றங்கள் மற்றும் தரிசு நிலப் பாறைகள்அதாவது மலைகள் மற்றும் மணற்குன்றுகள் பழுப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

 

நீலம்

நீர் நிலைகள் (ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள், மேலும் பல) போன்றவை நீல நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

 

பச்சை

மரங்களடர்ந்த பகுதிகள் மற்றும் காடுகள் பச்சை நிறத்தில் காணப்படும். பழத்தோட்டங்கள்சிதறிய மரங்கள் மற்றும் புதர்கள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

 

மஞ்சள்

வேளாண் நிலங்கள் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

 

சிவப்பு

குறிப்புச் சட்டகக்கோடுகள் (கிழக்கு மற்றும் வடக்கு) மற்றும் அவற்றின் மதிப்பீடு (எண்கள்), சாலைகள், மாட்டு வண்டிப்பாதை மற்றும் ஒற்றையடிப்பாதை, குடியிருப்புகள், குடிசைகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவை சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

 

வெள்ளை

வேளாண்மை செய்யப்படாத நிலங்கள் மற்றும் பனி உறைந்த மற்றும் பனி படர்ந்த மலைகள் போன்றவை வெள்ளை நிற திட்டுகளாக குறிக்கப்பட்டிருக்கும்.


 படம் 11.1 முறைக்குறியீடுகளும் குறியீடுகளும்



படம் 11.2 வரிசைக்கிரமமான நிலவரைபடங்கள் (Open series Maps)

Tags : Topographical Map | Geography தலப்பட விவரணம் - புவியியல்.
11th Geography : Chapter 11 : Interpretation of Topographical Map : Conventional signs and symbols Topographical Map | Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம் : முறைக் குறிகளும் குறியீடுகளும் - தலப்பட விவரணம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 11 : தலப்பட விவரணம்