Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பயிற்சி வினா விடை

வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் | முதல் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் | - பயிற்சி வினா விடை | 7th Social Science : History : Term 1 Unit 2 : Emergence of New Kingdoms in North India

   Posted On :  13.05.2022 02:13 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு -2 : வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

பயிற்சி வினா விடை

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு -2: வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் : புத்தக வினாக்கள் , விடைகள்

பயிற்சி

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. “பிருதிவிராஜ ராசோ' எனும் நூலை எழுதியவர் யார்? 

அ) கல்ஹணர்

ஆ) விசாகதத்தர் 

இ) ராஜசேகரர்

ஈ) சந்த் பார்தை 

விடை : ஈ) சந்த் பார்தை 


2. பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்? 

அ) முதலாம் போஜா

ஆ) முதலாம் நாகபட்டர் 

இ) ஜெயபாலர்

ஈ) சந்திரதேவர் 

விடை : ஆ) முதலாம் நாகபட்டர் 


3. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது? 

அ) மங்கோலியா

ஆ) துருக்கி 

இ) பாரசீகம்

ஈ) ஆப்கானிஸ்தான் 

விடை: ஈ) ஆப்கானிஸ்தான் 


4. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது? 

அ) சிலை வழிபாட்டை ஒழிப்பது. 

ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது. 

இ) இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது. 

ஈ) இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது

விடை : ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது 


II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் ............ ஆவார் 

விடை : தர்ம பாலர் 

2. கி.பி ........ இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர் 

விடை : 712

3. ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ....... ஆவார்

விடை : சிம்மராஜ் 

4. காந்தர்யா கோவில் ...... ல் அமைந்துள்ளது

விடை : மத்தியப் பிரதேசம் 


III. பொருத்துக.

அ  ஆ.

1. கஜுராகோ – அ. அபு குன்று 

2. சூரியனார் கோவில் – ஆ. பந்தேல்கண்ட் 

3. தில்வாரா கோவில் – இ. கொனார்க்

விடைகள் 

ஆ. பந்தேல்கண்ட், இ. கொனார்க்,  அ. அபு குன்று


1. கஜுராகோ – ஆ. பந்தேல்கண்ட்

2. சூரியனார் கோவில் – இ. கொனார்க்

3. தில்வாரா கோவில் – அ. அபு குன்று


IV. சரியா? தவறா? 

1. "ராஜபுத்ர' என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும். 

விடை : தவறு (சமஸ்கிருத வார்த்தை ) 

2. அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விடை : சரி

3. அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.

விடை : தவறு (சமணகோயில்) 

4. ரக்ஷாபந்தன் சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.

விடை : சரி 

5. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அரேபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

விடை : தவறு (அரேபியர்கள் இந்தியரிடமிருந்து கற்றுக் கொண்டனர்) 


V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையைக் டிக் (V) இட்டுக் காட்டவும். 


1. கூற்று : கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.

காரணம் : கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது. 

அ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கமே. 

ஆ)காரணம் கூற்றிக்கான சரியான விளக்கம் அல்ல. 

இ) கூற்று தவறு. காரணம் சரி. 

ஈ) கூற்றும், காரணமும் தவறு.

விடை : ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. 


2. கூற்று :மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்து விரிவுபடுத்த முடியவில்லை .

காரணம் :மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவார். 

அ) | சரி

ஆ) II சரி 

இ) I மற்றும் II சரி

ஈ) | மற்றும் II தவறு 

விடை : இ) I மற்றும் II சரி 


3. கூற்று : இந்தியாவில் இஸ்லாமியக்காலக்கட்டம்கி. பி (பொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை. 

காரணம் : கூர்ஜரப் பிரதிகாரர்கள் அரேபியரைக் கடுமையாக எதிர்த்தனர். 

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே. 

ஆ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல. 

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு. காரணம் சரி

விடை : அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே 


4. கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார். 

காரணம் : ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை. 

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே. 

ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல. 

இ) கூற்று சரி, காரணம் தவறு. 

ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

விடை : இ) கூற்று சரி, காரணம் தவறு 


5, கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும். 

i. 'ரக்க்ஷாபந்தன் என்ற மரபானது ராஜபுத்திரர்களுடையது. 

ii. வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள்

பங்கேற்ற 'ரக்க்ஷாபந்தன்' விழாவைத் தொடங்கினார். 

iii. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

அ) கூற்று சரியானது.

ஆ) கூற்று ii சரியானது. 

இ) கூற்று iii சரியானது.

ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை.

விடை : ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை 


VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும். 


1. கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக. 

* கூர்ஜரப் பிரதிகாரர்கள், ராஷ்டிர கூடர்கள், பாலர்கள் ஆகிய மூவரும் வளம் நிறைந்த கன்னோஜியின் மீது தங்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர். 

* இதனால் இவர்களுக்குள் மும்முனைப் போராட்டம் ஏற்பட்டது. 

2. ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக.

பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள், பரமாரர்கள். 

3. பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் கோபாலர் ஆவார். 

4. தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துக்களின் பெயர்களைக் குறிப்பிடுக. 

* அப்பாசித்துகள்

* உமையாத்துகள் 

5. காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக. 

தாஹீர்


VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும். 

1. சிந்துவை அரேபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்) 

* அராபிய அறிஞர்கள் பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர். 

* சமஸ்கிருத மொழியிலிருந்த வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பான பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர். 

* 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக் கொண்டனர். 

* பூஜ்யத்தின் பயன்பாட்டை கற்றுக் கொண்டனர். 

* இந்தியர்களிடமிருந்து சதுரங்க விளையாட்டைக் கற்றுக் கொண்டனர்.


VIII. உயர் சிந்தனை வினா 

1. மாமூது கஜினியின் படையெடுப்பிற்கும் முகமது கோரியின் படையெடுப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை? 

மாமூது கஜினியின் படையெடுப்பு : 

வட இந்தியாவின் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதே மாமூது கஜினியின் நோக்கமாகும். 

முகமது கோரியின் படையெடுப்பு : 

இந்தியாவைக் கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்வதே முகமது கோரியின் நோக்கமாகும்.


2. கண்டுபிடித்து நிரப்புக. -

முதலாம் தரெய்ன் போர்

போர் நடைபெற்ற ஆண்டு : கி.பி 1191

போருக்கான காரணங்கள்: முகமது கோரி தனது பேரரசை விரிவாக்கம் செய்ய விரும்பினார்.

யார் யாரைத் தோற்கடித்தார்கள்? : பிருதிவிராஜ் முகமது கோரியைத் தோற்கடித்தார்.

விளைவு என்ன? :  முகமது கோரி தோற்கடிக்கப்பட்டார்.


இரண்டாம் தரெய்ன் போர்

போர் நடைபெற்ற ஆண்டு : கி.பி 1192 

போருக்கான காரணங்கள்: முகமது கோரி முதல் தரெய்ன்  போரில் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்க விரும்பினார். 

யார் யாரைத் தோற்கடித்தார்கள்? : முகமது கோரி பிருதிவிராஜைத்  தோற்கடித்தார். 

விளைவு என்ன? :  பிருதிவிராஜ் தோற்கடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.


IX. மாணவர் செயல்பாடு 

வார்த்தைத் துளிகள்: 

இவ்வார்த்தைகள் பற்றி மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதை மாணவர்கள் விவாதிக்க வேண்டும்; குறிப்பும் எழுத வேண்டும். 




X. வரைபட வினா 

இந்திய ஆறுகள் வரைபடத்தில் பிரதிகாரர்கள், சௌகான்கள், பாலர்கள், பரமாரர்கள் ஆண்ட பகுதிகளைக் குறிப்பிடுக. (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்) 



XI. கட்டக வினாக்கள்

1. மாமூது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட பஞ்சாபின் ஷாகி வம்ச அரசர் யார்?  

விடை : ஜெயபாலர்


2. ராஜபுத்திர ஓவிய பாணிகள் .......என்று அழைக்கப்படுகின்றன. 

விடை : ராஜஸ்தானி 


3. ராஜபுத்திரக் குலங்கள் எத்தனை இருந்தன?

விடை : 36


4. இந்தியாவில் முதல் இஸ்லாமியப் பேரரசை உருவாக்கியவர் யார்?

விடை : முகமது கோரி 


5. டெல்லியின் முதல் சுல்தான் யார்?

விடை : குத்புதீன் ஐபக்


6. மெக்கா எங்குள்ளது? 

விடை : அராபியா


XII. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

ராஜபுத்திர அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோவில்களின் படங்களைக் கொண்டு ஒரு செருகேட்டினை (ஆல்பம்) தயார் செய்யவும்.


Tags : Emergence of New Kingdoms in North India | Term 1 Unit 2 | History | 7th Social Science வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் | முதல் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் |.
7th Social Science : History : Term 1 Unit 2 : Emergence of New Kingdoms in North India : Exercises Questions with Answers Emergence of New Kingdoms in North India | Term 1 Unit 2 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு -2 : வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் : பயிற்சி வினா விடை - வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் | முதல் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் | : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு -2 : வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்