Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | நீர்வாழ் தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், உவர் சதுப்பு நிலத் தாவரங்கள் மற்றும் தொற்றுத் தாவரங்களில் காணப்படும் சூழ்நிலையில் தகவமைப்புகள்

பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் - நீர்வாழ் தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், உவர் சதுப்பு நிலத் தாவரங்கள் மற்றும் தொற்றுத் தாவரங்களில் காணப்படும் சூழ்நிலையில் தகவமைப்புகள் | 12th Botany : Practicals

   Posted On :  10.08.2022 02:05 am

12 வது தாவரவியல் : செய்முறைகள்

நீர்வாழ் தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், உவர் சதுப்பு நிலத் தாவரங்கள் மற்றும் தொற்றுத் தாவரங்களில் காணப்படும் சூழ்நிலையில் தகவமைப்புகள்

நோக்கம்: பல்வேறு அமைவிடத்தில் காணப்படுகின்ற தாவரங்களின் தகவமைப்புகளை அறிதல்.

பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்

 

சோதனை எண் 8: நீர்வாழ் தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், உவர் சதுப்பு நிலத் தாவரங்கள் மற்றும் தொற்றுத் தாவரங்களில் காணப்படும் சூழ்நிலையில் தகவமைப்புகள்

நோக்கம்: பல்வேறு அமைவிடத்தில் காணப்படுகின்ற தாவரங்களின் தகவமைப்புகளை அறிதல்.

கொள்கை: ஒரு சூழ்நிலையில் வெற்றிகரமாக வாழ உயிரினங்களின் கட்டமைப்பில் ஏற்படும் மாறுபாடுகள் உயிரினங்களின் தகவமைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு சூழ்நிலையியல் வாழ்விடங்களில் உள்ள பல்வேறு தாவரங்களை உற்று நோக்குதல் மூலம் தாவரங்களின் தொடர்புடைய தகவமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுடன் அவற்றின் இடைச்செயல்கள் ஆகியவற்றை நன்றாக அறிந்து கொள்ளலாம்.

தேவையானவை: புதிய அல்லது பதப்படுத்தப்பட்ட ஐக்கோர்னியா, ஒபன்ஷியா, அவிசீனியா, வாண்டா-வின் மாதிரிகள்


அ. நீர்வாழ் தாவரங்களின் தகவமைப்புகள் - ஐக்கோர்னியா

குளம், ஏரி மற்றும் நன்னீர் நீர்நிலைகளில் மிதக்கும் ஒரு நீர்வாழ் தாவரம் ஐக்கோர்னியா ஆகும்.

கண்டறியும் பண்புகள்

• வேர்த்தொகுப்பு குறைவுற்ற வளர்ச்சியுடன் காணப்படுகிறது.

• வேர்ப்பைகள் காணப்படுகின்றன.

• நீரில் மிதப்பதற்கேற்ப இலைக்காம்புகள் பருத்தும், பஞ்சு போன்றும் காணப்படுகின்றன.

• நன்கு வளர்ச்சியடைந்த புறணிபல காற்றறைகளுடன் காணப்படுகிறது.

• இது நீரில் மிதப்பதற்கும், வாயு பரிமாற்றத்திற்கும் உதவி செய்கிறது.

• வலுவைக் கொடுக்கும் திசுக்கள் பொதுவாகக் காணப்படுவதில்லை.



ஆ. வறண்டநிலத் தாவரங்களின் தகவமைப்புகள் - சப்பாத்திக் கள்ளி (ஒபன்ஷியா)

வறண்ட காட்டுப்பகுதியில் சதைப்பற்றுடைய, வறட்சியை எதிர்க்கொள்ளக்கூடிய வறண்டநிலத் தாவரம் சப்பாத்திக்கள்ளி (ஒபன்ஷியா) ஆகும்.

கண்டறியும் பண்புகள்

• தண்டு தட்டையான, பசுமையான, தடித்த, சதைப்பற்றுள்ள இலைத்தொழில் தண்டு (பில்லோகிளேடு) ஆகும்.

• இலையிடைத் திசு நன்கு வேறுபாடு அடைந்துள்ளது.

• வாஸ்குல மற்றும் வலுவைக் கொடுக்கும் திசுக்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.

• தண்ணீரைத் தக்க வைத்துக்கொள்ள மியூசிலேஜ் துணைபுரிகிறது.



இ. உவர்சதுப்பு நிலத் தாவரங்களின் தகவமைப்புகள் – அவிசீனியாவில் காணப்படும் நிமட்டோஃபோர்கள்

உப்பு ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் (சதுப்புநிலக் காடுகள்) உவர்நிலச் சூழ்நிலையில் வளரும் தாவரம் அவிசீனியா ஆகும்.

கண்டறியும் பண்புகள்

• புவியீர்ப்பு விசைக்கு எதிராகத் தோன்றும் சிறப்பு வகை வேர்களான நிமட்டோஃபோர்கள் காணப்படுகின்றன.

• இலைகள் உப்புசுரப்பிகளின் மூலம் உப்புகளை வெளியேற்றுகின்றன.



ஈ: தொற்றுத்தாவரங்களின் தகவமைப்புகள்

பிற தாவரங்களின் மேல் (ஆதாரத் தாவரங்கள்) தொற்றி வாழ்பவை தொற்றுத் தாவரம் வாண்டா ஆகும். இவை ஆதாரத் தாவரத்தை உறைவிடத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் நீர் அல்லது உணவினைப் பெற்றுக் கொள்வதில்லை

கண்டறியும் பண்புகள்

• வேர்த்தொகுப்புகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இதில் இருவகை வேர்கள் வேர்கள் காணப்படுகின்றன. அவை  அ) பற்று வேர்கள் ஆ) உறிஞ்சும் வேர்கள்.

• தொற்றுத் தாவரங்களில் பற்று வேர்கள் ஆதாரத் தாவரங்களின் மீது வசதியாக நிலைநிறுத்த உதவுகின்றன.

• உறிஞ்சு வேர்கள் பசுமையானவை. இவை கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருப்பவை. மேலும் இவை வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக வெலாமன் என்ற பஞ்சு போன்ற திசுவினைக் கொண்டுள்ளன.


Tags : Fresh or Preserved Specimens - Botany Practicals பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : Ecological adaptations of plants found in hydro-phytic, xerophytic, halophytic and epiphytic conditions Fresh or Preserved Specimens - Botany Practicals in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : நீர்வாழ் தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், உவர் சதுப்பு நிலத் தாவரங்கள் மற்றும் தொற்றுத் தாவரங்களில் காணப்படும் சூழ்நிலையில் தகவமைப்புகள் - பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்