Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 6.3 : இறக்கக் கோணக் கணக்குகள்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் - பயிற்சி 6.3 : இறக்கக் கோணக் கணக்குகள் | 10th Mathematics : UNIT 6 : Trigonometry

   Posted On :  18.08.2022 11:05 pm

10வது கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்

பயிற்சி 6.3 : இறக்கக் கோணக் கணக்குகள்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம் : முக்கோணவியல் : இறக்கக் கோணக் கணக்குகள் : பயிற்சி வினாக்கள் விடை தீர்வு

பயிற்சி 6.3 

1. 50√3 மீ உயரமுள்ள ஒரு பாறையின் உச்சியிலிருந்து 30° இறக்கக்கோணத்தில் தரையிலுள்ள மகிழுந்து ஒன்று பார்க்கப்படுகிறது எனில், மகிழுந்திற்கும் பாறைக்கும் இடையேயுள்ள தொலைவைக் காண்க. 



2. இரண்டு கட்டடங்களுக்கு இடைப்பட்ட கிடைமட்டத் தொலைவு 70 மீ ஆகும். இரண்டாவது கட்டடத்தின் உச்சியிலிருந்து முதல் கட்டடத்தின் உச்சிக்கு உள்ள இறக்கக்கோணம் 45° ஆகும். இரண்டாவது கட்டடத்தின் உயரம் 120 மீ எனில் முதல் கட்டடத்தின் உயரத்தைக் காண்க. 



3. 60 மீ உயரமுள்ள கோபுரத்தின் உச்சியிலிருந்து செங்குத்தாக உள்ள ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் இறக்கக்கோணங்கள் முறையே 38° மற்றும் 60° எனில், விளக்குக் கம்பத்தின் உயரத்தைக் காண்க. (tan 38° = 0.7813, √3 = 1.732)



4. 1800 மீ உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்திலிருந்து ஒரே திசையில் விமானத்தை நோக்கிச் செல்லும் இரு படகுகள் பார்க்கப்படுகிறது. விமானத்திலிருந்து இரு படகுகளை முறையே 60° மற்றும் 30° இறக்கக் கோணங்களில் உற்று நோக்கினால், இரண்டு படகுகளுக்கும் இடைப்பட்டத் தொலைவைக் காண்க. (√3 = 1.732) 



5. ஒரு கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து எதிரெதிர் பக்கங்களில் உள்ள இரண்டு கப்பல்கள் 30° மற்றும் 60° இறக்கக் கோணத்தில் பார்க்கப்படுகின்றன. கலங்கரை விளக்கத்தின் உயரம் h மீ. இரு கப்பல்கள் மற்றும் கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதி ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைகின்றன எனில், இரண்டு கப்பல்களுக்கு இடைப்பட்ட தொலைவு 4h/√3 மீ என நிரூபிக்க.



6. 90 அடி உயரமுள்ள கட்டடத்தின் மேலிருந்து ஒளி ஊடுருவும் கண்ணாடிச் சுவர் கொண்ட மின் தூக்கியானது கீழ் நோக்கி வருகிறது. கட்டடத்தின் உச்சியில் மின் தூக்கி இருக்கும்போது பூந்தோட்டத்தில் உள்ள ஒரு நீரூற்றின் இறக்கக்கோணம் 60° ஆகும். இரண்டு நிமிடம் கழித்து அதன் இறக்கக்கோணம் 30° ஆக குறைகிறது. மின்தூக்கியின் நுழைவு வாயிலிருந்து நீரூற்று 30√3 அடி தொலைவில் உள்ளது எனில் மின்தூக்கி கீழே வரும் வேகத்தைக் காண்க. 



விடைகள்:

1. 150 மீ

2. 50 மீ

3. 32.93 மீ

4. 2078.4 மீ

6. 0.5 மீ/நொடி


Tags : Problem Questions with Answer, Solution | Trigonometry கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல்.
10th Mathematics : UNIT 6 : Trigonometry : Exercise 6.3: Problems involving Angle of Depression Problem Questions with Answer, Solution | Trigonometry in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 6 : முக்கோணவியல் : பயிற்சி 6.3 : இறக்கக் கோணக் கணக்குகள் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | முக்கோணவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 6 : முக்கோணவியல்