Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 4.3 : பிதாகரஸ் தேற்றம்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 4.3 : பிதாகரஸ் தேற்றம் | 10th Mathematics : UNIT 4 : Geometry

   Posted On :  15.08.2022 06:16 pm

10வது கணக்கு : அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.3 : பிதாகரஸ் தேற்றம்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம்: இயற்கணிதம் : பிதாகரஸ் தேற்றம் : பதில், தீர்வுடன் பயிற்சி வினாக்கள்

பயிற்சி 4.3 


1. ஒரு மனிதன் 18 மீ கிழக்கே சென்று பின்னர் 24 மீ வடக்கே செல்கிறான். தொடக்க நிலையிலிருந்து அவர் இருக்கும் தொலைவைக் காண்க.?



2. சாராவின் வீட்டிலிருந்து ஜேம்ஸின் வீட்டிற்குச் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒரு வழி 'C' என்ற தெரு வழியாகச் செல்வதாகும். மற்றொரு வழி B மற்றும் A ஆகிய தெருக்கள் வழியாகச் செல்வதாகும். நேரடி பாதை C வழி செல்லும்போது தொலைவு எவ்வளவு குறையும்? (படத்தைப் பயன்படுத்துக).




3. A என்ற புள்ளியில் இருந்து B என்ற புள்ளிக்குச் செல்வதற்கு ஒரு குளம் வழியாக, நடந்து செல்ல வேண்டும். குளம் வழியே செல்வதைத் தவிர்க்க 34 மீ தெற்கேயும், 41 மீ கிழக்கு நோக்கியும் நடக்க வேண்டும். குளம் வழியாகச் செல்வதற்குப் பாதை அமைத்து அப்பாதை வழியே சென்றால் எவ்வளவு மீட்டர் தொலைவு சேமிக்கப்படும்?



4. WXYZ என்ற செவ்வகத்தில், XY+YZ=17 செ.மீ மற்றும் XZ+YW=26 செ.மீ எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தைக் கணக்கிடுக. 




5. ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணம் சிறிய பக்கத்தின் 2 மடங்கை விட 6 மீ அதிகம். மேலும் மூன்றாவது பக்கமானது கர்ணத்தை விட 2 மீ குறைவு எனில், முக்கோணத்தின் பக்கங்களைக் காண்க?



6. 5 மீ நீளமுள்ள ஓர் ஏணியானது ஒரு செங்குத்து சுவர் மீது சாய்த்து வைக்கப்படுகிறது. ஏணியின் மேல் முனை சுவரை 4 மீ உயரத்தில் தொடுகிறது. ஏணியின் கீழ்முனை சுவரை நோக்கி 1.6 மீ நகர்த்தப்படும்போது, ஏணியின் மேல்முனை சுவரில் எவ்வளவு தொலைவு மேல்நோக்கி நகரும் எனக் கண்டுபிடி. 



7. ΔPQR -யில் அடிப்பக்கம் QR-க்கு செங்குத்தாக உள்ள PS ஆனது QR-ஐ S -யில் சந்திக்கிறது. மேலும், QS=3SR எனில், 2PQ2  = 2PR2 + QR2  என நிறுவுக. 



8. படத்தில், செங்கோண முக்கோணம் ABC-யில் கோணம் B ஆனது

செங்கோணம் மற்றும் D, E என்ற புள்ளிகள் பக்கம் BC-ஐ மூன்று சமபகுதிகளாக பிரிக்கிறது எனில், 8AE= 3AC2 + 5AD2 என நிறுவுக.




விடைகள்:

1. 30 மீ

2. 1 மைல்

3. 21.74 மீ 

4. 12 செ.மீ, 5 செ.மீ

5. 10 மீ, 24 மீ, 26 மீ

6. 0.8 மீ


Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 4 : Geometry : Exercise 4.3: Pythagoras Theorem Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.3 : பிதாகரஸ் தேற்றம் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 4 : வடிவியல்