Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | ஸ்டரக்சர்லில் தரவு அருவமாக்கம்
   Posted On :  15.08.2022 05:07 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 2 : தரவு அருவமாக்கம்

ஸ்டரக்சர்லில் தரவு அருவமாக்கம்

உதாரணமாக மாஸ்டர் மைண்ட் விளையாட்டில், ஆட்டக்கார்ர்கள் யூகிக்கும் நான்கு நிரங்களின் பட்டியலை கண்காணிக்க வேண்டும்.

ஸ்டரக்சர்லில் தரவு அருவமாக்கம்

List தரவு அருவமாக்கம் மூலம் நினைவக செல்கள் தொகுப்பிற்கு பெயரிட உதவுகின்றது என்பதை நாம் முன்னதாக அறிந்துள்ளோம். உதாரணமாக மாஸ்டர் மைண்ட் விளையாட்டில், ஆட்டக்கார்ர்கள் யூகிக்கும் நான்கு நிரங்களின் பட்டியலை கண்காணிக்க வேண்டும். நான்கு வெவ்வேறு மாறிகளுக்கு (colorl, color2, color3, மற்றும் color4) மாற்றாக 'Predict) என்ற ஒற்றை மாறியை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு, Predict =['red', 'blue', 'green', 'green']

List பல விருப்பப்படி பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிப்பதில்லை . Predict முறையில் நீங்கள் பகுதிகளை பெயரிட தேவையில்லை. அட்டவணையைக் கொண்டு ஒவ்வொரு நிரத்தினையும் பெறலாம்.

ஆனால் மிகவும் சிக்கலான விஷயத்தில் ஒரு நபர் எடுத்துக்கொண்டால், அதில் பல உருப்படி பொருளில், அனைத்து உருப்புகளும் பெயரிடப்பட்டிருக்கும். முதல் பெயர், கடைசி பெயர், அடையாளம், மின்னஞ்சல் ஒரு நபரை லிஸ்ட் கொண்டு குறிப்பிடலாம்:

person=['Padmashri', 'Baskar', '994-222-1234', 'compsci@gmail.com']

ஆனால் இது போன்ற குறியீடு ஒவ்வொரு உருப்படியும் எதை குறிக்கின்றது என்று வெளிப்படையாக குறிப்பதில்லை.

இச்சிக்கலை list பயன்படுத்துவதற்கு மாற்றாக structure அமைப்பை (OOP மொழியில் இது இனக்குழு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது) கொண்டு பல உருப்படி பொருளில் அனைத்து உருப்புகளும் பெயரிடப்படும் (பெயர் கொடுக்கப்பட்டு பின்வரம் போலிக்குறிமுறையை காணவும்:

class Person:

creation( )

firstName :=""

lastName :=""

id :=""

email :=""

Person எனும் புதிய தரவு வகையை படவடிவில் உருவமைக்கலாம்.


இனக்குழு கட்டமைப்பு ஒரு நபரை குறிக்கும் பல பகுதி பொருளுக்கு வடிவம் வரையறுக்கிறது. இந்த வரையறுப்பு புதிய தரவு வகையை சேர்க்கிறது. இதில் நபர் என்பது வகையாகும். ஒரு முறை வரையறுத்தலின், நாம் புதிய மாறிகளை உருவாக்கலாம். இந்த எடுத்துக்காட்டில் Person என்பது இனக்குழு அல்லது வகையாகும். p1 என்பது தனிப்பட்ட குக்கீ குறிக்கின்றது. குக்கீ கட்டர் கொண்டு பல குக்கீகளை தயாரிக்கலாம். அதுபோன்று இவ்இனக்குழுவைக் கொண்டு பல பொருள்களை உருவாக்கலாம்.


இதுவரை, இனக்குழு தொடர்புடைய தரவுகளைக் கொண்டு தரவு அருவமாக்கத்தை எவ்வாறு வரையறுக்கிறது என்று பார்த்தோம். ஓர் இனக்குழு என்பது தரவுகளை மட்டுமில்லாது செயற்கூற்றினையும் தன்னுடன் கொண்டிருக்கும். இவ்வகை செயற்கூறுகள், இனக்குழுவிற்கு கீழ்படந்தவை, ஏனெனில் இவை இனக்குழுவின் தரவுகளை வைத்து செயல்படுகிறது. எடுத்துக்காட்டு Person பொருளின் தரவுகளை மாற்றம் செய்தல் அல்லது ஆய்வு செய்தல் எனவே, இனக்குழு என்பது தரவு மற்றும் அத்தரவின் மீது செயலாற்றும் செயற்கூறுகளை கொண்ட தொகுப்பாகும். முன்னதாக பார்த்த எடுத்துக்காட்டு மற்றும் விளக்கத்தின் மூலம் அருவமாக்கம் என்பது சிக்கலான தரவுகளை எளிய முறையில் கையாள உதவுகின்றது என்பதை உணரலாம்.

12th Computer Science : Chapter 2 : Data Abstraction : Data Abstraction in Structure in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 2 : தரவு அருவமாக்கம் : ஸ்டரக்சர்லில் தரவு அருவமாக்கம் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 2 : தரவு அருவமாக்கம்