ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - கிரகணங்கள் | 7th Science : Term 3 Unit 1 : Light

   Posted On :  11.05.2022 12:47 am

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்

கிரகணங்கள்

ஒளியின் முன்னிலையில் ஏதேனும் ஒரு வானியல் பொருள் பகுதியாகவோ முழுவதுமாக மற்றொரு வானவியல் பொருளால் மறைக்கப்படும் போதே கிரகணம் தோன்றுகிறது. இவ்வாறு ஒளியின் நேர்கோட்டுப் பண்பின் காரணமாகச் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.

கிரகணங்கள்

ஒளியின் முன்னிலையில் ஏதேனும் ஒரு வானியல் பொருள் பகுதியாகவோ முழுவதுமாக மற்றொரு வானவியல் பொருளால் மறைக்கப்படும் போதே கிரகணம் தோன்றுகிறது. இவ்வாறு ஒளியின் நேர்கோட்டுப் பண்பின் காரணமாகச் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.

சூரிய கிரகணம்

சூரியனுக்கும் புவிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்போது, சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரிய கிரகணத்தின்போது, சந்திரனின் நிழல் ஆனது, புவியின் மேல் (படத்தில் உள்ளவாறு A இல்) விழுகிறது. எனவே, புவியில் A என்ற பகுதியில் இருப்பவர்களால் சூரியனைக் காண இயலாது. இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதேபோன்று புவியின் B மற்றும் C என்ற பகுதியில் (படத்தில் உள்ளவாறு) இருப்பவர்களால் சூரியனைப் பகுதியாகக் காண இயலும்.


செயல்பாடு :7

பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் பரப்பு ஏற்படுத்தும் பிம்பத்தின் தன்மையை எழுதுக





சந்திர கிரகணம்

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவியானது இருக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளியை புவியானது தடுத்து விடுகிறது. எனவே, புவியின் நிழலானது சந்திரனின் மேல் விழுகிறது. இதனால் புவியிலிருப்பவர்களுக்கும் சந்திரனை முழுவதுமாகவோ பகுதியாகவோ காண இயலாது. இதுவே சந்திர கிரகணம் எனப்படுகிறது.




சமதள ஆடி


சமதள ஆடி என்பது, எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான ஒரு சமதள பரப்பு ஆகும். ஒரு சமதள ஆடியானது அதன் முன் தோன்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்கும்.


•  நேரான பிம்பம் 

•  பொருள் மற்றும் பிம்பம் இரண்டும் ஒரே அளவில் இருக்கும் 

•  மாய பிம்பம்

•  பிம்பம் ஆனது இடவல மாற்றம் அடையும் அதாவது சிறுவனின் இடக்கை பிம்பத்தின் வலப்பக்கம் இருக்கும்

•  ஒளிக்கதிர் கோடுகளை வரைவதின் மூலம் சிறுவனின் பிம்பத்தின் நிலையை அறியலாம்

• கண்ணாடியிலிருந்து சிறுவன் இருக்கும் தூரமும் கண்ணாடியிலிருந்து சிறுவனின் பிம்பம் இருக்கும் தூரமும் சமம் (a=b)

•  சிறுவனின் தலைப் பகுதியிலிருந்து வரும் ஒளிக்கதிர் AO ஆனது கண்ணாடியின் O என்ற புள்ளியில் விழுகிறது. AO ஆனது படுகதிர் என அழைக்கப்படுகிறது.

•  படுகதிர் OA ஆனது கண்ணாடியில் பட்டு OE ஆக மீண்டு வருகிறது. OE கதிரானது எதிரொளிப்புக் கதிர் என்று அழைக்கப்படுகிறது இக் கதிரானது குத்துக் கோட்டுடன் r என்ற எதிரொளிப்புக் கோணத்தை உருவாக்குகிறது.

•  படுகதிர் ON என்ற குத்துக் கோட்டுடன் என்ற படுகோணத்தை எற்படுத்துகின்றது. கோடு ON ஆனது எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக அமைகிறது.

எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக அமையும் கோடு குத்துக்கோடு (ON) எனப்படும்



அறிந்து கொள்

ஒளி இழை :

ஒளி இழை என்பது, முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படிசெயல்படும் ஒரு சாதனம் ஆகும். இச்சாதனம் மூலம் ஒளி சமிக்ஞைகளை, (signal) ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்குக் குறைவான நேரத்தில் மிகுந்த ஆற்றல் இழப்பு இல்லாமல் அனுப்ப இயலும். இதனுள், ஒளி சமிக்கைகளை அனுப்பும் வகையில் கண்ணாடி உள்ளகம் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, வளையும் தன்மை கொண்ட இழைகளும் உள்ளன. ஒளி இழையினை வளைக்கலாம்; மடக்கலாம். ஒளியிழையின் ஒரு முனையில் ஒளியானது விழும்போது, அது கண்ணாடி உள்ளகத்தில் முழு அக எதிரொளிப்பு அடைந்து மறுமுனையில் குறைந்த ஆற்றல் இழப்புடன் வெளிவருகிறது. தரவு அல்லது தகவல் ஒளியியல் துடிப்புகளாக, ஒளி இழையின் மூலம் அனுப்பப்படுகிறது. ஒளி இழைகள் கேபிள் தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை தொடர்புச்சாதனங்கள் போன்ற அதிவேக தொடர்பு அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. தொலைதொடர்புக்கு முன்னர் பயன்படுத்திய தாமிரக்கம்பியிலான வடத்திற்கு மாற்றாக இப்பொழுது ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன. தாமிரக்கம்பியிலான வடத்தைவிட ஒளியிழை வடத்தின் மூலம் அதிக அளவு தகவல்களை அனுப்ப முடியும்




Tags : Light | Term 3 Unit 1 | 7th Science ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 1 : Light : Eclipses Light | Term 3 Unit 1 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல் : கிரகணங்கள் - ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்