Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு

எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு | 7th Maths : Term 1 Unit 1 : Number System

   Posted On :  02.07.2022 07:52 pm

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல்

கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு

முழு எண்களின் பெருக்கலானது கூட்டலின் மீது பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்யும் என்பது நாம் அறிந்ததே. இப்பண்பு முழுக்களுக்குப் பொருந்துமா என சோதிப்போம்.

கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு

முழு எண்களின் பெருக்கலானது கூட்டலின் மீது பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்யும் என்பது நாம் அறிந்ததே. இப்பண்பு முழுக்களுக்குப் பொருந்துமா என சோதிப்போம். (-2) , 4, 5 என்ற மூன்று முழுக்களைக் கருதுவோம்


எடுத்துக்காட்டாக

(-2) × (4+5) = [(-2) × 4] + [(-2) × 5] 

இடது பக்கம்

= (-2) × (4+5)

= (-2) × 9

= (-18)

= -18

வலது பக்கம்  

= [(-2) × 4] + [(-2) × 5] 

= (-8) + (-10) 

= -8  -10 

= -18

எனவே, (-2) × (4+5) = [(-2) × 4] + [(-2) × 5] என்பது உண்மை என அறிகிறோம்

இதிலிருந்து முழுக்களின் பெருக்கலானது கூட்டலின் மீது பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்கிறது என்று அறியலாம்.

ஆகையால், a, b, c என்ற ஏதேனும் மூன்று முழுக்களுக்கு; a × (b+c) = (a × b) + (a×c)

 


இவற்றை முயல்க

1. மதிப்புகளைக் கண்டறிந்து சமமானவையா எனச் சோதிக்க:

(i) (-6) × [4+(-5)] மற்றும் [(-6) × 4] + [(-6) × (-5)] 

இடது பக்கம் (–6) × [4 + (–5)] = (–6) × (–l) = 6

வலது பக்கம் [(–6) × 4] + [(–6 × (–5)] = –24 + 30 = 6

இடது பக்கம் = வலது பக்கம்

எனவே (–6) × [(4 + (–5)] = [(–6) × 4)] + [(–6 × (–5)]

(ii) (-3) × [2+(-8)] மற்றும் [(-3) × 2]+[(-3) × 8]

இடது பக்கம் (–3) × [2 + (–8)] = –3 × –6 = 18

வலது பக்கம் [(–3) × 2] + [(–3) × 8] = –6 – 24 = –30

வலது பக்கம் ≠ இடது பக்கம்

(–3) × [2+(–8)] ≠ [(–3 × 2] + [(–3) × 8]

2. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை நிரூபிக்க

(i) (–5) × [(–76)+8] = [(–5) ×(–76)] + [(–5)×8]

இடது பக்கம் (–5) × [(–76) + 8] = (–5) × (–68) = 340

வலது பக்கம் [(–5) × (–76)] + [(–5) × 8] = 380 + (–40)

= 380 - 40 = 340

இடது பக்கம் = வலது பக்கம்

(–5) × [(–76) + 8] = [(–5) × (–76)] + [(–5) × 8] என்பது உண்மை

 (ii) 42 × [7+(–3)] = (42 ×7) + [42×(–3)]

இடது பக்கம் 42 × [7 + (–3)] = 42 × 4 = 168

வலது பக்கம் (42 × 7) + [42 × (–3)] = 294 + (–126)

= 294 - 126 = 168

இடது பக்கம் = வலது பக்கம்

42 × [7 + (–3)] = (42 × 7) + [42 × (–3)] என்பது உண்மை

 (iii) (–3) × [(–4)+(–5)] = ((–3) × (–4)) + [(–3)×(–5)]

இடது பக்கம் (–3) × [–4 + (–5)] = –3 × –9 = 27

வலது பக்கம் [(–3) × (–4)] + [(–3) × (–5)] = 12+ 15 = 27

இடது பக்கம் = வலது பக்கம்

(–3) × [–4 + (–5)] = [(–3) × (–4)] + [(–3) × (–5)] என்பது உண்மை

(iv) 103 × 25 = (100+3) × 25 = (100×25) +(3×25)

முதலில் 103 × 25 = 2575

மேலும் (100 + 3) × 25 = 103 × 25 = 2575

இறுதியாக (100 × 25) + (3 × 25) = 2500 + 75 = 2575

ஆகவே 103 × 25 = (100 + 3) × 25 = (100 × 25) + (3 × 25) என்பது உண்மை

 

எடுத்துக்காட்டு 1.20

(-7) × (+8) ஒரு முழு என நிரூபி, பண்பின் பெயரைக் கூறுக

தீர்வு 

(-7) × (+8) = (-56)

-56 என்பது ஒரு முழு

ஆகையால் (-7) × (+8) பெருக்கலின் கீழ் அடைவுப் பண்பை நிறைவு செய்கிறது.


எடுத்துக்காட்டு 1.21

(-42) × (-7), (-7) × (-42) ஆகியவை சமமானவையா? அவ்வாறு இருப்பின் அப்பண்பின் பெயரைக் கூறுக.

தீர்வு

(-42) × (-7) ஐக் கருதுக.

(-42) × (-7) = +294 

மற்றும் (-7) × (-42) = +294 

ஆகவே, (-42) × (-7), (-7) × (-42) ஆகியவை சமமானவையாகும்.

இது பெருக்கலின் கீழ்ப் பரிமாற்றுப் பண்பை நிறைவு செய்கிறது


எடுத்துக்காட்டு 1.22

[(-2)  × 3] × (-4) = (-2) × [3 × (-4)] என நிறுவுக

தீர்வு 

முதல் வகையில் (-2), 3 ஒன்று சேர்ப்போம் மற்றும் இரண்டாவது வகையில் 3, (-4) ஒன்று சேர்ப்போம்

இடது பக்கம் = [(-2) × 3] × (-4) 

   = (-6) × (-4) = 24

வலது பக்கம் = (-2) × [3× (-4)] 

    =  (-2) × (-12) = 24 

எனவே, இடது பக்கம் = வலது பக்கம்.

[(-2) × 3] × (-4) = (-2) × [3× (-4)] என நிறுவப்பட்டது


எடுத்துக்காட்டு 1.23

(-81) × [5×(-2)], [(-81) × 5] × (-2) ஆகியவை சமமானவையா? அவ்வாறு இருப்பின் அப்பண்பின் பெயரைக் கூறுக

தீர்வு

(-81) × [5× (-2)] = (-81) × (-10) = 810

[(-81) × 5] × (-2) = (-405) × (-2) = 810 

ஆகவே, (-81) × [5× (-2)] , [(-81) × 5] × (-2) ஆகியவை சமமானவையாகும்.

இது பெருக்கலின் கீழ்ச் சேர்ப்புப் பண்பு ஆகும்


எடுத்துக்காட்டு 1.24

3× [(-4)+6], [3×(-4)]+(3×6) ஆகியவை சமமானவையா? எனில் பண்பின் பெயரைக் கூறுக

தீர்வு

3×[(–4)+6]=3×2=6

[3 ×(–4)]+[3×6] = –12+18 = 6

ஆகவே, 3 × [(-4)+6] மற்றும் [3 × (-4)]+3 × 6 சமம்

இது பெருக்கலின் கீழ்க் கூட்டலின் பங்கீட்டுப் பண்பை நிறைவு செய்கிறது.


Tags : Number System | Term 1 Chapter 1 | 7th Maths எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 1 : Number System : Distributive Property of Multiplication over Addition Number System | Term 1 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல் : கூட்டலின் மேல் பெருக்கலின் பங்கீட்டுப் பண்பு - எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல்