Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பொருளாதாரம்: அதன் வகைகள்
   Posted On :  26.07.2022 07:34 pm

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம்

பொருளாதாரம்: அதன் வகைகள்

பொருளியல் என்பது விரைவாக வளர்கின்ற ஒரு பாடம். இது எல்லைகள் தாண்டிவிரிந்திருக்கிறது.

பொருளியலின் வகைகள்

பொருளியல் என்பது விரைவாக வளர்கின்ற ஒரு பாடம். இது எல்லைகள் தாண்டிவிரிந்திருக்கிறது. பற்றாக்குறையான வளங்களை, திறமையான முறையில் ஒதுக்கீடு செய்து நீட்டித்த நலத்தைப் பெறுவதற்கு உதவுவது, இந்த பாடத்தின் அடிப்படை உந்துதலாகும். பின்வருவன சில முக்கிய பாடப் பிரிவுகளாகும். இதில் வளங்கள் சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


1. நுண்ணியல் பொருளியல்

தனிப்பட்ட மனிதர்கள், இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் அல்லது தொழில்களின் பொருளாதார நடவடிக்கைகளை நுண்ணியல் பொருளியலில் படிக்கிறோம். பல்வேறுபட்ட சந்தை சூழலில் தொழில் நிறுவனங்கள், வாங்குபவர்கள் விற்பவர்கள் இணைந்து எவ்வாறு விலையைத் தீர்மானிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை நுண்ணியல் பொருளியலில் படிக்கப்படுகிறது. 

(i) மதிப்பீட்டுக் கோட்பாடுகள் (பண்டங்கள் மற்றும் காரணிகளின் விலைத் தீர்மானம்)

(ii) பொருளாதார நலக் கோட்பாடு

நுண்பொருளியல் மற்றும் பேரியல் பொருளியல் என்ற சொற்களை முதன் முதலில் 1933 ஆம் ஆண்டு நார்வே நாட்டு பொருளியலறிஞரான பேராசிரியர் ராக்னர்ஃபிரிஷ் பயன்படுத்தினார். பின்பு ஜே.எம். கீன்சு 1936 ஆம் ஆண்டு வெளியிட்ட வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுக் கோட்பாடு என்ற நூலின் மூலம் இந்த இரண்டு சொற்களுக்கான வேறுபாடுகளை தெளிவாக வெளிப்படுத்தி இந்த சொற்களை பிரபலமடையச் செய்தார்.




2. பேரியல் பொருளாதாரம்

பேரியல் பொருளியல் நுண்ணியல் பொருளியலில் இருந்து சற்று மாறுபட்டது. இது ஒட்டு மொத்த பொருளாதார நடவடிக்கைகளை விளக்குகிறது. நாட்டு உற்பத்தி, பண வீக்கம், வேலையின்மை மற்றும் வரி போன்ற பல ஒட்டு மொத்தங்களைப் பற்றி படிக்கிறது. கீன்சின், "வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுக்கோட்பாடு" என்ற நூல் தற்கால பேரியல் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது.


3. பன்னாட்டு பொருளாதாரம்

நவீன உலகில் எந்த ஒரு நாடும் தனிப்பட்ட நிலையில் வளர்ச்சி அடைய இயலாது என்று கருதப்படுகிறது. வெளிநாட்டு மூலதனம், முதலீடு (வெளிநாட்டு நேரடி முதலீடு) மற்றும் பன்னாட்டு வாணிபத்தின் மூலம் ஒவ்வொரு  நாடும் மற்ற நாடுகளோடு தொடர்பு  கொண்டுள்ளன. இவற்றை பன்னாட்டுப்  பொருளியல் விளக்குகிறது.


4. பொது நிதிப் பொருளாதாரம்

பொதுநிதி என்பது வருமானம் அல்லது வருவாயை அதிகரிக்க பொது அதிகார அமைப்புகள் ஒன்றோடொன்று இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையை விளக்குகிறது. பொதுச் செலவு, பொது வருவாய், பொதுக் கடன் மற்றும் நிதி நிர்வாகம் போன்றவை பொதுநிதியின் எல்லைகளாகும்.

5. வளர்ச்சி பொருளாதாரம்

தலா வருமானம், மனித மேம்பாட்டு குறியீடு, மகிழ்ச்சி குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், பின் தங்கிய நாடுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சிப்  பொருளாதாரமானது வளர்ந்த நாடுகளின் இயல்புகள், வளர்ச்சிக்கானத் தடைகள்,  வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரக் காரணிகள் மற்றும் பொருளாதாரம் சாரா  காரணிகள், பல்வேறு வளர்ச்சி மாதிரிகள் மற்றும் வளர்ச்சிக்கான உத்திகள் போன்றவற்றை விளக்குகிறது.


6. சுகாதாரப் பொருளாதாரம்

சுகாதாரப் பொருளாதாரம் என்பது செயல்முறை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும். இது சுகாதாரக் குறியீடுகள், நோய் பொதுநிதி என்பது வருமானம் அல்லது வருவாயை அதிகரிக்க பொது அதிகார அமைப்புகள் ஒன்றோடொன்று இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையை விளக்குகிறது. பொதுச் செலவு, பொது வருவாய், பொதுக் கடன் மற்றும் நிதி நிர்வாகம் போன்றவை பொதுநிதியின் எல்லைகளாகும்.

தடுப்பு மற்றும் நோய் நீக்கும் நடவடிக்கைகள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி, கிராமப்புற சுகாதாரப் பணி, மருந்து விலை கட்டுப்பாடு, பிரசவத்திற்கு பின்னரான தொடர்பான பாதுகாப்பு, மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதாரம், சுகாதாரத்திற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.


7. சுற்றுச் சூழல் பொருளாதாரம்

இயற்கை வளங்களின் இருப்பை சுரண்டுதல் மற்றும் சுற்றுக்சூழல் மாசு ஆகியன விரைவான பொருளாதார முன்னேற்றத்தின் விளைவான தீய விளைவுகளாகும். . எனவே பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே உள்ள உறவை ஆராயும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தை படிப்பதும் அவசியமாகும். சுற்றுச்சூழல் பொருளியலில் சூழலியல் (Ecology), பொருளியல், சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்புடைய பிரச்சினைகளைப் பற்றி படிக்கிறது.



11th Economics : Chapter 1 : Introduction To Micro-Economics : Economics: Its Types in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம் : பொருளாதாரம்: அதன் வகைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 1 : நுண் பொருளாதாரம் அறிமுகம்