Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | மின் தடை எண் காணல்

இயற்பியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - மின் தடை எண் காணல் | 10th Science : Physics Practicals

   Posted On :  29.07.2022 06:23 pm

10வது அறிவியல் : இயற்பியல் செய்முறைகள்

மின் தடை எண் காணல்

கொடுக்கப்பட்ட கம்பிச் சுருளின் மின்தடை எண்ணை கணக்கிடல்.

மின் தடை எண் காணல்


நோக்கம்:

கொடுக்கப்பட்ட கம்பிச் சுருளின் மின்தடை எண்ணை கணக்கிடல். 


தேவையான கருவிகள்:

மின்தடை எண் காணவேண்டிய கம்பிச் சுருள், திருகு அளவி, மீட்டர் அளவு கோல், மின்கலம், சாவி, அம்மீட்டர், வோல்ட் மீட்டர், மின்தடை மாற்றி மற்றும் மின் இணைப்புக் கம்பி. 


சூத்திரம்:

கொடுக்கப்பட்ட கம்பிச் சுருளின் மின்தடை எண் 



இங்கு,

A என்பது கம்பிச் சுருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு(மீ2

L என்பது கம்பிச் சுருளின் நீளம்(மீ) 

R என்பது கம்பிச் சுருளின் மின்தடை(Ω)


மின்சுற்றுப் படம்:



செய்முறை: 

* மின்சுற்றுப் படத்தில் காட்டியுள்ளபடி மின்கலம், அம்மீட்டர், கம்பிச் சுருள், மின்தடை மாற்றி மற்றும் சாவி ஆகியவற்றை மின் இணைப்புக் கம்பியைப் பயன்படுத்தி தொடராக இணைக்கவும். 

* வோல்ட் மீட்டரை கம்பிச் சுருளுக்கு எதிராக பொருத்தவும். 

* சாவியை பயன்படுத்தி மின்சுற்றை மூடவும். 

* மின்தடைமாற்றியில் மாற்றம் செய்து அம்மீட்டரில் 0,5 ஆம்பியர் மின்னோட்டம் பாயுமாறுச் செய்யவும், 

* கம்பிச்சுருளுக்கு எதிரான மின்னழுத்த வேறுபாட்டினை வோல்ட் மீட்டரில் உற்றுநோக்கி அட்டவணையில் குறித்துக் கொள்ளவும். 

* மின்தடைமாற்றியில் மாற்றம் செய்து அம்மீட்டரில் 0.5 ஆம்பியர், 1.0 ஆம்பியர், 1.5 ஆம்பியர் மின்னோட்டங்களை பாயச் செய்யவும். 

* மேற்கண்ட மின்னோட்டங்கள் பாயும் போது கம்பிச் சுருளுக்கு எதிரான மின்னழுத்த வேறுபாட்டினை அட்டவணையில் குறித்துக் கொள்ளவும். 

* திருகு அளவைப் பயன்படுத்தி கம்பிச் சுருளின் விட்டத்தினை அளவிடவும். 

* மீட்டர் அளவு கோலைப் பயன்படுத்தி கம்பிச் சுருளின் நீளத்தை கணக்கிடவும். 


காட்சிப் பதிவுகள்: 


(i) மின்தடையை கணக்கிடல்: 




(ii) திருகு அளவியை பயன்படுத்தி கம்பிச் சுருளின் விட்டம் கணக்கிடல் 

மீச்சிற்றளவு(மீசி) = 0.01 மி.மீ

சுழிப்பிழை(சுபி) = இல்லை




கணக்கீடுகள்:

கம்பிச் சுருளின் ஆரம் r = விட்டம்/2

= 2.20 / 2

= 1.10 × 10-3மீ 

கம்பிச் சுருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு A = π r2

= 3.14 × (1.10 × 10-3)2

= 3.8 × 10-6மீ2 

கம்பிச் சுருளின் நீளம் L = 1.5 மீ.

கம்பிச் சுருளின் மின்தடை எண்

= 3.8 × 10-6 / 1.5

= 2.53 × 10-6 Ωமீ


முடிவு:

கம்பிச் சுருளின் மின்தடை எண் = 2.53 × 10-6 Ωமீ


Tags : Physics Laboratory Practical Experiment இயற்பியல் ஆய்வக செய்முறை பரிசோதனை.
10th Science : Physics Practicals : Determination of resistivity Physics Laboratory Practical Experiment in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : இயற்பியல் செய்முறைகள் : மின் தடை எண் காணல் - இயற்பியல் ஆய்வக செய்முறை பரிசோதனை : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : இயற்பியல் செய்முறைகள்