Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையைக் காணல்

இயற்பியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையைக் காணல் | 10th Science : Physics Practicals

   Posted On :  29.07.2022 06:21 pm

10வது அறிவியல் : இயற்பியல் செய்முறைகள்

திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையைக் காணல்

திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையைக் காணல்

திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையைக் காணல்



நோக்கம்:

திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையைக் காணல். 


தேவையான கருவிகள்:

ஒரு மீட்டர் அளவுகோல், கத்திமுனை, எடைக் கற்கள், நூல் 


செய்முறை: 

1, கத்திமுனையின் மீது மீட்டர் அளவுகோலினை அதன் ஈர்ப்புமையத்தில் நிலைநிறுத்திட வேண்டும். அல்லது நூலைப் பயன்படுத்தி மீட்டர் அளவுகோலின் மையத்தில் சரியாகக் கிடக்கை நிலையில் இருக்குமாறு தொங்கவிட வேண்டும். மேலும் அளவுகோல் சமநிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

2. தெரிந்த எடையினை (W2) அளவுகோலின் ஒரு முனையிலும், மதிப்புத்தெரியாத எடையினை (W1) மறு முனையிலும் தொங்கவிட வேண்டும். 

3. அளவுகோலின் ஒரு முனையில் உள்ள எடையினை நிலைநிறுத்தி, அளவுகோல் சமநிலையை எய்தும் வரை, மறுமுனையில் உள்ள எடையினை நகர்த்திட வேண்டும், 

4. அளவுகோலின் மையத்திலிருந்து எடை தொங்க விடப்பட்டுள்ள தொலைவு d1 மற்றும் d2 வினை துல்லியமாக அளந்திட வேண்டும். 

5. மதிப்பு தெரியாத எடையின் நிலையினை, வெவ்வேறு நிலைகளில் மாற்றி சோதனையை மீண்டும் மீண்டும் செய்திட வேண்டும். தொலைவினை அளந்து அளவீடுகளை அட்டவணைப் படுத்த வேண்டும். 


காட்சிப் பதிவுகள்:



கணக்கீடுகள்:

சூத்திரத்தைப் பயன்படுத்தி விசையின் திருப்புத்திறனைக் கணக்கிடலாம். விசையின் திருப்புத் திறன் = எடை × தொலைவு




மதிப்பு தெரியாத எடையினால் உருவாகும் இடஞ் சுழி திருப்புத் திறன் = W1 × d1 

மதிப்பு தெரிந்த எடையினால் உருவாகும் வலஞ்சுழி, திருப்புத் திறன் = W2 × d2

W1 × d1= W2 × d2

மதிப்பு தெரியாத எடை W1 = [ W2 × d2 ] /d1,


முடிவு:

திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி மதிப்புத் தெரியாத பொருளின் எடை

W1 = 0.653 கிகி 


Tags : Physics Laboratory Practical Experiment இயற்பியல் ஆய்வக செய்முறை பரிசோதனை.
10th Science : Physics Practicals : Determination of weight of an object using the principle of moments Physics Laboratory Practical Experiment in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : இயற்பியல் செய்முறைகள் : திருப்புத் திறன்களின் தத்துவத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளின் எடையைக் காணல் - இயற்பியல் ஆய்வக செய்முறை பரிசோதனை : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : இயற்பியல் செய்முறைகள்