Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில் வினை

ஒளிச்சேர்க்கை | தாவரவியல் - எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில் வினை | 11th Botany : Chapter 13 : Photosynthesis

   Posted On :  06.07.2022 11:46 am

11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை

எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில் வினை

எமர்சன் குளோரேல்லா ஆல்காவின் மீது ஒரு நேரத்தில் ஒரு ஒற்றை அலை நீள ஒளியை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டார்.

எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில் வினை

 

1. சிவப்பு வீழ்ச்சி அல்லது எமர்சன் முதல் விளைவு


எமர்சன் குளோரேல்லா ஆல்காவின் மீது ஒரு நேரத்தில் ஒரு ஒற்றை அலை நீள ஒளியை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டார். தனித்தனியே ஒற்றை அலைநீள ஒளியை செலுத்தி ஒவ்வொரு முறையும் உருவான குவாண்டம விளைச்சலை அளந்தார். குவாண்டம் விளைச்சலை ஒவ்வொரு அலை நீள ஒளியிலும் உருவான ஆக்ஸிஜனைக் கொண்டு வரைகோட்டை உருவாக்கினார். அவருடைய நோக்கம் எந்த அலைநீள ஒளியில் ஒளிவேதி விளைவினால் உருவாகும் ஆக்ஸிஜன் அளவு அதிகம் என கண்டறிதல். அவருடைய ஆய்வின்படி 600 முதல் 680 வரையிலான ஒளி அலைநீளத்தில் ஒளிவேதி விளைவு சமகால அளவுகளில் அதிகரித்தது ஆனால் 680 nm மேல் (சிவப்பு அலைநீள பகுதி) திடீரென வீழ்ச்சியைக் கண்டது. இதுபோன்று சிவப்பு பகுதிக்கு அப்பால் ஒளிச்சேர்க்கை வீதமானது திடீரென குறைவதற்கு சிவப்பு வீழ்ச்சி (Red drop) அல்லது எமர்சன் முதல் விளைவு என்று பெயர்.

 

2. எமர்சனுடைய மேம்படுத்தப்பட்ட விளைவு


எமர்சன் தன்னுடைய முதல் சோதனையை மாற்றியமைத்து அலைநீளம் குறைந்த (சிவப்பு ஒளி) ஒளியை, அலை நீளம் அதிகமான ஒளியுடன் (தொலைச்சிவப்பு ஒளி) சேர்த்து சோதனை செய்தார். இச்சோதனை முடிவில் அவர் கண்டறிந்தது அதிக அலைநீளம் கொண்ட (தொலைச்சிவப்பு) ஒற்றை ஒளியை, குறைந்த அலைநீளம் கொண்ட (சிவப்பு) ஒளியுடன் சேர்த்து செலுத்தி ஒளிச்சேர்க்கை வீதம் கணக்கிடும்போது சிவப்பு ஒளியில் ஏற்படும் வீழ்ச்சிக்கு மாறாக ஒளிச்சேர்க்கை வீதம் அதிகரித்தது. இதற்கு எமர்சன் மேம்படுத்தப்பட்ட விளைவு என்று பெயர். (படம் 13.8)


தொலைச்சிவப்பு ஒளியின் ஒளிச்சேர்க்கை வீதம் (710nm) = 10

சிவப்பு ஒளியின் ஒளிச்சேர்க்கை வீதம் (650nm) = 43.5

சிவப்பு ஒளி + தொலைச்சிவப்பு ஒளியில்

ஒளிச்சேர்க்கை வீதம் (650 + 710 nm) = 72.5

 (மேம்படுத்தப்பட்ட விளைவு)

 

3. ஹில் வினை (Hill reaction)


R. ஹில் (1937) தனிமைப்படுத்தப்பட்ட பசுங்கணிகங்களில் பெரிக்சயனைடு போன்ற எலக்ட்ரான் ஏற்பி முன்னிலையில் ஒளியை செலுத்தும்போது அது பெர்ரோ சயனைடாக ஒடுக்கம் அடைகிறது மேலும் ஆக்ஸிஜன் விடுவிக்கப்பட்டது. தற்போது ஹில் வினையானது ஒளி வினைக்கு நிகரானது எனக் கருதப்படுகிறது. 

ஹில்வினையின் முடிவுகள்:

1. ஒளிச்சேர்க்கையின் போது ஆக்ஸிஜனானது நீரிலிருந்து உருவாகிறது.

2. கார்பன் டை ஆக்ஸைடை ஒடுக்க தேவையான ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரான்கள் நீரிலிருந்து பெறப்படுகிறது.

3. இதைக் கொண்டு உருவாக்கப்படும் ஒடுக்கும் காரணி (A) பின்னர் கார்பன் டை ஆக்ஸைடை ஒடுக்குகிறது.

2H2O + 2A 2 AH2 + O2

A என்பது ஹைட்ரஜன் ஏற்பியாகும். பொதுவாக ஆய்வகங்களில் பயன்படும் ஹைட்ரஜன் ஏற்பிகள் பெர்ரிக்சயனைடு, பென்சோகுயினோன் மற்றும் டைகுளோரோபீனால் இண்டோல் பீனால் (DCPIP) இவைகளில் ஒன்றாகும். 


Tags : Photosynthesis | Botany ஒளிச்சேர்க்கை | தாவரவியல்.
11th Botany : Chapter 13 : Photosynthesis : Emerson's Experiments and Hill's Reaction Photosynthesis | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை : எமர்சன் ஆய்வுகள் மற்றும் ஹில் வினை - ஒளிச்சேர்க்கை | தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 13 : ஒளிச்சேர்க்கை