Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி : 4.2 (எதிர் விகிதம்)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | முதல் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி : 4.2 (எதிர் விகிதம்) | 7th Maths : Term 1 Unit 4 : Direct and Inverse Proportion

   Posted On :  04.07.2022 04:28 am

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : நேர் மற்றும் எதிர் விகிதங்கள்

பயிற்சி : 4.2 (எதிர் விகிதம்)

கோடிட்ட இடங்களை நிரப்புக, கொள்குறி வகை வினாக்கள் , புத்தக பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி : 4.2 


1. கோடிட்ட இடங்களை நிரப்புக

i) ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை _________ நிமிடங்களில் நிரப்பும். 

விடை : 32


ii) 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை ________ 

விடை : 80


2. ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை நிறைப்பதற்கு 6 குழாய்கள் 1 மணி 30 நிமிடம் எடுத்துக்கொள்கின்றன. ஒரு குழாயை அடைத்துவிட்டால் அதே தொட்டியை நிறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு? 

தீர்வு : 

குழாய்கள்      நேரம் (நிமி)

  6              1  1/2  = 90

  5                 x

குழாய்களின் எண்ணிக்கை குறைய நிறைக்க எடுக்கும் காலம் அதிகரிக்கிறது. 

5 × x = 6 × 90

x = (6 × 90) / 5

x = 108 நிமி 

x = 1 மணி 48 நிமிடம்


3. ஒரு விவசாயியிடம் 144 வாத்துகளுக்குத் 28 நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளது. அவர் 32 வாத்துகளை விற்றுவிட்டார் எனில், அவரிடம் உள்ள உணவு மீதமுள்ள எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக இருக்கும்? 

தீர்வு : 

வாத்துகளின் எண்ணிக்கை      நாட்கள்

      144                                                   28 

      112                                                     x 

வாத்துக்களின் எண்ணிக்கை குறைய விற்பனையாகும் நாட்கள் அதிகரிக்கும்

x × 112 = 144 × 28 

x = (144 × 28) / 112 

x = 36 நாட்கள்


4. ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக் கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில் 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்? 

தீர்வு :

இயந்திரங்கள்  |   நாட்கள்

   10                           60

   30                            x 

இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாட்கள் குறையும் 

30 × x = 10 × 90

x = (10 × 60) / 30

x = 20 நாட்கள் 


5. நாற்பது மாணவர்கள் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக மாறினால் அவ்வுணவுப் பொருள் அவர்களுக்கு எத்தனை, நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்? 

தீர்வு : 

மாணவர்கள்  |  உணவு

  40                        30

  80                         x

மாணவர்கள் அதிகரிக்க உணவின் அளவு குறையும் 

80 × x = 30 × 40

x = (30 × 40) / 80

x = 15 நாட்கள் 


6. 500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (Parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (Parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (Parcel) எடை எவ்வளவு இருக்கும்?

தீர்வு : 

சிப்பங்கள்  |  எடை (கிராமில்) 

    8                     500 

   40                     x

சிப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்க எடை அளவு குறையும்

40 × x = 8 × 500 ,

x =  (8 × 500) / 40

x = 100 கிராம் 


7. ஒரு தோட்டத்தைக் களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?

தீர்வு : 

நிமிடங்கள்  |  தோட்டக்காரர்கள்  

   120                        6

    30                         x

நேரம் குறைய தோட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் 

30 × x = 120 × 6

x = (120 × 6) / 30

x = 18 தோட்டக்காரர்கள் 


8. நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ / மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு? 

தீர்வு : 

வேகம் (கி.மீ / மணி)  | நேரம் (நிமி) 

         12                                 20

          x                                 15

நேரம் குறைய வேகம் அதிகரிக்கும்

x × 15 = 12 × 20

x = (12 × 20) / 15

x = 16 கி.மீ / மணி


9. ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 36 இயந்திரங்களைக் கொண்டு 54 நாள்களில் மகிழுந்து பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை 81 நாள்களில் உற்பத்தி செய்ய இயந்திரங்கள் தேவை?

தீர்வு :  

இயந்திரங்களின் எண்ணிக்கை  |  நாட்கள் 

      36                                                       54

       x                                                       81

நாட்கள் அதிகரிக்க இயந்திரங்களின் எண்ணிக்கை குறையும் 

81 × x = 36 × 54

x = (36 × 54) / 81

x = 24 இயந்திரங்கள்



கொள்குறி வகை வினாக்கள் 


10. 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய ________ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. 

i) 15 

ii) 18 

iii) 6 

iv) 8

விடை : iii) 6 


11. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை ________ நாள்களில் செய்து முடிப்பர் 

i) 7 

ii) 8 

iii) 9 

iv) 10

விடை : ii) 8 


விடைகள் 

பயிற்சி  4.2

1. (i) 32

(ii) 80

2. 1 மணி  48 நிமிடங்கள் 

3. 36 நாட்கள் 

4. 20 நாட்கள்

5. 15 நாட்கள்

6. 100 கி

7. 18

8. 4 கி.மீ / மணி 

9. 24

கொள்குறி வகை வினாக்கள் 

10. (iii) 6

11. (ii) 8 


Tags : Questions with Answers, Solution | Term 1 Chapter 4 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | முதல் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 4 : Direct and Inverse Proportion : Exercise 4.2 (Inverse Proportion) Questions with Answers, Solution | Term 1 Chapter 4 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : நேர் மற்றும் எதிர் விகிதங்கள் : பயிற்சி : 4.2 (எதிர் விகிதம்) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | முதல் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 4 : நேர் மற்றும் எதிர் விகிதங்கள்