Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பொருட்கள்

தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம் - தாவரவியல் செய்முறைகள் - பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பொருட்கள் | 12th Botany : Practicals

   Posted On :  10.08.2022 02:58 am

12 வது தாவரவியல் : செய்முறைகள்

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பொருட்கள்

தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம் - தாவரவியல் செய்முறைகள்

தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம்


சோதனை எண் 25: பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பொருட்கள்,

1. எள் எண்ணெய் / நல்லெண்ணெய்


தாவரவியல் பெயர்: சொலாமம் இண்டிகம்


பயன்படும் பகுதி: விதைகள்


பயன்கள்


1. நல்லெண்ணெய் பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது.


2. குறைந்த தரமுள்ள எண்ணெய் சோப்பு தயாரிப்பிலும், பெயிண்ட் தொழிற்சாலைகளில் உயவுப் பொருளாகவும், விளக்கெரிக்கவும் பயன்படுகிறது.

 


2. இரப்பர்


தாவரவியல் பெயர்: ஹீவியா பிரசிலியன்ஸிஸ்


பயன்படும் பகுதி: மரப்பால்


பயன்கள்


1. காலணி, கம்பி, கேபிள் சுற்றும் கடத்தாப் பொருள்,  மழைக்கோட், விளையாட்டுப் பொருட்கள், அழிப்பான்கள், பசைகள், இரப்பர் பட்டைகள், வீடு மற்றும் மருத்துவமனைப் பொருட்கள், அதிர்வு தாங்கிகள் தயாரிப்பில் பயன்படுகிறது.


2. அடர் மரப்பால் கையுறைகள், பலூன்கள் தயாரிக்க உதவுகிறது.


3. நுரையூட்டிய மரப்பால் மெத்தைகள், தலையணைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு பட்டைகள் தயாரிப்பில் உதவுகின்றன.


 

3. அவல்


தாவரவியல் பெயர்: ஒரைசா சட்டைவா

பயன்படும் பகுதி: விதைகள்


பயன்கள்


1. அவல் காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.


 

4. பன்னீர் (ரோஸ் வாட்டர்)


தாவரவியல் பெயர்: ரோசா X டாமசீனா


பயன்படும் பகுதி: அல்லி இதழ்கள்


பயன்கள்


1. பன்னீர் (ரோஸ் வாட்டர்) இனிப்பு வகைகள், நீர்ப்பாகுகள் மற்றும் மென்பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.


2. இந்தியாவில் பன்னீர் கண் திவரங்கள், கண் கழுவிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.


 

5. மருதாணி


தாவரவியல் பெயர்: லாசோனியா


பயன்படும் பகுதி இலைகள்


பயன்கள்


1. இளம் தண்டுத் தொகுப்பு மற்றும் இலைகளிலிருந்து இனெர்மிஸ் பெறப்படும் ஆரஞ்சு நிறச்சாயம் "ஹென்னா " தோல், முடி மற்றும் நகங்களுக்கு சாயமிட உதவுகிறது.


2. தோல் பொருட்களுக்குச் சாயமிடவும், குதிரைவால்களுக்குச் சாயமிடவும், தலைமுடி சாயங்களிலும் பயன்படுகிறது.

 


6. கற்றாழைக் களிம்பு


தாவரவியல் பெயர்: அலோவீரா


பயன்படும் பகுதி இலைகள்


பயன்கள்


1. கற்றாழைக் களிம்பு தோலுக்கு டானிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.


 2. குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைப் பெற்றுள்ளதால் களிம்புகள், பூச்சுகள், ஷாம்பூ, முகச்சவர களிம்புகள் மற்றும் அதையொத்த பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

3. மூப்படைந்த தோலைப் பொலிவாக்குவதற்குப் பயன்படுகிறது

Tags : Economic Importance of Plants | Botany Practicals தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம் - தாவரவியல் செய்முறைகள்.
12th Botany : Practicals : Economically important plant products Economic Importance of Plants | Botany Practicals in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : செய்முறைகள் : பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பொருட்கள் - தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம் - தாவரவியல் செய்முறைகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : செய்முறைகள்