Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி : 5.5 (பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி : 5.5 (பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்) | 7th Maths : Term 1 Unit 5 : Geometry

   Posted On :  05.07.2022 02:38 am

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல்

பயிற்சி : 5.5 (பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்)

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல் : பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்

பயிற்சி : 5.5 


1. அளவுகோல் மற்றும் கவராயம் மட்டும் பயன்படுத்திப் பின்வரும் கோணங்களை அமைக்க.

i) 60°

ii) 120° 

iii) 30°

iv) 90° 

v) 45°

vi) 150°

vii) 135° 

தீர்வு : 

i) 60° அளவுடைய கோணத்தை வரைதல்.


படி 1 : ஒரு நேர்கோடு வரைக. அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்க. 

படி 2 : A ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரத்தில் நேர்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க. 

படி 3 : அதே அளவு ஆரத்துடன், B மையமாக கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க.

படி 4 : ACஐ இணைக்க. BAC என்பது 60° அளவுடைய கோணமாகும்.


ii) 120° அளவுடைய கோணத்தை வரைதல்.

120° கோண அளவில், இரண்டு 60° கோண அளவுகள் உள்ளதை நாம் அறிவோம். எனவே 120° கோணத்தை அமைப்பதற்கு 60° கோணத்தை இரு முறை தொடர்ந்து அமைத்தல் போதுமானதாகும். 


படி 1 : ஒரு நேர்கோடு வரைக. அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்க. 

படி 2 : A ஐ மையமாகக் கொண்டு வசதியான ஆரத்தில் நேர்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க.

படி 3 : ஆரத்தின் அளவை மாற்றாமல் B யை மையமாக கொண்டு படி - 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க. 

படி 4 : மீண்டும் அதே அளவு ஆரத்துடன் C ஐ மையமாக கொண்டு படி - 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு (படத்தில் உள்ளவாறு) மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை D எனக் குறிக்க. 

படி 5 : AD ஐ இணை . BAD என்பதே தேவையான 120° அளவுடைய கோணமாகும்.


iii) 30° அளவுடைய கோணத்தை வரைதல்.

60° இல் பாதி அளவு 30° என்பதால் 60° கோணத்தைக் கோண இருசமவெட்டியைப் பயன்படுத்திப் பிரிப்பதன் மூலம் 30° கோணத்தை வரை இயலும்.

 

படி 1 : 60° கோணத்தை அமைக்கவும் (60°அளவுடைய கோணத்தை வரைதல் முறையைப் பயன்படுத்துக). 

படி 2 : B ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை BAC இன் உட்பகுதியில் வரைக.

படி 3 : அதே அளவு ஆரத்துடன், Cஐ மையமாகக் கொண்டு படி 2 இல் வரைந்த வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக வெட்டும் புள்ளியை D எனக் குறிக்க. 

படி 4 : AD ஐ இணைக்க. BAD ஆனது தேவையான 30° அளவுடைய கோணமாகும். [DAC இன் அளவைக் குறித்துச் சிந்திக்க]


iv) 90° அளவுடைய கோணத்தை வரைதல்.



படி 1 : 120° அளவுடைய கோணத்தை அமைக்கவும் (120° அளவுடைய கோணத்தை வரைதல் முறையைப் பயன்படுத்துக) 

படி 2 : Cஐ மையமாகக்கொண்டு ஏதேனும் ஒரு அளவுடைய ஆரத்தில் CAD இன் உட்பகுதியில் சிறு வட்டவில் ஒன்றை வரைக. 

படி 3 : அதே அளவு ஆரத்துடன், D ஐ மையமாகக் கொண்டு படி 2 இல் வரைந்த வட்ட வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக வெட்டும் புள்ளியை E எனக் குறிக்க. 

படி 4 : AE ஐ இணைக்க BAD = 90° அளவுடைய கோணமாகும்.


v) 45° அளவுடைய கோணத்தை வரைதல் : (90° அளவுடைய கோணத்தை வரைதலில் உள்ள படி, 1, 2, 3, 4 ஐ பயன்படுத்தவும் )


படி 5 : குறிப்பிட்ட ஆரஅளவுடைய இரண்டு விற்களை வெட்டுமாறு E மற்றும் B ஐ பயன்படுத்தி வரைந்து G எனக் குறிக்க. 

படி 6 : AG ஐ இணைக்க. BAG = 45° அளவுடைய கோணமாகும்.


vi) 150° அளவுடைய கோணத்தை வரைதல் : (120° அளவுடைய கோணத்தை வரைதலில் உள்ள படி 1,2,3,4 ஐ பயன்படுத்தவும்)

படி 5 : குறிப்பிட்ட ஆர அளவுடைய இரண்டு விற்களை வெட்டுமாறு E மற்றும் D ஐ பயன்படுத்தி வரைந்து F எனக்குறிக்க. 

படி 6 : AF ஐ இணைக்க BAF = 150° அளவுடைய கோணமாகும்.



vii) 135° அளவுடைய கோணத்தை வரைதல் : ( 90° அளவுடைய கோணத்தை வரைதலில்  உள்ள படி 1,2,3,4 ஐ பயன்படுத்தவும்)


படி 5 : குறிப்பிட்ட ஆர அளவுடைய இரண்டு விற்களை வெட்டுமாறு F மற்றும் H ஐ பயன்படுத்தி வரைந்து G எனக்குறிக்க. 

படி 6 : AG ஐ இணைக்க BAG = 135° : AG என்பது EAH ன் கோண இருசமவெட்டி ஆகும்.



Tags : Questions with Answers, Solution | Geometry | Term 1 Chapter 5 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 5 : Geometry : Exercise 5.5 (Construction of special angles without using protractor) Questions with Answers, Solution | Geometry | Term 1 Chapter 5 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல் : பயிற்சி : 5.5 (பாகைமானியைப் பயன்படுத்தாமல் சிறப்புக் கோணங்களை வரைதல்) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் : வடிவியல் | முதல் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 5 : வடிவியல்