இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - வேறுபடுத்துக. | 10th Social Science : Geography : Chapter 5 : India - Resources and Industries

   Posted On :  24.07.2022 09:52 pm

10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

வேறுபடுத்துக.

சமூக அறிவியல் : புவியியல் : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: வேறுபடுத்துக.

IV. வேறுபடுத்துக.

 

1. புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்.


புதுப்பிக்க இயலும் வளங்கள்

1. பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்ருவாக்கம் செய்து கொள்ளும் வளங்கள்.

2. சுற்றுச்சூழலைப் பாதிக்காது.

3. சூரிய ஆற்றல், காற்று சக்தி உயிரிவளம்.

புதுப்பிக்க இயலா வளங்கள்

1. பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்ருவாக்கம் செய்ய இயலாத வளங்கள்.

2. சுற்றுச்சூழலைப் பாதிக்கும்.

3. நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு.

 

2. உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்.


உலோக கனிமங்கள்

1. ஒன்று () அதற்கு மேற்பட்ட உலோகங்களை கொண்டிருக்கும்.

2. அரிதாகவும் இயற்கையான அடர்ந்த தாது படிவங்களையும் காணப்படுகின்றன.

3. இரும்பு, மாங்கனீசு, தாமிரம், தங்கம்.

அலோக கனிமங்கள்

1. இவ்வகை கனிமங்களில் உலோக தன்மை இருப்பதில்லை.

2. இரும்பு தாது படிவங்கள் இல்லாமல் காணப்படுகின்றன.

3. மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம், நைட்ரேட், நிலக்கரி, பெட்ரோலியம்.

 

3. வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்.


வேளாண் சார்ந்த தொழிலகங்கள்

1. வேளாண் பொருட்களை மூலப் பொருட்களாக பயன்படுத்துவது.

2. தொழிலாளர்களை சார்ந்தது.

3. கரும்பு, பருத்தி, சணல் ஆலைகள்.

கனிமம் சார்ந்த தொழிலகங்கள்

1. கனிமப் பொருட்களை மூலப் பொருட்களாக பயன்படுத்துவது.

2. இயந்திரங்களை சார்ந்தது.

3. இரும்பு, எஃகு தொழிற்சாலைகள்.

 

4. சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்.


சணல் ஆலைகள்

1. சணல் என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய இழைநார்.

2. இது சிப்பங்கள் மற்றும் சாக்கு பைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

3. பருத்தி நெசவாலைகளுக்கு அடுத்தாற்போல் சணல் ஆலைகள் இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலைத் துறையாக உள்ளது.

4. மேற்கு வங்கம், பீகார், ஆந்திரப்பிரதேசம் சணல் உற்பத்தி செய்யும் மாநிலங்கள்.

சர்க்கரை ஆலைகள்

1. இந்தியாவில் சர்க்கரை பெரும்பாலும் கரும்பில் இருந்து எடுக்கப்படுகிறது.

2. கரும்பு சக்கை பேட்டரி தயரிக்கப் பயன்படுகிறது.

3. பருத்தி நெசவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள்.

4. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு சர்க்கரை ஆலைகளை உற்பத்தி செய்யும் மாநிலங்கள்.

 

5. மரபு சார் மற்றும் மரபு சாரா எரிசக்தி.


மேற்கு கடற்கரைச் சமவெளி

1. மரபு சார் எரிசக்தி புதுப்பிக்க இயலாத வளங்களாகும்.

2. பெரும்பாலான வளங்கள் பயன்பாட்டின்போது மாசுக்கள் ஏற்படக் காரணமாகின்றன.

3. அனல் மின்சக்தி, அணுமின்சக்தி.

கிழக்கு கடற்கரை சமவெளி

1. மரபு சாரா எரிசக்தி புதுப்பிக்கக் கூடிய வளங்களாகும்.

2. பயன்பாட்டின்போது மாசுகள் ஏற்பட வாய்ப்புகளில்லை.

3. நீர்மின் சக்தி, சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரி சக்தி.

 

Tags : Resources and Industries in India | Geography | Social Science இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல்.
10th Social Science : Geography : Chapter 5 : India - Resources and Industries : Distinguish between Resources and Industries in India | Geography | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் : வேறுபடுத்துக. - இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்