Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பணமதிப்பு நீக்கம்

வங்கியியல் - பணமதிப்பு நீக்கம் | 12th Economics : Chapter 6 : Banking

   Posted On :  16.03.2022 01:52 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்

பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டபூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயலாகும்.

பணமதிப்பு நீக்கம் (Demonetization)

பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டபூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயலாகும். அந்த பணம் பணச்சுழற்ச்சியிலிருந்து நீக்கப்பட்டு அந்த இடத்தில் வேறு வடிவிலான பணம் இடம்பெறும். இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் நாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ₹500 மற்றும் ₹1000 மதிப்பிலான காகிதப்பணம் மதிப்பு நீக்கப்பட - அவ்வாறு மதிப்பு நீக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பில் 99 சதவிகிதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்பியது.




1. பண மதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள்

1. கருப்புப் பணத்தினை ஒழிப்பது, 

2. இலஞ்சத்தை தடுப்பது 

3. தீவிரவாதித்திற்கு பணம் செல்வதை தடுப்பது மற்றும் 

4. கள்ளப் பணத்தினை தடுப்படுது ஆகியன.





தொகுப்புரை

ஒரு நாட்டின் வளர்ச்சிச் செயல்பாட்டில் நிதித் துறை முக்கியபங்கு வகிக்கின்றது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. வருமானத்தை விட குறைவாகச் செலவு செய்வோரிடமிருந்து வருவாய்க்கு அதிகமாகச் செலவு செய்வோருக்கு அதாவது நிகரச் சேமிப்பாளர்களிடமிருந்து நிகரக் கடன் வாங்குவோருக்கு பணம் பரிமாறும் அமைப்பாக நிதி நிறுவனங்கள், கருவிகள் மற்றும் அங்காடிகளை உள்ளடக்கிய பண அமைப்பு செயல்படுகின்றது. வணிகவங்கிகள் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்தல் அவைகளின் செயல்திறனை மேம்படுத்தியது மூலமாக நிதியியல் சீர்திருத்தக் கொள்கைகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் 2010களில் செயல்படா சொத்துகளின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.





அருஞ்சொற்பொருள்



* வணிக வங்கிகள் : கடன் பணத்தை உற்பத்தி செய்வதன் மூலம் வியாபார நிறுவனங்களுக்கு குறுகிய காலக்கடன்கள் வழங்கும் நிறுவனங்கள்

* கடன் உற்பத்தி: கடன் மற்றும் முன்பணம் வழங்குதலை பெருக்குதல்.

* வங்கியல்லா பண நிறுவனங்கள்: முழுமையான வங்கி உரிமம் இல்லாமலும் மைய வங்கியின் மேற்பார்வைக்கு உட்படாத நிதி நிறுவனங்கள்.

* மைய வங்கி: அரசின் பணம், பண அளிப்பு, வட்டி விகிதம் ஆகியவற்றை நிர்வகிக்கும் அமைப்பு. மைய வங்கிகள் வணிக வங்கிகளை மேற்பார்வை இடுகின்றது.

* வங்கி விகிதம்: முதல் தர பத்திரங்களை மைய வங்கி மறு கழிவு செய்யும் விகிதம்.

* சட்ட பூர்வ நீர்மை விகிதம்: மொத்த வைப்பில் வணிக வங்கிகள் கண்டிப்பாக ரொக்கப்பணம், தங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்பத்திரங்கள் ஆக வைத்திருக்க வேண்டிய விகிதம்.

* ரொக்கக் கையிருப்பு வீதம் : மொத்த வைப்புத்தொகையில் வணிக வங்கிகள் மைய வங்கியில் ரொக்கமாக வைத்திருக்க வேண்டிய அளவின் வீதம்.

* நிதிக் கொள்கை: பண அளிப்பு, வட்டி விகிதம் ஆகியவற்றை நிர்வகிக்க மைய வங்கி மேற்கொள்ளும் பேரியல் பொருளாதார நடவடிக்கைகள்.

* மூலதன அங்காடி: நீண்ட காலக் கடன், மற்றும் பத்திரங்களுக்கான  பண அங்காடி.

* பண மதிப்பிழப்பு: குறிப்பிட்ட மதிப்புள்ள காகித பணத்தின் சட்டச் செலாவணி அந்தஸ்த்தை நீக்குதல்

Tags : Banking வங்கியியல்.
12th Economics : Chapter 6 : Banking : Demonetisation Banking in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல் : பணமதிப்பு நீக்கம் - வங்கியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 6 : வங்கியியல்