Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி : ஆயத்தொலை வடிவியல்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி : ஆயத்தொலை வடிவியல் | 10th Mathematics : UNIT 5 : Coordinate Geometry

   Posted On :  18.08.2022 06:24 pm

10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்

பயிற்சி : ஆயத்தொலை வடிவியல்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம் : ஆயத்தொலை வடிவியல் : கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

அலகுப் பயிற்சி

1. P(-1,-1), Q(-1,4), R(5,4) மற்றும் S(5,-1) ஆகிய புள்ளிகளால் ஆன செவ்வகம் PQRS-யில் A, B, C மற்றும் D என்பன முறையே பக்கங்கள் PQ, QR, RS மற்றும் SP-யின் நடுப்புள்ளிகள் ஆகும். ABCD என்ற நாற்கரமானது ஒரு சதுரம், செவ்வகம் அல்லது சாய்சதுரமா? உங்கள் விடையைக் காரணத்தோடு விளக்குக.



2. ஒரு முக்கோணத்தின் பரப்பு 5 ச. அலகுகள். (2,1) மற்றும் (3,-2) என்பன முக்கோணத்தின் இரண்டு முனைப் புள்ளிகள் ஆகும். மூன்றாம் முனைப் புள்ளி (x, y) என்பதில் y = x + 3 என இருந்தால் அப்புள்ளியைக் காண்க.



3. 3x + y − 2 = 0, 5x + 2y − 3 = 0 மற்றும் 2x − y − 3 = 0 ஆகிய கோடுகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க. 



4. A(-5,7), B(-4, k), C(-1,-6) மற்றும் D(4, 5) ஆகியவற்றை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு 72 ச. அலகுகள் எனில், k-யின் மதிப்பைக் காண்க. 



5. தொலைவு காணும் சூத்திரத்தைப் பயன்படுத்தாமல், (-2, -1), (4, 0), (3, 3) மற்றும் (-3,2) என்பன இணைகரத்தின் முனைப் புள்ளிகள் எனக் காட்டுக.

 

6. இரு வெட்டுத்துண்டுகளின் கூடுதல் மற்றும் அவற்றின் பெருக்கற்பலன் முறையே 1, -6 எனில், நேர்க்கோடுகளின் சமன்பாட்டைக் காண்க. 



7. ஒரு பால்கடை உரிமையாளர் 1 லிட்டர் ₹16 வீதம் ஒரு வாரத்திற்கு 1220 லிட்டரும், 1 லிட்டர் ₹14 வீதம் ஒரு வாரத்திற்கு 980 லிட்டரும் விற்பனை செய்கிறார். விற்பனை விலையானது தேவையோடு நேரிய தொடர்பு உடையது என ஊகித்துக் கொண்டால், 1 லிட்டர், ₹17 வீதம் ஒரு வாரத்திற்கு எத்தனை லிட்டர் விற்பனை செய்வார்? 



8. x + 3y = 7 என்ற நேர்க்கோட்டினைச் சமதள ஆடியாகக் கொண்டு (3,8) என்ற புள்ளியின் பிம்பப் புள்ளியைக் காண்க. 



9. 4x + 7y − 3 = 0 மற்றும் 2x − 3y + 1 = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி வழியாகவும், ஆய அச்சுகளின் வெட்டுத் துண்டுகள் சமமானதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க. 



10. 2x − 3y + 4 = 0 மற்றும் 3x + 4y − 5 = 0 என்ற நேர்க்கோடுகளால் குறிக்கப்படும் இரண்டு பாதைகள் சந்திக்கும் புள்ளியில் நிற்கும் ஒருவர் 6x − 7y + 8 = 0 என்ற நேர்க்கோட்டால் குறிக்கப்படும் பாதையைக் குறுகிய நேரத்தில் சென்றடைய விரும்புகிறார் எனில், அவர் செல்ல வேண்டிய பாதையின் சமன்பாட்டினைக் காண்க.



விடைகள்:

1. சாய்சதுரம்

2. (7/2, 13/2)

3. 0 ச.அ

4. -5

6. 2x − 3y − 6 = 0, 3x − 2y + 6 = 0

7. 1340 லிட்டர்

8. (- 1, -4)

9. 13x + 13y − 6 = 0

10. 119x + 102y −125 = 0


Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 5 : Coordinate Geometry : Exercise: Coordinate Geometry Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் : பயிற்சி : ஆயத்தொலை வடிவியல் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 5 : ஆயத்தொலை வடிவியல்